நிதி அமைச்சகம்

இன்று மத்திய நிதியமைச்சரின் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம்

Posted On: 14 JUN 2019 2:32PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், சமூகத்தின் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்ட பட்ஜெட்டுக்கு முந்தைய ஐந்தாவது ஆலோசனைக் கூட்டத்தை இன்று புதுதில்லியில் நடத்தினார்.

இந்தக் கூட்டத்தை துவக்கி வைத்து பேசிய அமைச்சர், மக்களின் வாழ்க்கைத் தரத்தை தீர்மானிக்கும் காரணியாக விளங்குவது, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமுதாய கட்டமைப்பில் செய்யப்படும் பொது முதலீடுதான் என்றார். உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு, கல்வித் தரத்தை மேம்படுத்துவது, இளைஞர்களின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புகளைப் பெருக்குவது, நோய்களை குறைப்பது, பெண்களுக்கு அதிகாரமளிப்பது, மனித வளத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் தற்போதைய அரசு உறுதியுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சுகாதாரம் (ஆரம்ப சுகாதாரம் மற்றும் பிற சேவைகள், ஆயுஷ் மற்றும் ஆயுர்வேதம்), கல்வி (பள்ளி மற்றும் பல்கலைக்கழக கல்வி, தனியார் மற்றும் பொதுக் கல்வி), சமுதாயப் பாதுகாப்பு (முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள், பட்டியலினத்தவர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இளைஞர்கள்), ஓய்வூதியம் மற்றும் மனித வளம் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் நிதி செயலர், வருவாய் துறை செயலர், செலவீனத் துறை செயலர் உள்ளிட்ட பல அமைச்சகங்களின் செயலர்களும், நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.



(Release ID: 1574611) Visitor Counter : 160


Read this release in: English , Hindi , Marathi