நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
2018 சாதனைகள்: நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம்
Posted On:
28 DEC 2018 10:21AM by PIB Chennai
மத்திய அரசின் முக்கிய அமைச்சங்களில் நாடாளுமன்ற விவகரரங்கள் அமைச்சகமும் ஒன்று. நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் நாடாளுமன்றத்தின் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இரு அவைகளுக்கும் இடையே பாலமாக செயல்படும் இந்த அமைச்சகம், நாடாளுமன்றத்தில் அரசு சார்ந்த நடவடிக்கைளை மேற்கொள்ளவும் உதவுகிறது. 2018-ஆம் ஆண்டை மையமாகக் கொண்டு 2014-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற விவகரரங்கள் அமைச்சகம் புரிந்த சாதனைகளின் விவரங்கள்:
சட்டமன்ற விவகாரங்களைப் பொறுத்தவரை, 16வது நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவையில் 7 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு, 189 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மக்களவையில் 204 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு, 145 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மொத்தமாக 171 மசோதாக்கள் சட்டமாக இயற்றப்பட்டன.
ஜனவரி 1, 2018 முதல் நவம்பர் 30, 2018 வரை நாடாளுமன்றத்தில் சட்டமன்ற விவகாரங்களைப் பொறுத்தவரை, மாநிலங்களவையில் ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, 17 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மக்களவையைப் பொறுத்தவரை 30 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, 30 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. மொத்தமாக 30 மசோதாக்கள் சட்டமாக இயற்றப்பட்டன.
16-ஆவது மக்களவை சிறப்பு குறிப்பீடுகளைப் பொறுத்தவரை 295 நிலுவையில் உள்ளன. 78 சிறப்பு குறிப்பீடுகளுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
377 சட்ட விதியைப் பொறுத்தவரை 295 சிறப்பு குறிப்பீடுகள் நிலுவையில் உள்ளன. 78 சிறப்பு குறிப்பீடுகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மே 2014 முதல் 31 டிசம்பர், 2017 வரை அமைச்சகம் ஒவ்வொரு அமர்வுக்கு முன்பும் 13 சந்திப்புகளை நடத்தியது. ஜனவரி 1, 2018 முதல் டிசம்பர் 2018 வரை , 3 சந்திப்புகளை நடத்தியுள்ளது.
மே, 2014 முதல் 31 டிசம்பர் 2017 வரை மத்திய அமைச்சர்/ இணை அமைச்சர் தலைமையில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஐந்து நல்லுறவு பிரதிநிதிகள் குழு பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
நாடாளுமன்ற சட்டம் 1953-ல் நிதி சட்டம் 2018 மூலம் திருத்தும் கொண்டு வந்து மாநிலங்களவை தலைவரின் சம்பளம் ரூ. 1.25 லட்சத்திலிருந்து ரூ. 4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
(மேலும் விவரங்களுக்கு http://www.pib.nic.in இணையதளத்தை பார்க்கவும்)
*****
(Release ID: 1558555)
Visitor Counter : 245