விவசாயத்துறை அமைச்சகம்
மாநிலங்களிடையே மண்டிகள் இணையவழி மூலம் பணம் செலுத்தும் வசதி – பிரதமரின் இ-நாம் திட்டத்தில் இன்னும் ஒரு மைல்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
10 JAN 2019 3:03PM by PIB Chennai
புத்தாண்டு 2019 –ன் துவக்கத்தில் பிரதமரின் முன்னோடி திட்டமான இ-நாம் திட்டத்தில் (இணையவழி தேசிய வேளாண் சந்தை) இன்னும் ஒரு மைல்கல்லாக மாநிலங்கள் இடையே உள்ள மண்டிகள் இணையவழி மூலம் பணம் செலுத்தும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வேளாண் உற்பத்திச் சந்தைக் குழுக்களுக்கு (APNC) இடையே அல்லது ஒரே மாநிலத்தைச் சேர்ந்த இரு வேளாண் உற்பத்திச் சந்தைக் குழுக்களுக்குள் வர்த்தகம் நடைபெற்று கொண்டிருந்தது. தற்போது முதல் முறையாக உத்தரப்பிரதேசத்தின் பரேலி, இ-நாம் வேளாண் உற்பத்திச் சந்தைக் குழுவின் வர்த்தகரும், உத்தரகாண்ட் ஹல்துவானி இ-நாம் வேளாண் உற்பத்திச் சந்தைக் குழுவின் விவசாயியும் தக்காளி வியாபாரத்தை மேற்கொண்டனர். இதே போல் உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு இடையே இ-நாம் எனப்படும் இணையவழி தேசிய வேளாண் சந்தை மூலம் உருளைக்கிழங்குகள், கத்திரிக்காய் மற்றும் காலிபிளவர் வியாபாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இது சிறந்த சந்தை வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் உற்பத்திக்கு நியாயமான விலையையும் உறுதி செய்கின்றது.
இதுவரை 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களிலிருந்து 585 நெறிபடுத்தப்பட்ட சந்தைகள் இ-நாம்-முடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் மார்ச் 2020-க்குள் கூடுதலாக 415 சந்தைகளை இத்திட்டத்துடன் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1559353)
வருகையாளர் எண்ணிக்கை : 300