ஜல்சக்தி அமைச்சகம்
2.5 லட்சம் பஞ்சாயத்துகளுக்கு திறன் வலுப்படுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டது
Posted On:
27 JUL 2019 3:12PM by PIB Chennai
குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையின் திறன் வலுப்படுத்தும் முன்முயற்சி திட்டத்தை ஜல்சக்தித் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று (27.07.2019) ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கி வைத்தார். இந்த முன்முயற்சியின் மூலம் தொடக்கத்தில் 2,800 களப்பணியாளர்கள் பயிற்சி பெறுவார்கள். இவர்கள் நாடுமுழுவதும் உள்ள சுமார் 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
தூய்மை இந்தியா இயக்கத்தின்கீழ், கிராமங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலையை உருவாக்குவதும், திட மற்றும் திரவக் கழிவுகளை நிர்வகிப்பதும், பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவதும் இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.
ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜல்சக்தித் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்துடன், இணையமைச்சர் திரு ரத்தன்லால் கட்டாரியா, ஜார்க்கண்ட் முதலமைச்சர் திரு ரகுபர்தாஸ், மாநிலக் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சர் திரு ராம்சந்திர சஹிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
***********
(Release ID: 1580556)
Visitor Counter : 156