PIB Headquarters

சென்னை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளராக திரு.பி.இளங்கோவன் பொறுப்பேற்பு

Posted On: 26 APR 2019 2:09PM by PIB Chennai

தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தின் புதிய கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக திரு. பி.இளங்கோவன் ஐ.ஆர்.ஏ.எஸ். இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

1999 ஆம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த இந்திய ரயில்வே கணக்குப்பணி (ஐ.ஆர்.ஏ.எஸ்.) அதிகாரியான திரு.பி.இளங்கோவன், ரயில்வே துறையின் பல்வேறு பிரிவுகளில் உயர்பதவி வகித்த பரந்த அனுபவம் உடையவர். மதுரை ரயில்வேக் கோட்டத்தின் மூத்த நிதி மேலாளர், தெற்கு ரயில்வேயின் துணைப் பொது மேலாளர், தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவு, பணிமனை மற்றும் கிடங்கு பிரிவுகளின் துணை நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி  உள்ளிட்ட பல உயர் பொறுப்புகளை வகித்துள்ளார். சென்னை ரயில்வேக் கோட்டத்தின் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு இந்தக் கோட்டத்தின் மூத்த நிதி மேலாளராகப் பணியாற்றினார்.

இதற்கு முன்பு, சென்னை கோட்டத்தின் கூடுதல் கோட்ட மேலாளராக இருந்த திரு. சுனில் பி. சார்டே பெரம்பூர் ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலைக்கு தற்போது மாற்றலாகி சென்றுள்ளார்.


(Release ID: 1571189) Visitor Counter : 233
Read this release in: English