PIB Headquarters
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தென் மண்டல செயல் இயக்குநராக திரு ஆர் மாதவன் பொறுப்பேற்றார்
प्रविष्टि तिथि:
07 JUN 2019 5:23PM by PIB Chennai
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தென் மண்டல செயல் இயக்குநராக திரு ஆர் மாதவன் பொறுப்பேற்றார். தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத் தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து விமான நிலையங்களின் நிர்வாகம், தரமேம்பாடு, வளர்ச்சி ஆகியவற்றை அவர் கவனிப்பார். இந்த விமான நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகள் மற்றும் துறைசார்ந்த அடிப்படைக் கட்டமைப்பு, சேவைகள், நிர்வாகம் ஆகியவற்றை உறுதி செய்யும் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் வணிகவியல் பட்டதாரியான திரு ஆர் மாதவன், திருச்சியில் உள்ள பாரத மிகுமின் நிறுவனத்தில் 1986 ஆம் ஆண்டு தமது பணியைத் துவக்கினார். பின்னர், 1994 ஆம் ஆண்டு சென்னையில் இருந்த தேசிய விமான நிலையங்கள் ஆணையத்தின் தென்மண்டல தலைமையகத்தின் கணக்கு அதிகாரியாக 1994-ல் பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து மும்பை, சென்னை, தில்லி, கொல்கத்தா விமான நிலையங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், புதுதில்லியில் கார்ப்பரேட் தலைமையகத்திலும் பணியாற்றியவர்.
********
விகீ/எஸ்எம்பி/வேணி
(रिलीज़ आईडी: 1573665)
आगंतुक पटल : 255
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English