PIB Headquarters

சென்னை விமான நிலையத்தில் ரூ.9.53 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்

Posted On: 04 NOV 2019 5:24PM by PIB Chennai

கடந்த சனிக்கிழமை, கோலாலம்பூருக்குச் செல்ல சென்னை விமான நிலையத்துக்கு வந்த தமீம் அன்சாரி என்ற 26 வயது இளைஞர் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடியதையடுத்து, அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரிடம் 13,500 அமெரிக்க டாலர்கள்  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  பறிமுதல் செய்யப்பட்ட டாலர்களின் மதிப்பு ரூ.9.53 லட்சமாகும். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


(Release ID: 1590303)
Read this release in: English