மத்திய அமைச்சரவை

மத்திய அமைச்சரவை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை - நடப்பாண்டு சாதனைகள்

Posted On: 14 DEC 2018 12:38PM by PIB Chennai

03 ஜனவரி 2018

அர்ஜென்டினாவின் போனஸ் அயர்சில் டிசம்பர் 10-13, 2017-ல் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 11-வது அமைச்சக மட்டத்திலான கருத்தரங்கில் இந்தியா மேற்கொண்ட நிலைப்பாட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், அர்ஜென்டினாவின் போனஸ் அயர்ஸ் நகரில் டிசம்பர் 2017-ல் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 11-வது அமைச்சர்கள் மட்டத்திலான கருத்தரங்கில் இந்தியா மேற்கொண்ட நிலைப்பாட்டுக்கும், வர்த்தகத் துறை சமர்ப்பித்த குறிப்புக்கும் செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா-இஸ்ரேல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.

எரிசக்தி துறையில் இந்தியா-இஸ்ரேல் இடையேயான நல்லுறவை மேம்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் உலக தொழில்முனைவோர் மாநாடு 2017- இணைந்து நடத்துவதற்காக இந்தியா - அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவில் உலக தொழில்முனைவோர் மாநாடு 2017-ஐ இணைந்து நடத்துவதற்காக இந்தியா-அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. மாநாட்டை சுமூகமாக நடத்துவதற்காக இருதரப்புக்கும் இடையேயான தளவாடங்கள் மற்றும் இடம் தொடர்பான தேவைகள் உள்ளிட்ட ஒத்துழைப்புக்கான பகுதிகள் மற்றும் பொறுப்புகளை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வரையறுக்கிறது.

இந்தியா-மியான்மர் இடையே நில எல்லையைக் கடப்பதற்கான ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா-மியான்மர் இடையே எல்லைப்பகுதியை கடந்து செல்வது தொடர்பான ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் வசித்துவரும் மக்களுக்கு தாராளமாக சென்றுவரும் வகையில் தற்போது உள்ள உரிமைகளை ஒழுங்குபடுத்தவும், ஒப்புதல் அளிக்கவும் வழிவகை செய்யும். செல்லத்தக்க பாஸ்போர்ட் மற்றும் விசா அடிப்படையில், மக்கள் எல்லைப்பகுதியை கடந்து செல்ல முடியும். இதன்மூலம், இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார மற்றும் சமூக தொடர்புகள் வலுப்படும்.

இந்தியா-பெல்ஜியம் இடையே தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறையில் ஒத்துழைப்புக்கான புரி்ந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

இந்தியாபெல்ஜியம் இடையே தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறையில் ஒத்துழைப்புக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட விவரம், பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பெல்ஜியம் மன்னர் பிலிப், அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு கடந்த நவம்பர் 7, 2017-ல் வந்தபோது, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

இந்தியா மற்றம் இத்தாலி இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கூட்டுறவிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்து மத்திய அமைச்சரவையிடம் எடுத்துரைக்கப்பட்டது
 

பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நடைபெற்ற மத்திய அமைச்சரவையிடம், இந்தியா மற்றம் இத்தாலி இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கூட்டுறவிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுதில்லியில் 2017, அக்டோபர் 30 அன்று கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில், இந்திய அரசு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், செயலர், திரு.ஆனந்த் குமார் மற்றும் இந்தியாவிற்கான இத்தாலிய தூதர் மேதகு திரு. லோரன்சோ ஏஞ்ஜனோலி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்தியாவில் மக்கள் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் இங்கிலாந்தின் “லண்டனுக்கான போக்குவரத்து” என்ற சட்டமுறை ஆணையத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, இந்தியாவில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும் இங்கிலாந்தின் பெருநகர லண்டன் அதிகார சட்டம் 1999ன் கீழ் ஏற்படுத்தப்பட்ட சட்டமுறை ஆணையமான லண்டனுக்கான போக்குவரத்துஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடவும், செயல்படுத்திடவும் ஒப்புதல் வழங்கியது.

