PIB Headquarters
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
Posted On:
05 AUG 2019 4:36PM by PIB Chennai
சென்னை, ஆகஸ்ட் 5, 2019
மழைநீரை சேகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை சார்பில், சென்னையில் இன்று மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. சென்னை பெசன்ட் நகர், ராஜாஜி பவனில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் தென்மண்டல தலைமையகம் சார்பில் நடைபெற்ற இந்த மழைநீர் சேகரிப்பு (ஜல்சக்தி அபியான்) சைக்கிள் பேரணியை, தமிழக காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் திரு. சந்தீப் ராய் ரத்தோர், தொழிலக பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி. திரு. ஜி.எஸ்.ஆர். ராஜு மற்றும் அரிமா சங்க (லயன்ஸ் கிளப்) நிர்வாகிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் பெண் பணியாளர்கள் உள்ளிட்டோர் இந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்று, மழைநீரை சேரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைத்தனர்.
******
(Release ID: 1581286)
Visitor Counter : 127