PIB Headquarters
மார்ச் 30 மற்றும் 31 ஆம் தேதி வருமான வரி அலுவலகம் வழக்கம் போல் இயங்கும்
Posted On:
29 MAR 2019 4:59PM by PIB Chennai
2018-19 ஆம் நிதியாண்டுக்கான தாமதிக்கப்பட்ட மற்றும் திருத்தம் செய்யப்பட்ட வருமான வரி படிவங்களைத் தாக்கல் செய்ய கடைசி தேதி மார்ச் 31, 2019 ஆகும். இதனை முன்னிட்டு, வரி செலுத்துவோரின் வசதிக்காக மார்ச் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டலத்தில் உள்ள அனைத்து வருமான வரி அலுவலகங்களும் வழக்கமான வேலை நேரத்தில் இயங்கும் என்று சென்னையின் முதன்மை தலைமை வருமான வரி அலுவலகத்தின் கூடுதல் ஆணையர், திருமிகு ஆர் இளவரசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
**********
(Release ID: 1569835)