பிரதமர் அலுவலகம்

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து 7 பிப்ரவரி, 2018 அன்று மாநிலங்களவையில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 07 FEB 2018 8:52PM by PIB Chennai

மாண்புமிகு தலைவர் அவர்களே,

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இந்த அவையில் விரிவான விவாதம் நடந்து முடிந்துள்ளது. சுமார் 38 உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். திரு. அமித் பாய் ஷா தமது கன்னிப் பேச்சிலேயே கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். அதற்கு திரு.வினய் சஹஸ்ரபுத்தி-யும் ஆதரவு தெரிவித்துள்ளார். திரு.குலாம் நபி ஆசாத். திரு டி. ராஜா, திரு டி கே ரங்கராஜன் உள்ளிட்ட உறுப்பினர்களும் தத்தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். வேலைவாய்ப்பு, விவசாயிகளின் வருமானம், வெளியுறவுக்கொள்கை, பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உறுப்பினர்கள் தத்தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். திரு.குலாம் நபி ஆசாத்-தின் பேச்சை இந்த அவையிலும்,  மற்ற உறுப்பினர்களின் பேச்சை என் அறையில் இருந்தவாறும் கேட்டேன். திரு.குலாம் நபி ஆசாத் வாரிசு மற்றும் அரசியல் பற்றி பேசியதன் மூலம் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தை காப்பாற்ற முயற்சிப்பது தெரிகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் பற்றி குறிப்பிடும்போது, அமெரிக்கா மற்றும் பிரிட்டனை எடுத்துக்காட்டி பேசியதை        கேட்டேன். இந்தியாவின் சமூக நிலைக்கும், அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் திட்டங்களுக்கும் பெரும்  வேறுபாடு உள்ளது. அங்கு வெற்றி பெற்ற சில திட்டங்கள் இங்கு வெற்றிபெறாது, அங்கு வெற்றிபெறாத வேறுசில திட்டங்கள் இங்கு வெற்றியடையும். எனவே, அது போன்று ஒப்பிடுவது பொருத்தமாக இருக்காது. நமது கண்ணோட்டத்தில் இருந்தபடிதான் நாம் எதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சுமார் 55 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் யதார்த்த நிலை தெரியாமல் போய்விடுவது இயற்கை. நம் நாட்டைப் பொருத்தவரையில் மருத்துவத்துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாக உள்ளது. அதற்காக திரு.குலாம் நபி ஆசாத் சுகாதார அமைச்சராக இருந்தபோது எதுவும் செய்யவில்லை என்று அர்த்தமாகாது. குறைந்தப்பட்சம் முயற்சிகளாவது மேற்கொள்ளப்பட்டிருக்கும். அதன்பிறகு செய்ய வேண்டியது ஏராளமாக இருக்கலாம். இந்தத்திட்டத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும் கூட, இது நாட்டிற்கான மாபெரும் திட்டமாகும். குறிப்பிட்ட எந்தவொரு கட்சிக்காக செயல்படுத்தப்படுவதில்லை.

ஏழை அல்லது குறைந்த, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால், அது அந்த குடும்பத்தின் ஒட்டுமொத்த சேமிப்பையும் காலி செய்வதோடு, சம்பாத்தியமும் இல்லாமல் செய்துவிடும். சில நேரங்களில் அதிக வட்டிக்கு கடன்வாங்கியும் செவழிப்பார்கள். குழந்தைகள் கடனாளியாவதை விரும்ப மாட்டார்கள். அதனால், நோயை தாங்கிக்கொள்ளும் நிலை ஏற்படும். அத்தகைய மனநிலைதான் தற்போது நம்நாட்டில் நிலவுகிறது. யார் இதுபோன்ற பணிகளை மேற்கொள்கிறார்கள். கடந்த 70 ஆண்டுகளில் இதனை செய்யவில்லை என்ற கேள்வி எழக்கூடும். ஆனால் எங்களது சிந்தனை அப்படிப்பட்டதல்ல, இறைவன் எங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளார். இந்த அவையில், அறிஞர்களும், அனுபவசாலிகளும் இருக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

எனவே அனைவரும் ஒருங்கிணைந்து விவாதித்து, ஆயுஷ்மான் பாரத் மூலம், நாட்டில் உள்ள 50 கோடி மக்களின் நல்ல ஆரோக்கியத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த காப்பீட்டுத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in இணையதளத்தை காணவும்

                                    ******* 

 



(Release ID: 1576748) Visitor Counter : 107


Read this release in: English