PIB Headquarters

திருப்பி பெறப்படும் தொகை குறித்த மின்னஞ்சல், குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: வருமானத்துறை எச்சரிக்கை

Posted On: 08 MAY 2019 3:09PM by PIB Chennai

திருப்பிப் பெறப்படும் தொகை குறித்து வருமானவரி செலுத்துவோர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் இணைய இணைப்பு அனுப்பப்படுவதாக சென்னை வருமானவரித் துறை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இது போன்ற மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போலி என்றும், அதனை வருமானவரித்துறை அனுப்பவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் தனிநபர் அடையாள எண், ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல், கடன் அட்டை, பற்று அட்டையின் கடவுச்சொல் தகவல்கள் அல்லது நிதி தொடர்பான தகவல்களையோ, ஆதார் எண், வங்கி வாடிக்கையாளர் அடையாளம், ஏடிஎம் கடவுஎண் ஆகியவற்றை மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது தொலைபேசி மூலம்     வருமானவரித்துறை கேட்பதில்லை. வருமானவரி செலுத்துவோர் தமது முகவரி, வங்கிக் கணக்கு எண் போன்ற தனிநபர் தகவல்களை வருமானவரித் துறையின் இணையதளமான https://www.incometaxindiaefiling.gov.in.   பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இதே இணையதளத்தில் வருமானவரி செலுத்துவோருக்கு துறை மூலம் அனுப்பப்படும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகளின் பட்டியலும் இடம் பெற்றுள்ளது. ஆதலால், வருமானவரி செலுத்துவோர் போலி மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பாமல் எச்சரிக்கையோடு இருக்குமாறு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சென்னை முதன்மை தலைமை வருமானவரி அலுவலகத்தின் கூடுதல் ஆணையர் திருமிகு. ஆர்.இளவரசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

***********


(Release ID: 1571729) Visitor Counter : 150
Read this release in: English