கலாசாரத்துறை அமைச்சகம்
2015 முதல் 2018 வரை, வெளிநாடுகளிலிருந்து இந்தியாவின் 28 புராதன சிலைகள் மீட்பு
தமிழகத்தை சேர்ந்த 8 சிலைகள் மீட்பு
Posted On:
31 DEC 2018 4:40PM by PIB Chennai
புராதன மற்றும் கலை பொக்கிஷங்கள் சட்டம் 1972-க்கு எதிராக நாட்டிலிருந்து எடுத்துச் செய்யப்பட்ட புராதன சிலைகளை மீட்க, இந்திய தொல்லியல் துறை தொடர்ந்து சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொக்கிஷங்களை வெளிநாடுகளுக்கு சென்று மீட்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 2015 முதல் 2018 வரை, வெளிநாடுகளிலிருந்து இந்தியாவின் 28 புராதன சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
தமிழக பொக்கிஷங்களை பொறுத்தவரை, 8 சிலைகள் மீட்கப் பட்டுள்ளன. இதில் சிங்கப்பூரிலிருந்து உமா பரமேஸ்வரி சிலையும், அமெரிக்காவிலிருந்து மாணிக்கவாசகரின் வெண்கல சிலை, விநாயகரின் உலோக சிலை, சோழர் காலத்தின் ஸ்ரீ தேவி, பார்வதியின் உலோக சிலை, பூதேவி உலோக சிலை, சக்கரதாழ்வாரரின் உலோக சிலை, துர்கை சிலை ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சிலைகள் தமிழ் நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடமும், தில்லியில் உள்ள கலை, கலாச்சார மையத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக என்று மத்திய கலச்சாரம் (தனிப் பொறுப்பு) மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறையின் இணை அமைச்சர் டாக்டர். மகேஷ் ஷர்மா மாநிலங்களவையில் நேற்று தெரிவித்தார்.
(Release ID: 1558077)