பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் எண்ணெய் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் உடன் கலந்துரையாடல்

இடுகை இடப்பட்ட நாள்: 19 DEC 2018 11:29AM by PIB Chennai

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களுடனும், மூத்த அதிகாரிகளும் காணொலி மூலம் கலந்துரையாடினார். அண்மையில் கூடிய மத்திய அமைச்சரவைக் குழுவில் பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் அனைத்து ஏழை குடும்பங்களையும் பயனாளிகளாக சேர்ப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை அடுத்த அமைச்சர்,  அதிகாரிகளுடன் உரையாற்றினார். உஜ்வாலா திட்டத்தை முழு அர்ப்பணிப்புடன் அமல்படுத்த எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் எடுத்த முயற்சியை அமைச்சர் பாராட்டினார். இதுவரை பிரதமர் உஜ்வாலா திட்டத்தின்கீழ் 5.86 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 48 சதவீத பயனாளிகள் பட்டியல் வகுப்பினர் அல்லது பழங்குடியினராக உள்ளது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார். 2014ஆம் ஆண்டில் இந்தியாவில் சமையல் எரிவாயு இணைப்பு சதவீதம் 55 ஆக இருந்தது. இதனை 90 சதவீதமாக உயர்த்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

 

மேலும் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட இந்த முடிவு தொடர்பாக ஏழை குடும்பங்களுக்கு இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, உரிய காலத்தில் திட்டத்தை அமலாக்க செய்யவும் திட்டம் வகுக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார். பிரதமர் வாஜ்பாய் திட்டத்தின் பயனாளிகளுக்கு விரைவாக இணைப்புகளை வழங்க தேவையான கருவிகளை உடனடியாக தயார் செய்யுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

 

                                    **************


(வெளியீட்டு அடையாள எண்: 1556667) வருகையாளர் எண்ணிக்கை : 234
இந்த வெளியீட்டை படிக்க: English , Malayalam