PIB Headquarters
இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்தின் பிராந்திய இயக்குனராக திரு. சுவாமி பொறுப்பேற்பு
Posted On:
01 AUG 2019 11:27AM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் பிராந்திய இயக்குனராக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு, திரு.எஸ்.எம்.என். சுவாமி பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பு, திருவனந்தபுரத்தில் பிராந்திய இயக்குனராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய இவர், திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் வர்த்தகப் பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றவர். 1990-ல் நேரடி அதிகாரியாக ரிசர்வ் வங்கியில் சேர்ந்த திரு சுவாமி, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், மும்பை அலுவலகங்களில் உயர் பொறுப்புகளை வகித்துள்ளார்.
இவர், ரூபாய் நோட்டு நிர்வாகம், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களைக் கண்காணிப்பது, மும்பை ரிசர்வ் வங்கி மைய அலுவலகத்தில் வங்கி கண்காணிப்பு போன்ற பல பிரிவுகளில் நீண்ட கால அனுபவம் உடையவர். பாரிஸ், லண்டன், பேசல், சிங்கப்பூர், வாஷிங்டன் ஆகிய இடங்களில் நடைபெற்ற சர்வதேச வங்கிக் கருத்தரங்குகளிலும் பங்கேற்றுள்ளார்.
*****
(Release ID: 1580981)