பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், உணவு பதன தொழில்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
பெண் தொழில் முனைவோருக்கான தேசிய இயற்கை உணவுத் திருவிழாவை நிஃப்டெம் நடத்த உள்ளது
प्रविष्टि तिथि:
27 NOV 2019 1:34PM by PIB Chennai
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், உணவு பதன தொழில்துறை அமைச்சகத்துடன் புதுதில்லியில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிரிதி சூபின் இரானி, உணவு பதன தொழில்கள் துறை அமைச்சர் திருமதி. ஹர் சிம்ரத் கவுர் பாதல் ஆகியோர் முன்னிலையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு.ரவீந்திர பன்வார், உணவு பதன தொழில்கள் துறை செயலாளர் திருமதி. புஷ்பா சுப்பிரமணியம் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திருமதி. ஸ்மிரிதி இரானி, இயற்கை வேளாண்மையில் மகளிர் தொழில் முனைவோரை மேம்படுத்த கைகொடுத்திருப்பதற்கு உணவு பதன தொழில்கள் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் முத்ரா, தொடங்குக இந்தியா போன்ற நிதி சார்ந்த அரசின் திட்டங்களோடு மகளிர் தொழில் முனைவோரை இணைப்பதற்கும் உதவும் என்றார். இதன் மூலம் உலகச் சந்தையில் போட்டியிடுவதற்குத் தேவையான உடன்பாடு எட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தை அடுத்து மகளிர் தொழில் முனைவோருக்கான தேசிய இயற்கை உணவு விழாவிற்கான நிதி உணவு தொழில்நுட்ப தொழிற்சாலை மற்றும் நிர்வாகத்திற்கான தேசியக் கல்விக் கழகத்தின் (நிஃப்டெம்) துணை வேந்தருக்கு மாற்றப்படும். இந்த உணவுத் திருவிழாவை உணவு பதன தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் ஹரியானா, சோனேபட், கண்ட்லி ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இயற்கை வேளாண் உற்பத்தி அதிகரிக்கும், வாங்குவோருக்கும், விவசாயிகள் மற்றும் இந்திய மகளிர் தொழில் முனைவோருக்கும் இணைப்பு ஏற்படுவதால் நிதி சார்ந்த பலம் ஏற்படும். இந்த விழாக்கள் முடிந்தபின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் விடுவிக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தியது குறித்த சான்றிதழை நிதியாண்டு முடிவின் போது நிஃப்டெம் துணை வேந்தர் சமர்ப்பிப்பார்.
***
(रिलीज़ आईडी: 1593818)
आगंतुक पटल : 165