உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
2018 சாதனைகள்: உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம்
Posted On:
31 DEC 2018 5:20PM by PIB Chennai
மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம், மத்திய அமைச்சர் திருமதி.ஹர்சிம்ரத் கவுர் பாதல் தலைமையின் கீழ் இந்தியாவில் உணவு பதப்படுத்துதல் தொழில் துறையை முன்னின்று எடுத்துச் செல்கிறது. அமைச்சகத்தின் முயற்சிகளினால் இந்தியாவில் 2017-18ம் ஆண்டில் உணவு பதப்படுத்துதல் துறையில் அந்நிய நேரடி முதலீடு 24 சதவீதம் அதிகரித்துள்ளது. முக்கிய சாதனைகள் பற்றிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு :
1. மாபெரும் உணவு பூங்காக்கள்:
நாட்டில், மாபெரும் உணவு பூங்கா திட்டத்தை உணவு பதப்படுத்துதல் துறை செயல்படுத்தி வருகிறது. மத்திய பதப்படுத்துதல் மையத்தில் பொதுவான வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. பண்ணைக்கு அருகில், ஆரம்ப பதப்படுத்துதல் மற்றும் சேமிப்பிற்கான வசதிகள், ஆரம்ப பதப்படுத்துதல் மையங்கள் (பி.பீ.சி.க்கள்) மற்றும் சேகரிப்பு மையங்கள் (சி.சி.க்கள்) என்ற வடிவில் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாபெரும் உணவு பூங்கா திட்டத்திற்காக ரூ.50.00 கோடி நிதியுதவியை இந்திய அரசு அளித்து வருகிறது.
இந்த காலக் கட்டத்தில், ஐந்து மாபெரும் உணவு பூங்காக்கள் துவக்கி வைக்கப்பட்டு, நாட்டின் மொத்த மாபெரும் உணவு பூங்காக்களின் எண்ணிகை 14 ஆக உயர்ந்துள்ளது.
2. உணவு பதப்படுத்துதல் பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல்/விரிவாக்கம் செய்தல் (சி.இ.எப்.பி.பி.சி.) – இத்திட்டத்தின் கீழ் இன்று வரை 134 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
3. ஒருங்கிணைந்த குளிரூட்டி இணைப்பு – ஒருங்கிணைந்த குளிரூட்டி இணைப்பு மற்றும் மதிப்பு கூட்டுதலுக்கான உள்கட்டமைப்பு திட்டத்தினை உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கான அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. உள்-அமைச்சக ஒப்புதல் குழு (ஐ.எம்.ஏ.சி.) 81 திட்டங்களுக்கு அனுமதியளித்துள்ளது.
4. பின்தங்கிய மற்றும் முன்னோக்கிய இணைப்பினை உருவாக்குதல் – இத்திட்டத்தின் கீழ் இன்று வரை 70 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
5. வேளாண் பதப்படுத்துதல் தொகுதிகள் - இத்திட்டத்தின் கீழ் இன்று வரை 33 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தூய்மையை நோக்கி
அக்டோபர் 16 முதல் 31 வரை கடைபிடிக்கப்பட்ட தூய்மைக்கான இருவாரத்தின்போது (ஸ்வச்தா பக்வாடா) தூய்மையாக வைத்திருப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் நாளில் அமைச்சர் தஞ்சாவூர் இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட “கழிவிலிருந்து செல்வம் தொழில்நுட்பம்” என்ற புத்தகத்தினை வெளியிட்டு இயக்கத்தினை துவக்கி வைத்தார்.
கடினமான நேரங்களில் கேரளாவுடன் நின்றது
பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிட அமைச்சகம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. அமைச்சர் உடனடியாக தொழில்துறை பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்தி, மாநிலத்திற்கான நிவாரணப் பணியை ஒருமுகமாக மேற்கொள்ள கேட்டுக் கொண்டார். அமைச்சர் கேரள முதல்வருடன் பேசி, அமைச்சகம் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக வாக்குறுதியளித்தார்.
உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள்
உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த சர்வதேச மாநாடு, தஞ்சாவூரில் உள்ள, இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இம்மாநாட்டில் நம்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பேச்சாளர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். தொழிற்சாலை, கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரிடையே அறிவு பரிமாற்றம் மற்றும் பயனுள்ள விவாதங்கள் நடைபெறவும் மாநாடு வலுவான மேடையை அமைத்துக் கொடுத்தது. இது உணவுத் துறையின் வளர்ச்சியை புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்லும்.
