PIB Backgrounder
வீட்டு வசதிக் கடன், வாகனக் கடன், குறு-சிறு நடுத்தரத் தொழில்களுக்கான கடன் ஆகியவற்றின் வட்டி விகிதங்களை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி குறைத்துள்ளது- இது 01.11.2019-லிருந்து அமலுக்கு வரும்
இடுகை இடப்பட்ட நாள்:
10 OCT 2019 4:44PM by PIB Chennai
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் அளவுக்குக் குறைக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வீட்டுவசதி, வாகனங்கள், கல்வி, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஆகியவற்றுக்கான வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அளவுக்குக் குறைத்துள்ளது. திருத்தப்பட்ட ரெப்போவோடு இணைந்த வட்டி விகிதம் 8.25 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது 01.11.2019-லிருந்து அமலுக்கு வரும்.
முன்னதாக, இந்தப் பிரிவுகளுக்கான கடன்களை 01.10.2019-லிருந்து ரெப்போவோடு இணைந்த வட்டி விகிதமாக மாற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அனுமதி அளித்திருந்தது.
***********
(வெளியீட்டு அடையாள எண்: 1587719)
வருகையாளர் எண்ணிக்கை : 133