PIB Headquarters

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் ரத்த தான முகாம்

Posted On: 23 AUG 2019 11:36AM by PIB Chennai

நாட்டின் 73-வது சுதந்திர தினத்தையொட்டி,  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்னை (கிழக்கு) ரோட்டரி சங்கத்துடன் இணைந்து  சென்னையில்  ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது.  அண்மையில் நடைபெற்ற இந்த முகாமை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு.கர்ணம் சேகர் தொடங்கி வைத்தார்.  வங்கியின் செயல் இயக்குநர் திரு அஜய்குமார் ஸ்ரீவஸ்தவா மற்றும் அனைத்து பொது மேலாளர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

     ரோட்டரி சங்கத்தலைவர் திரு  டி ஆர் கோபாலகிருஷ்ணன் மற்றும் முன்னாள் தலைவர் திரு எம் ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  சுமார் 200-க்கும் மேற்பட்ட வங்கிப் பணியாளர்கள், இந்த முகாமின் போது ரத்த தானம் அளித்தனர்.

ரத்த தான முகாமைத் தொடங்கி வைத்துப் பேசிய, வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு கர்ணம் சேகர், எந்த வகையான சமூக சேவையாக இருந்தாலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அதில் முன்னோடியாக திகழும் என்றார். அத்துடன்  தனது சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர், இது போன்ற பணிகள் எப்போதும் தொடரும் என்றும் தெரிவித்தார்.

 

 

**** 

 


(Release ID: 1582699) Visitor Counter : 140


Read this release in: English