தேசிய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (என்.ஐ.எப்.டி.இ.எம்.) வசதிகளை உருவாக்குதல்:
இந்த ஆண்டு தேசிய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (என்.ஐ.எப்.டி.இ.எம்.), அதன் உள்கட்டமைப்பில் விரிவாக்கம் கண்டது. அதன் திறமைக்கு வலு சேர்க்கும் வகையில், வெப்ப (இன்கூபேஷன்) மையம் மற்றும் உணவு பரிசோதனை ஆய்வகம் ஆகியவை கூடுதலாக சேர்க்கப்பட்டன.
ஆப்ரேஷன் கிரின்ஸ்க்கான வழிமுறைகள்:
2018-19 வரவு செலவு உரையின் போது, தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைகிழங்கு (டி.ஓ.பி.) விநியோகத்தை நிலையாக வழங்கிடவும், எவ்வித விலை மாறுதல் இல்லாமல் ஆண்டு முழுவதும் நாடு முழுவதும் அவற்றை கிடைக்கச் செய்யவும் ரூ.500 கோடி மதிப்பீட்டில் ஆப்ரேஷன் கிரின்ஸ் அறிவிக்கப்பட்டது.
1-800-111175 என்ற கட்டணமில்லா ஊடாடும் குரல் பதிலளிப்பு சேவையினை அமைச்சகம் துவக்கியது. பிரதம மந்திரி விவசாயிகள் சம்படா திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மக்கள் இத்தொலைபேசி எண்ணில் அழைத்து தொடர்புடைய துறையிலிருந்து அவர்களது கேள்விகளுக்கான பதிலை பெற்றுக் கொள்ளலாம்.
சர்வதேச அணுகல்
உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம், பல்வேறு சர்வதேச முயற்சிகளை, சர்வதேச நிகழ்ச்சிகளில் பங்கேற்பு மற்றும் சர்வதேச விருந்தினர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவன பிரதிநிதிகளை அமைச்சகத்தில் பங்கேற்க வைத்ததன் மூலமாக மேற்கொண்டது. இவற்றில் முக்கியமானது, மத்திய அமைச்சர் அக்டோபர் மாதம் பாரீஸில் எஸ்.ஐ.ஏ.எல். துவக்கி வைத்ததாகும். இதைத் தவிர, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் குழுக்கள் அமைச்சரை சந்தித்து உணவு பதப்படுத்துதல் துறையில் முதலீடு மற்றும் பங்கேற்பிற்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினார்கள்.
வரவு-செலவு திட்ட ஒதுக்கீடுகள்:
2018-19 வரவு-செலவுத் திட்டத்தில், உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்திற்கான ஒதுக்கீடு இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டு, ரூ.1400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அழுகக்கூடிய பொருட்களான தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைகிழங்கு (டி.ஓ.பி.) ஆகியவற்றின் விலை ஏற்ற இறக்கங்களுக்குத் தீர்வு காணும் வகையில் ‘ஆப்ரேஷன் கிரின்ஸ்”-க்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திறன் வளர்ப்பு
மனிதவளங்கள் மற்றும் நிறுவனத்திற்கான திட்டம் – திறன் வளர்ப்பு (எஸ்.எச்.ஆர்.ஐ.எஸ்.டீ.) என்ற புதிய துணை திட்டத்தை அமைச்சகம் துவக்கியுள்ளது. இதன் மூலம் 2017-18 முதல் 2019-20 வரை உள்கட்டமைப்பு திறனுக்கு உதவுதல் மற்றும் படிப்பிற்கான பாடத்திட்டத்தை வடிவமைத்தல் ஆகியவற்றுக்காக ரூ.27.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆண்டுதோறும் 1000 மாணவர்கள் பல்வேறு துறைகளில் இலவசமாக திறன் வளர்ச்சியை பெறும் வகையில், பாட்டியாலாவில் பிரதம மந்திரி திறன் மையத்தினை அமைச்சர் துவக்கி வைத்தார்.
****
எஸ்.எஸ்.
(Release ID: 1558392)
Visitor Counter : 495