ஆயுஷ்
உலக ஹோமியோபதி தின அறிவியல் மாநாடு இன்று தொடங்கியது
Posted On:
09 APR 2019 4:05PM by PIB Chennai
உலக ஹோமியோபதி தினத்தையொட்டி புதுதில்லியில் நடைபெறும் இரண்டு நாள் மாநாட்டை மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர். வைத்யா ராஜேஷ் கோட்டேச்சா இன்று தொடங்கி வைத்தார். ஹோமியோபதி மருத்துவத்தின் நிறுவனராக கருதப்படும் டாக்டர். கிறிஸ்டியன் ஃப்ரெட்ரிக் சாமுவேல் ஹான்மென் பிறந்த நாள், உலக ஹோமியோபதி தினமாகக் கொண்டாடப்படுகிறது. மத்திய ஹோமியோபதி கவுன்சிலின் ஆளுநர்கள் குழுத் தலைவர் திரு. நிலஞ்சல் சன்யால், திரு. டிரிடான்டி சின்ன ராமானுஜ ஜீயர் ஆகியோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் தொடக்கவுரையாற்றிய டாக்டர் கோட்டேச்சா, ஆயுஷ் துறையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் மூலம், அறிவியல் மற்றும் பாரம்பரியத்திற்கு இடையே நிலவும் இடைவெளியை பூர்த்தி செய்ய தமது அமைச்சகம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை எடுத்துரைத்தார். திட்டமிட்ட ஆராய்ச்சிகள் மூலம் ஹோமியோபதி மருத்துவத்தை காலத்திற்கேற்ப மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் வரவேற்புரையாற்றிய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர் டாக்டர். ராஜ் கே மான்சந்தா, இளையதலைமுறையினர் பயனுள்ள ஆராய்ச்சிகளை மேற்கொள்ளச் செய்வதும், கல்வியை ஆராய்ச்சி மற்றும் பணிப்பயிற்சியுடன் இணைப்பதும் அவசியம் என்றார். இந்த மாநாட்டில் ஹோமியோபதி மருத்துவத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, இளம் அறிவியலாளர் விருது, சிறந்த ஆசிரியருக்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டது.
******
எம்எஸ்வி/எம்எம்/கோமதி
(Release ID: 1570305)
Visitor Counter : 266