மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

ஆதார் மற்றும் இதர சட்டங்கள் (திருத்தம்) அவசரச் சட்ட 2019 பிரகடனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 28 FEB 2019 10:42PM by PIB Chennai

ஆதார் சட்டம் 2016, பண மோசடி தடுப்புச் சட்டம் 2005, மற்றும் இந்திய தந்திச் சட்டம் 1885 ஆகியவற்றின் திருத்தத்திற்கான  அவசரச் சட்டப்பிரகடனத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி  தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இந்தத்  திருத்தங்கள் 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் தேதியன்று, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் உள்ளபடியே அமைந்துள்ளன.

தாக்கம்

இத்திருத்தங்கள் பொது நலனுக்கும் ஆதாரை தவறான முறையில் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக இந்திய தனித்தன்மை அடையாள ஆணையத்திற்கு வலுவான வழிமுறைகளை வழங்கவும் உதவும்.  இத்திருத்தத்தையடுத்து நாடாளுமன்ற சட்டத்தின்படி அல்லாமல், அடையாள அங்கீகாரம் பெற ஆதார் எண்ணை ஆதாரமாகத் தர எந்த தனி நபரையும் கட்டாயப்படுத்த முடியாது.

               

----



(Release ID: 1567000) Visitor Counter : 97


Read this release in: English