நிதி அமைச்சகம்

ஜிஎஸ்டி குழுமத்தின் 31-வது கூட்டத்தில் செய்யப்பட்ட பரிந்துரைகள்

Posted On: 22 DEC 2018 4:45PM by PIB Chennai

ஜிஎஸ்டி குழுமத்தின் 31-வது கூட்டம் இன்று (22.12.2018) புதுதில்லியில் நடந்த போது, கீழ்காணும் கொள்கைப் பரிந்துரைகள் செய்யப்பட்டன.

  1. ஒவ்வொரு வரி தலைப்புக்கும் ஒரு பணப்பதிவேடு இருக்க வேண்டும். ஜிஎஸ்டிஎன் மற்றும் கணக்கு அதிகாரிகளின் ஆலோசனையோடு விதிமுறைகளின் அமலாக்கம் இறுதி செய்யப்படும்.
  2. மத்திய அல்லது மாநில வரி விதிப்பு அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்ட திருப்பியளிக்கும் தொகையை வழங்குவதற்கு ஒற்றை ஆணையத் திட்டம் சோதனை அடிப்படையில் அமலாக்கப்படும்.  இதற்கான விதிமுறைகள் விரைவில் உருவாக்கப்படும்.
  3. கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய முறை சோதனை அடிப்படையில் 01.04.2019-லிருந்து அறிமுகம் செய்யப்படும். 01.07.2019-லிருந்து இது கட்டாயமாக்கப்படும். 
  4. 2017-2018 நிதியாண்டிற்கான கணக்கு தாக்கல் படிவம் ஜிஎஸ்டிஆர்-9, ஜிஎஸ்டிஆர்-9ஏ, சமரச அறிக்கைக்கான படிவம் ஜிஎஸ்டிஆர்-9சி ஆகியவற்றுக்கு 30.06.2019 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  
  5. ஈ-வணிகம் நடத்துவோர் 2018 அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு படிவம் ஜிஎஸ்டிஆர்-8 சமர்ப்பிக்க கடைசி தேதி 31.01.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  6. 2017 ஜூலை முதல், 2018 டிசம்பர் வரையிலான படிவம் ஜிஎஸ்டி ஐடிசி-04 சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 31.03.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  7. 2017 ஜூலை முதல், 2018 செப்டம்பர் வரை மாதங்கள் / காலாண்டுகளுக்கு படிவம் ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-3பி, ஜிஎஸ்டிஆர்-4 ஆகியவற்றை 22.12.2018-க்குப் பின்பு அல்லது 31.03.2019-க்கு முன்பு சமர்ப்பிப்போருக்கு தாமதக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும்.
  8. சிஜிஎஸ்டி (திருத்த) சட்டம் 2018, ஐஜிஎஸ்டி (திருத்த) சட்டம் 2018, யுடிஜிஎஸ்டி (திருத்த) சட்டம் 2018, ஜிஎஸ்டி (மாநிலங்களுக்கு இழப்பீடு) திருத்த சட்டம் 2018 மற்றும் எஸ்ஜிஎஸ்டி சட்டங்களில் தொடர்ந்து செய்யப்பட்ட மாற்றங்கள் 01.02.2019 முதல் அமலுக்கு வரும். 

ஜிஎஸ்டி குழுமத்தின் மேற்கண்ட பரிந்துரைகளின் அமலாக்கத்திற்குத் தேவையான அறிவிக்கைகள் / சுற்றறிக்கைகள் விரைவில் வெளியிடப்படும்.

 

*****

 

 

வி.கீ/எஸ்எம்பி/உமா  



(Release ID: 1557071) Visitor Counter : 164


Read this release in: English , Marathi