பிரதமர் அலுவலகம்

அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பராமரிக்க வேண்டும் என அயோத்தி தீர்ப்பு குறித்து பிரதமர் வேண்டுகோள் தீர்ப்பை வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்கக் கூடாது எனக் கூறுகிறார்

Posted On: 09 NOV 2019 2:07PM by PIB Chennai

அயோத்தி தீர்ப்பை அடுத்து, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுமாறு பிரதமர் திரு.நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

”அயோத்தி பிரச்சினையில் உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பை யாருக்கும் வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்கக்கூடாது. ராம் பக்தியாகவோ அல்லது ரஹீம் பக்தியாகவோ இருந்தாலும் தேசப்பக்தியை வலுப்படுத்துவது அவசியமாகும். அமைதியும், நல்லிணக்கமும் பெருகட்டும்.

 உச்சநீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஏனெனில்: சட்ட நடைமுறைகளின்படி, எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதனை சுமூகமாகத் தீர்க்க முடியும். நமது நீதித்துறையின் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை அது உறுதிப்படுத்தியுள்ளது. சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம் என்பதை இது தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.

பல ஆண்டுகளாக நீடித்த ஒரு பிரச்சினையை நீதித்துறையின் அறைகள் சுமூகமாக முடித்து வைத்துள்ளன. ஒவ்வொரு தரப்பும் தத்தம் கருத்துக்களை எடுத்துரைக்க உரிய காலமும், உரிய நேரமும், வாய்ப்பும் வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும்.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, 130 கோடி இந்தியர்கள் அமைதியை பராமரித்திருப்பது அதில் இந்தியாவின் உள்ளார்ந்த ஈடுபாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஒற்றுமையின் எழுச்சியும், ஆற்றலும், நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கட்டும். ஒவ்வொரு இந்தியரும், அதிகாரம் பெற்றவர்களாகட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

             ******



(Release ID: 1591310) Visitor Counter : 136