PIB Headquarters
காலாவதியான அஞ்சலகக் காப்பீட்டுப் பாலிசிகளைப் புதுப்பித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு
प्रविष्टि तिथि:
18 NOV 2019 12:36PM by PIB Chennai
அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டிற்கான கடைசியாக செலுத்தப்பட்ட தேதியிலிருந்து தொடர்ச்சியாக ஐந்தாண்டுகள் பிரீமியம் செலுத்தப்படாத பாலிசிகள் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு விதிகளின்படி 01.01.2020 அன்று / அதற்குப் பிறகு புதுப்பிக்கும் தகுதியை இழந்து விடுகின்றன. இருப்பினும், இத்தகைய பாலிசிகளை புதுப்பிக்க ஒருமுறை வழங்கும் வாய்ப்பு நடவடிக்கையாக, நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பற்காக மருத்துவச் சான்றிதழ் அளிக்கப்பட்டால், 31.12.2019 வரை புதுப்பித்துக் கொள்ளலாம். இத்தகைய பாலிசிகளை வைத்திருப்பவர்கள் காப்பீட்டுப் பயன்களைப் பெறுவதற்கு அருகில் உள்ள எந்த அஞ்சலகத்திலும் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பம் அளிக்கலாம்.
31.12.2019-க்கு பிறகு இத்தகைய பாலிசிகள் புதுப்பிக்கப்பட மாட்டாது. மேலும் இவை காலாவதியானவையாகக் கருதப்பட்டு விதிகளின்படி, ரத்து செய்யப்படும் என அஞ்சல் துறையின் தாம்பரம் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
*************
(रिलीज़ आईडी: 1591918)
आगंतुक पटल : 110
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English