மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

கால்நடைப் பராமரிப்பு & பால்வளத் துறை கால்நடைகளின் எண்ணிக்கை குறித்த 20-ஆவது கணக்கெடுப்பை வெளியிட்டுள்ளது

Posted On: 16 OCT 2019 6:26PM by PIB Chennai

மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகத்தின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை கால்நடைகளின் எண்ணிக்கை பற்றிய 20 ஆவது கணக்கெடுப்பு அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.  இந்தக் கணக்கெடுப்பு அரசுக்கு மட்டுமல்லாமல் விவசாயிகள், வணிகர்கள், தொழில் முனைவோர், பால் பண்ணைத் தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் பொதுமக்களுக்கு பெரிதும் பயன்படக்கூடியதாகும். 

 

20 ஆவது கால்நடைகள் கணக்கெடுப்பை 80,000-க்கும் மேற்பட்ட களப் பணியாளர்கள் நாடுமுழுவதும் மேற்கொண்டனர்.   இவர்களில் பெரும்பாலோர் கால்நடைப் பராமரிப்பு துறையினர் மற்றும் துணைப் பணியாளர்கள் ஆவார்கள்.  இந்தக் கணக்கெடுப்பின்படி, கால்நடைகளின் மொத்த எண்ணிக்கை 535.78 மில்லியனாக உயர்ந்துள்ளது.  இது 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் காட்டப்பட்ட எண்ணிக்கையை விட, 4.6 சதவீதம் அதிகமாகும். 

********


(Release ID: 1588331) Visitor Counter : 404


Read this release in: Bengali , English , Hindi