பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

குடும்ப நலம் மற்றும் இதர சுகாதார இணைப்புகளுக்கான திட்டத்தை 2017-18 முதல் 2019-20 வரை தொடர அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 02 JAN 2019 4:24PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில் குடும்ப நலம் மற்றும் இதர சுகாதார இணைப்புகளுக்கான ஐந்து திட்டங்களை ஒரே தொகுப்பின் கீழ்  2017-18 முதல் 2019-20 வரையிலான 14-வது நிதிக்குழு காலத்திலும் தொடர  ஒப்புதல் வழங்கப்பட்டது.

செலவினம்

14-வது நிதிக் குழு திட்ட காலமான 2017-18 முதல் 2019-20 வரை இந்த ஒருங்கிணைக்கப்பட்ட திட்டத்திற்கு ரூ.2381.84 கோடி வரை செலவிடப்படும். மத்திய பட்ஜெட் ஆதரவுடன் மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவியோடு இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

தேசிய சுகாதார கொள்கை (என்.எச்.பி.) 2017 வகுத்துள்ள குறிக்கோள்கள் மற்றும் லட்சியங்களையும், நிலைத்த வளர்ச்சி இலக்கு என்ற சர்வதேச கட்டுப்பாட்டையும் எட்டுவதற்கு பட்டியலிடப்பட்டுள்ள  5 திட்டங்களும் மிகவும் முக்கியமானதாகும். நிலையான வளர்ச்சிக்கான லட்சியங்களை அடைவதற்கான சர்வதேச அர்ப்பணிப்புகளுக்கும் இது அவசியமானதாகும்.

100 சதவீத மத்திய அரசு நிதியுதவியுடன் கூடிய மத்திய தொகுப்பின் திட்டங்கள் வருமாறு:

  1. சுவஸ்தா நகரிக் திட்டம்: சுகாதார பிரச்சனைகள் தொடர்பான தகவல்களை பரப்பி மக்களிடையே வயது/பாலினம் மற்றும் இடம் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவது: ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி சரியான வாழ்க்கை முறையை பின்பற்றிட ஊக்குவிப்பது: ஆரோக்கியத்துடன் கூடிய வாழ்க்கை முறையை ஊக்குவிப்பது மற்றும் குடிமக்களுக்களுக்கான உடல்நலத்தை மேம்படுத்துவது. இந்தத் திட்டத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ரூ.1030.15 கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
  2. குடும்ப கட்டுப்பாடுக்கான சாதனங்கள் இலவசமாக விநியோகம்: குடும்ப கட்டுப்பாடுக்கான சாதனங்கள், மாத்திரைகள், பேறு கால சோதனை கருவிகள் இலவசமாக விநியோகம். மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலத்தை மேம்படுத்தி மக்கள் தொகையை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு உதவுவது.
  3. எம்.ஐ.எஸ். திட்டம் தற்போது சுகாதார கணக்கெடுப்பு மற்றும் சுகாதார ஆராய்ச்சி திட்டமாக மாற்றம். மக்கள் தொகை சுகாதாரம், சத்துணவு, குறித்த தரவுகளைதேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு வாயிலாக திரட்டுவது.
  4. குடும்ப கட்டுப்பாடு சாதனங்களை சமூக அளவில் சந்தைப்படுத்துதல். குடும்ப கட்டுப்பாடு சாதனங்களை கவர்ச்சியான பொட்டலங்களில் அடைத்து குறைந்த வருவாய் பிரிவினருக்கு மலிவு விலையில் விற்பது.
  5. மக்கள் தொகை ஆய்வு மையங்கள் (பி.ஆர்.சி.எஸ்.) - மக்கள் தொகை ஆய்வு மையங்கள் குறித்த திட்டத்தை 3-வது தரப்பினரை கொண்டு மதிப்பீடு செய்யவும், குறிப்பாக தொடர்ந்து செயல்படுத்தக் கூடிய மையங்களை கண்டறிவதற்கான ஆய்வு தொடரும்.

********



(Release ID: 1558455) Visitor Counter : 162


Read this release in: English