மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
தேசிய மின்னணு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
19 FEB 2019 8:51PM by PIB Chennai
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முன்மொழிந்துள்ள தேசிய மின்னணு கொள்கை 2019-க்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மின்னணு முறை வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதை இந்தக் கொள்கை முன்நிறுத்துகிறது. சிப்செட்டுகள் உள்ளிட்ட முக்கியமான உதிரி பாகங்களை உருவாக்குவதற்கான திறன்களை முடுக்கிவிட்டு, ஊக்குவிப்பதன் வாயிலாகவும், உலகளவில் இந்தத் துறை போட்டியிடும் வகையிலான சூழலை உருவாக்குவதன் மூலமும் இந்த இலக்கு எட்டப்பட உள்ளது.
மின்னணு முறை வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் துறையை உலகளவில் போட்டியிடுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவது, முக்கியமான மின்னணு பாகங்களை உற்பத்தி செய்வதற்கான உதவியையும், நிதியுதவியையும் அளிப்பது, உயர்தொழில்நுட்பம் சார்ந்த பெரிய திட்டங்களுக்கு சிறப்பு உதவிகள் வழங்குவது, புதிய தொழிற்கூடங்களை ஊக்குவிப்பதற்கும், தற்போதுள்ள தொழிற்கூடங்களை விரிவுபடுத்துவதற்கும் பொருத்தமான திட்டங்களையும், உதவிக்கான முறைகளையும் வகுப்பது, மின்னணு துறை சார்ந்த அனைத்து துணை பிரிவுகளிலும் ஆராய்ச்சி வளர்ச்சியையும், புதிய கண்டுபிடிப்புகளையும் மேம்படுத்துவது, தொழில் திறன்களை கணிசமாக மேம்படுத்த ஊக்கத்தொகை வழங்குவது ஆகியவை 2019 தேசிய மின்னணு கொள்கையின் சிறப்பு அம்சங்களாகும்.
*****
(Release ID: 1565449)
Visitor Counter : 108