தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்தியா சர்வதேச திரைப்பட விழாவிற்கு திரைத் தொலைக்காட்சி மற்றும் ஒலி-ஒளி தொடர்புக்கான சர்வதேச கவுன்சில் (ஐ.சி.எப்.டி.-யுனெஸ்கோ) ஃபெல்லினி பதக்கத்தை அறிவித்துள்ளது
இந்தியா சர்வதேச திரைப்பட விழா அதன் புகழ் மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை அடுத்து திரைத் தொலைக்காட்சி மற்றும் ஒலி-ஒளி தொடர்புக்கான சர்வதேச கவுன்சில் ஃபெல்லினி பதக்கத்தை வழங்கவுள்ளது. இதனை இந்த அமைப்பின் தலைமை இயக்குனர் ஜார்ஜ் டுபாண்ட் கோவாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பின் போது இந்த அமைப்பின் திட்ட மேலாளர் ஜூயுவான் ஹூன் உடனிருந்தார்.
இந்தியா சர்வதேச திரைப்பட விழா 50 ஆண்டுகளாக நடைபெறுவதை அறிந்து தாங்கள் மகிழ்ச்சியடைவதாக டுபாண்ட் தெரிவித்தார். இந்த அமைப்பு கலங்கரை விளக்கமாக உள்ளது என்றும், உலகின் பிற பகுதிகளுக்கு இந்த ஒளியைப் பரப்ப வேண்டுமென்றும் அவர் கூறினார்.
திரைப்படங்கள் மிகவும் தீவிரத்தன்மையைப் பெற்றுள்ளன என்றும், உண்மையில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் இவற்றின் மூலம் காண முடிகிறது என்றும் தங்களின் சூழல்களைக் காணாமல் இருந்து விட முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அமைதியை உருவாக்குதல், இளைஞர்களிடம் படைப்பாக்கத் திறனை ஊக்குவித்தல், திரைப்படத்திற்கு எல்லையில்லா வாய்ப்பைக் கண்டறிதல் என்ற 3 இலக்குகளை அடைவதற்காக அடுத்த ஆண்டு அமைப்பு ஒன்று உருவாக்கப்பட உள்ளது என்று ஜூயுவான் ஹூன் தெரிவித்தார். இந்த அமைப்பில் ஐ.சி.எப்.டி.-இந்திய சர்வதேச திரைப்பட விழா அமைப்பு இடையே மேலும் பல திட்டங்களை மேம்படுத்துவது குறித்து தாங்கள் மகிழ்ச்சியடைவதாக அவர் கூறினார்.
பள்ளிகள் நிலையில் கல்வியோடு சேர்த்து திரைப்படங்கள் தயாரிப்பதையும் மேம்படுத்துவது அமைதிக்கு வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
*********
(வெளியீட்டு அடையாள எண்: 1593906)
வருகையாளர் எண்ணிக்கை : 226