சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

புதுதில்லி சர்வதேச நடுவர் மைய அவசரச் சட்டம் 2019-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 28 FEB 2019 10:46PM by PIB Chennai

சுதந்திரமான தன்னாட்சியோடு கூடிய நிறுவனம் சார்ந்த நடுவர் மன்றத்தை உருவாக்க, புதுதில்லி சர்வதேச நடுவர் மையத்தை அமைப்பதற்கான அவசரச் சட்டப் பிரகடனத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பயன்பாடு

நிறுவனப்படுத்தப்பட்ட நடுவர் மன்றம் அரசு மற்றும் அதன் முகமைக்கும், சர்ச்சைக்குரியத் தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இது நிபுணத்துவத்தின் தரம் மற்றும் பொருட்செலவைப் பொறுத்தவரை பொது நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதோடு  நிறுவனப்படுத்தப்பட்ட நடுவர் மன்றத்திற்கு  இந்தியா ஒரு முக்கிய மையமாக உருவாகும்.

----


(Release ID: 1567043)
Read this release in: English , Urdu