கனரகத் தொழில்கள் அமைச்சகம்
ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
28 FEB 2019 10:36PM by PIB Chennai
நாட்டில் மின் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கென விரைந்து ஏற்று மின் வாகனங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகளின் செயல்பாட்டுக்கான செயல் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பத்தாயிரம் கோடி ரூபாய் செலவீட்டில் 3 ஆண்டுகளில் முடிக்கப்படவிருக்கும் இத்திட்டம் 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.
நிதித்தாக்கம்
2019-2020 முதல் 2021-2022 வரையிலான மூன்று வருடங்களில் இந்தத் திட்டத்திற்கு மொத்தம் பத்தாயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
----
(வெளியீட்டு அடையாள எண்: 1567059)
வருகையாளர் எண்ணிக்கை : 137