ஆயுஷ்

ஹோமியோபதி மத்திய குழுமம் (திருத்த) அவசர சட்டம், 2019 – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 28 FEB 2019 10:40PM by PIB Chennai

ஹோமியோபதி  மத்திய குழுமம் (திருத்த) அவசர சட்டம், 2019-ன் வரைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, மத்திய குழுமத்தின் காலம் ஓராண்டாக உள்ளது. இந்த ஒப்புதல் மூலம், இதனை இரண்டு ஆண்டு காலமாக மாற்றி அமைத்து, அதில் பணிபுரியும் நிர்வாக குழுவின் செயல் காலமும் மே 17, 2019 முதல் மேலும் ஓராண்டு காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இது ஹோமியோபதி  மத்திய குழுமத்தின் அதிகாரங்களையும் செயல்பாடுகளையும் மேற்கொள்ள உதவும்.

-----


(Release ID: 1566863) Visitor Counter : 170
Read this release in: English