PIB Backgrounder

சென்னை விமான நிலையம் அரசுப் பள்ளிகளில் அமைத்துள்ள சிறு அறிவியல் மையங்கள்

प्रविष्टि तिथि: 26 JUL 2019 3:05PM by PIB Chennai

25.07.2019: பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு எனும் பின்பற்றத்தக்க நிலைப்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் முகமாக, சென்னை விமான நிலையம், சம்பாவனா என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து, இந்திய விமான நிலைய பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின்கீழ், சென்னை விமான நிலையத்திற்கு அருகேயுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து அரசும் பள்ளிகளில் சிறு அறிவியல் மையங்களை அமைத்துள்ளது. இந்த அறிவியல் மையங்களை இம்மாதம் 23, 24-ஆம் தேதிகளில் சென்னை விமான நிலைய இயக்குநர் திரு. எஸ். ஸ்ரீகுமார் திறந்து வைத்தார். வறுமையால் வாடும்  பெருவாரியான பள்ளிக் குழந்தைகள் பயனடையும் வகையில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தும், அவர்களைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தும், கல்வித் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) தரத்தை மேம்படுத்துவதே ரூ.35.68 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

     தாம்பரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி; குரோம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, அஸ்தினாபுரம் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, கவுல்பஜார் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகள் பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

பாடத்திட்டத்தில் செயல்முறை விளக்கங்களாலும், தரமான கல்வியை வழங்குவதாலும், ஆர்வத்தை தூண்டுதல் மூலமாகவும், மாணவர்களுக்கான அடிப்படை அறிவியல் கோட்பாடுகளை எளிமைப்படுத்துவதால், சிறு அறிவியல் மையங்கள் பள்ளிகளில் சிறந்த முறையில் செயல்படுகின்றன.

கிராமப்புற இந்தியாவில், வறுமையால் வாடும் குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் நோக்கத்தோடு, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றின் அடிப்படை கோட்பாடுகளோடு, அதற்கான கல்விமுறை வடிவமைக்கப்பட்டது என்று சென்னை விமான நிலைய ஆணையகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

******


(रिलीज़ आईडी: 1580391) आगंतुक पटल : 148
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English