PIB Headquarters
விமானங்களின் புறப்பாடு குறித்த தகவல்களை பயணிகள் தெரிந்துகொள்ள புதிய போர்டிங்கேட் மேலாண்மை முறை - சென்னை விமான நிலையத்தில் அறிமுகம்
Posted On:
19 NOV 2019 5:33PM by PIB Chennai
சென்னைக்கு முதல் முறையாக வந்திருந்த இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் திரு அர்விந்த் சிங், சென்னை விமான நிலையத்தில், விமானங்களின் புறப்பாடு குறித்த தகவல்களை பயணிகள் உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கு வசதியாக செயல்படும் புதிய போர்டிங்கேட் மேலாண்மை முறையை துவக்கிவைத்தார்.
இந்த புதிய அமைப்பு, விமானத்தில் ஏறுவதற்காக பயணிகள் செல்லும் போர்டிங்கேட்டிலேயே விமானங்கள் புறப்படும் நேரம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் அறிவிப்பதற்கு விமான நிலைய ஊழியர்களுக்கு வசதியாக இருக்கும். மேலும், விமான நிறுவனங்கள் மற்றும் விமான இயக்க கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை இந்த அமைப்பு உறுதி செய்யும். விமானங்களின் புறப்பாடு குறித்த உடனடி தகவல்களும் பயணிகளுக்குப் பயனளிக்கும்.
இதுபோன்ற அமைப்பு இந்திய விமான நிலைய ஆணையத்தின் விமான நிலையங்களில் சென்னையில்தான் முதன் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதர விமான நிலையங்களுக்கும் இந்த அமைப்பு விரிவுப்படுத்தப்படும் என்றும் சென்னை விமான நிலையத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*************
(Release ID: 1592233)