பிலாஸ்பூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் ஸ்வாஸ்த்ய சுரக்ஷா திட்டத்தின் கீழ் (பி.எம்.எஸ்.எஸ்.ஒய்.) (இமாச்சல பிரதேசம்), பிலாஸ்பூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட தனது ஒப்புதலை வழங்கியது. இத்திட்டத்திற்கான செலவு ரூ.1351 கோடியாகும்.

பெருந்துறைமுகங்களில் அரசு-தனியார் பங்களிப்பு திட்டங்களுக்கான திருத்தப்பட்ட மாதிரி சலுகை ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையின் கீழ் கூடிய மத்திய அமைச்சரவை, துறைமுகங்கள் துறையில், பெருந்துறைமுகங்கள் மேலும் முதலீடுகளை கவரும் வண்ணமும், முதலீட்டிற்குகந்த சூழ்நிலையை உருவாக்கும் வகையிலும், மாதிரி சலுகை ஒப்பந்தத்தில் (எம்.சி.ஏ.) மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு ஒப்புதல் வழங்கியது.

ஹால்தியா-வாரணாசி நீர்வழிப்பாதையில் போக்குவரத்தை அதிகரிப்பதற்கான மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுதில்லியில் ஜனவரி 3-ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவின் முதலாவது தேசிய நீர்வழிப் பாதையில் போக்குவரத்தை அதிகரிப்பதற்கான மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. இத்திட்டம் ரூ.5369.18 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான தொழில்நுட்ப உதவிகளையும், முதலீட்டு ஆதாரங்களாக உலக வங்கி வழங்கவுள்ளது. இது 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

10 ஜனவரி 2018

அறிவியல், தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்புக்கு இந்தியா, கனடா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அறிவியல், தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்புக்கு இந்தியா, கனடா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு (MoU) ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தியா மற்றும் கனடாவில் உள்ள கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி & மேம்பாட்டு நிறுவனங்களுக்கு இடையே அறிவியல் ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் வகையிலும், அதற்கான நடைமுறைகளை உருவாக்கும் வகையிலும் இந்த ஒப்பந்தம் இருக்கும்.

 

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் குரூப் `ஏ’ நிர்வாக நிலை பொறுப்பை மறு ஆய்வு செய்ய அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் (CISF) குரூப் `நிர்வாக நிலை பொறுப்பை மறு ஆய்வு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் சி.ஐ.எஸ்.எப்-ல் மூத்த பணி நிலைகளில் மேற்பார்வை அலுவலர் பணியிடங்களை அதிகரிக்கும் வகையில் உதவி கமாண்டண்ட் முதல் கூடுதல் தலைமை இயக்குநர் வரையிலான பல்வேறு அந்தஸ்துகளில் 25 பணியிடங்கள் உருவாக்கப்படும்.

 

 

துங்கபத்ரா எஃகு பொருட்கள் லிமிடெட் நிறுவனத்தை மூடும் CCEA முடிவை அமல் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் துங்கபத்ரா எஃகு பொருட்கள் லிமிடெட் (TSPL) நிறுவனத்தை மூடும் CCEA முடிவை அமல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் அசையா சொத்துகளை விற்பது தொடர்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. TSPL-ன் நிலுவை கடன்களை பைசல் செய்த பிறகு, கம்பெனிகள் பதிவாளர் பட்டியலில் இருந்து இந்த நிறுவனத்தின் பெயரை நீக்கக் கோருவதற்கும் இது வகை செய்கிறது.

 

National Trust தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நிர்ணயிக்கப்பட்ட பதவிக் காலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஆட்டிசம், பெருமூளை வாதம், மனவளர்ச்சி குன்றிய மற்றும் பல மாற்றுத்திறன்கள் கொண்டவர்களின் நலனுக்கான நேஷனல் டிரஸ்ட் சட்டம் 1999ல் 4 (1) மற்றும் 5 (1) பிரிவுகளில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நேஷனல் டிரஸ்ட் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலத்தை மூன்று ஆண்டுகளாக நிர்ணயிக்க இந்தத் திருத்தங்கள் வகை செய்கின்றன.

நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கை முக்கிய துறைகளில் மேலும் தாராளமயமாக்கல்

 

  • ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தகத்துக்கு ஆட்டோமேடிக் முறையின் கீழ் 100% நேரடி அந்நிய முதலீடு
  • கட்டுமான மேம்பாட்டுக்கு ஆட்டோமேடிக் முறையின் கீழ் 100% நேரடி அந்நிய முதலீடு
  • வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் ஒப்புதல் அளிப்பு முறையின் கீழ் ஏர் இந்தியா நிறுவனத்தில் 49% வரையில் முதலீடு செய்ய அனுமதி
  • பிரதானச் சந்தை மூலமாக மின்சார இணைப்பகங்களில் FII/FPI-கள் முதலீடு செய்ய அனுமதி
  • நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையில் `மருத்துவ உபகரணங்கள்என்ற வரையறையில் திருத்தம்

12 –வது ஐந்தாண்டு திட்ட காலத்திற்கு பிறகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வட்டார வளர்ச்சித் திட்டத்தைத் தொடர மத்திய அமைச்சரவை அனுமதி

 

14 –வது நிதிக் கமிஷனின் கால வரம்பு (31.03.2020) வரையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வட்டார வளர்ச்சித் திட்டத்தைத் (MPLADS) தொடர பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு அனுமதி அளித்துள்ளது.

 

07 பிப்ரவரி 2018

சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்விக்கான மனிதவளத்தை மேம்படுத்தும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்.
குறைந்த சேவைப் பகுதிகளில் 24 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
மருத்துவக் கல்லூரிகளில் 18,058 பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு இடங்கள் உயர்த்தப்படும்.
248 செவிலியர் மற்றும் பேறுகால உதவியாளர் பள்ளிகள் அமைக்கப்படும்.

 

சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்விக்கு ஏற்றமளிக்கும் வகையில், பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் திட்டங்களை தொடர்வதற்கும், அவற்றில் கூடுதலான கட்டங்களை செயல்படுத்துவதற்கும் அனுமதி அளித்துள்ளது. 2019-20 வரையிலான காலத்திற்கு இந்த திட்டங்களுக்கு மொத்த மதிப்பீடு ரூ. 14,930.92 கோடி ஆகும்.

2018 பருவத்திற்கு கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல்
 

2017ம் ஆண்டில் குவிண்டாலுக்கு ரூ. 6500ஆக இருந்த, நியாயமான சராசரி தரம் கொண்ட அரவை கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 2018ம் ஆண்டு பருவத்தில் ரூ. 7500 ஆக அதிகரிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. 2017ம் ஆண்டு குவிண்டாலுக்கு ரூ. 6785 ஆக இருந்த நியாயமான சராசரி தரம் கொண்ட உருண்டை கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 7750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இரட்டை வரிவிதிப்பைத் தவிர்க்கவும், நிதிசார்ந்த ஏய்ப்பு நடவடிக்கைகளைத் தடுக்கவும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்கொள்வதற்கான மரபுகளை நிறைவுபடுத்தவும், கையெழுத்திடவும் மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியது

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை வருமானத்தின் மீதான வரிவிதிப்பு தொடர்பாக இரட்டை வரிவிதிப்பைத் தவிர்க்கவும், நிதிசார்ந்த ஏய்ப்பு நடவடிக்கைகளைத் தடுக்கவும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்கொள்வதற்கான மரபுகளை நிறைவுபடுத்தவும், கையெழுத்திடவும் தனது ஒப்புதலை வழங்கியது.

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முறைக் கல்வி மற்றும் பயிற்சி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பிற்கான கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இங்கிலாந்து நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் புதுதில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முறைக் கல்வி மற்றும் பயிற்சி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பிற்கான பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்குத் தனது ஒப்புதலை வழங்கியது.

