ஆயுஷ்
2-வது உலக ஒருங்கிணைந்த மருத்துவ மாநாடு 2019, கோவாவில் 23-25 ஜனவரி 2019: ஸ்ரீபத் நாயக் தொடங்கிவைக்கிறார்
Posted On:
20 JAN 2019 11:36AM by PIB Chennai
2-வது உலக ஒருங்கிணைந்த மருத்துவ மாநாடு 2019-ஐ, மத்திய ஆயுஷ் துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. ஸ்ரீபத் யசோ நாயக், தொடங்கிவைக்க உள்ளார். ‘ஹோமியோபதி மருந்துப் பொருட்களை முறைப்படுத்துதல்; சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பிலான இந்த மாநாடு, கோவாவில், 2019 ஜனவரி 23-25 வரை நடைபெறவுள்ளது. ஆயுஷ் அமைச்சகத்திற்குட்பட்ட மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சில் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஹோமியோபதி / பாரம்பரிய மருந்துப் பொருட்கள் விற்பனையில் தொடர்புடைய ஃபிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், ஸ்பெயின், ரஷ்யா, பிரேசில், கியூபா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட், தாய்லாந்து, மலேஷியா, ஓமன், இந்தோனேஷியா, பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மருத்து கட்டுப்பாட்டாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முறைபடுத்தப்பட்ட ஒத்துழைப்புகள், குறைந்தபட்ச கட்டுப்பாடு & சட்ட நடைமுறைகள், பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத்தை மேம்படுத்துதல், தரநிர்ணயம் மற்றும் சிக்கல் குறைப்பு, ஹோமியோபதியை பாரம்பரிய மருத்துவ முறையாக அங்கீகரித்தல் மற்றும் கால்நடை ஹோமியோபதி போன்றவற்றை மையக் கருத்தாகக் கொண்டு இம்மாநாடு நடைபெறவுள்ளது.
*****
(Release ID: 1560651)
|