PIB Backgrounder
இதழியலில் சிறப்பாக பணியாற்றியோருக்கு 2019ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
प्रविष्टि तिथि:
17 JUL 2019 3:54PM by PIB Chennai
இதழியலின் அச்சுத்துறையில் நம் நாட்டைச் சேர்ந்த இதழியலாளர்களின் / புகைப்படக்கலைஞர்களின் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இதழியலாளர்கள், சுயேச்சையான பங்களிப்பாளர்கள் ஆகியோரிடமிருந்து தேசிய விருதுக்கான விண்ணப்பங்களை இந்திய பிரஸ் கவுன்சில் வரவேற்கிறது. இதற்கான கடைசி நாள் 30.08.2019 ஆகும்.
இதழியலின் அச்சுத்துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றியோருக்கு தேசிய பத்திரிகையாளர் தினமான நவம்பர் 16 அன்று தேசிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
இந்திய பிரஸ் கவுன்சில் அமைத்துள்ள 8 வகையான விருதுகள் ரொக்க பரிசு, பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றைக் கொண்டவையாகும். இதுபற்றிய மேலும் விவரங்களை www.presscouncil.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.
***********
(रिलीज़ आईडी: 1579101)
आगंतुक पटल : 160
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English