வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சாதனைகள் - 2018
Posted On:
31 DEC 2018 3:52PM by PIB Chennai
2018 ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் முக்கிய சாதனைகள் கீழ்வருமாறு:-
34 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களை கொண்டு 3,45,450 சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டன. 2,35,712 குழுக்களுக்கு சுழற்சி நிதியின் மூலம் நிதி உதவி வழங்கப்பட்டது.
நகர்ப்புறத்தில் வாழும் 13 லட்ச ஏழ்மையான இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு, 4.5 லட்ச இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2,332 நகரங்களில் தெருவோரங்களில் விற்பனை செய்யும் நபர்களைக் கண்டறியும் கணக்கெடுப்பு நிறைவு பெற்று, 16,89,564 நபர்கள் கண்டறியப்பட்டு, 8,18,095 நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற தெருவோரங்களில் வாழும் வீடற்ற நபர்களுக்காக 1,776 காப்பகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, 1084 காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.
தீன்தயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் பயனாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டு, 3,55,383 பயனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்புக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 4,67,355 சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
குடிசைப் பகுதிகள் மற்றும் ஏழ்மை தொடர்பான பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், தீன்தயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் அனைவருக்கும் சமமாக வளர்ச்சிக்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு, தனியாக பயிற்சி பெற்ற பின் அதிவேகமான மதிப்பீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திறன் பயிற்சி வழங்கப்பட்ட முறை தரம் குறித்து பயிற்சி பெற்றவர்கள் கருத்து தெரிவிக்கலாம்.
அலகாபாத் வங்கியுடன் இணைந்து பைசா என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.
தீன்தயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து அரசு மின்னணு சந்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நகர்ப்புற வாழ்வாதார மையங்களின் பொருட்களை விற்பது சுலபமாகிறது.
நகர வாழ்வாதார மையங்கள், பிளம்பர், எலக்ட்ரீசியன், தச்சு வேலை செய்வோர், தையல்காரர், பயிற்சியாளர் போன்ற பணிகளை செய்வோரையும், இந்தப் பணிகள் தேவைப்படுவோரையும் இணைக்கும் பாலமாக செயல்படுகின்றன.
பயனாளிகளின் கைபேசி எண்ணை உறுதி செய்ய ஓ.டி.பி. வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
***
வி.கீ/அரவி/ரேவதி
(Release ID: 1558562)
Visitor Counter : 258