தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

பத்து நாள் இந்திய பனோரமா திரைப்பட விழா: நாளை தொடங்குகிறது

Posted On: 03 JAN 2019 4:57PM by PIB Chennai

நாளை புதுதில்லியில் தொடங்க உள்ள 2019-ஆம் ஆண்டுக்கான இந்திய பனோரமா திரைப்பட விழா ஜனவரி 4 முதல் 13 வரை நடைபெற உள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திரைப்பட விழாக்கள் இயக்குனரகம் இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலர் திரு. அமித் காரே விழாவை துவக்கிவைக்க உள்ளார். 49-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து திரைப்படங்களும் இவ்விழாவில் திரையிடப்படும். 26 முழு நீளத் திரைப்படங்களும், 21 கதை சாரா திரைப்படங்களும் திரையிடப்படும்.

 

திரு ரா. செழியன் இயக்கத்தில் டுலெட், திரு மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள், திருமிகு பிரியா கிருஷ்சாமி இயக்கத்தில் பாரம் ஆகிய தமிழ் திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்படும்.

 

 

***


விகீ/அரவி/வேணி


(Release ID: 1558504)
Read this release in: Bengali , English