“வேலைவாய்ப்பு மற்றும் அமைதி மற்றும் மனத் திடத்திற்கான நாகரீகமான வேலை” தொடர்பான பரிந்துரையான சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் நிறைவேற்றப்பட்ட புதிய விஷயத்தை (தீர்மான எண்: 205) நாடாளுமன்றத்தின் முன் வைப்பதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை வேலைவாய்ப்பு மற்றும் அமைதி மற்றும் மனத் திடத்திற்கான நாகரீகமான வேலைதொடர்பான பரிந்துரையான சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் நிறைவேற்றப்பட்ட புதிய விஷயத்தை (தீர்மான எண்: 205) நாடாளுமன்றத்தின் முன் வைக்க தனது ஒப்புதலை வழங்கியது. 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜெனிவா நகரில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 106வது அமர்வு இந்தப் பரிந்துரையை நிறைவேற்றியிருந்தது. இந்தப் பரிந்துரையை மேற்கொள்வதை அந்த அமர்வின்போது இந்தியாவும் ஆதரித்திருந்தது.

பாதரசம் குறித்த மினாமாட்டா தீர்மானத்தை இறுதிப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை பாதரசம் குறித்த மினாமாட்டா தீர்மானத்தை இறுதிப்படுத்தவும், அந்த இறுதிப்படுத்தலை சமர்ப்பிப்பதன் மூலம் இந்த சிறப்பு தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளும் நாடாக இந்தியா மாற வழிவகுப்பது தொடர்பான கருத்துரைக்கு தனது ஒப்புதலை வழங்கியது.

“பிரதம மந்திரியின் ஆராய்ச்சிப் படிப்புக்கான நிதியுதவி திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 “பிரதம மந்திரியின் ஆராய்ச்சிப் படிப்புக்கான நிதியுதவி(Prime Minister's Research Fellows) திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம், ஒட்டுமொத்தமாக ரூ.1,650 கோடி செலவில், 2018-19-ம் ஆண்டு முதல் 7 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.

திவாலாதல் மற்றும் நொடிப்பு நிலை விதிகள் (திருத்த) அவசரச் சட்டம் 2017-க்கு மாற்றான திவாலாதல் மற்றும் நொடிப்பு நிலை விதிகள் (திருத்த) மசோதா 2017-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், திவாலாதல் மற்றும் நொடிப்பு நிலை விதிகள் (சட்டத் திருத்த) மசோதா 2017-க்கு மாற்றான, மாற்று மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு செயல்பாட்டுக்குப் பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதாவை, திவாலாதல் மற்றும் நொடிப்பு நிலை (திருத்த) சட்டம், 2018-யாக நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் துனிஷியா இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை மத்திய அமைச்சரவையில் எடுத்துரைப்பு

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இளைஞர் விவகாரங்கள் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் துனிஷியா இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை, புதுதில்லியில் 30.10.2017-ல் கையெழுத்தானது.

மக்களவையில் நிலுவையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாடு (திருத்த) மசோதா 2015-யை திரும்பப் பெறவும், வகைப்படுத்துவதற்கான காரணிகளை மாற்றவும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு சட்டம் 2006-ல் திருத்தங்களைக் கொண்டுவரும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வகைப்படுத்துவதற்கான அடிப்படையை, ஆலை மற்றும் இயந்திரங்கள்/உபகரணங்களில் முதலீடு செய்வது என்பதிலிருந்து ஆண்டு விற்றுமுதல் என்று மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மிகப்பெரும் துறைமுக ஆணையங்கள் மசோதா-2016-ல் மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள மிகப்பெரும் துறைமுக ஆணையங்கள் மசோதா-2016-ல் அதிகாரப்பூர்வ திருத்தங்களை சேர்ப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. துறைசார்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் இந்தத் திருத்தங்கள் சேர்க்கப்படுகின்றன.

சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்புகளை சீரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய ஆரோக்கிய நிதி (Rashtriya Arogya Nidhi), தேசிய மக்கள் தொகை நிலைப்படுத்துதல் நிதி (Jansankhya Sthirata Kosh) ஆகிய தன்னாட்சி அமைப்புகளை மூடும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அமைப்புகளின் செயல்பாடுகள், இனி சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையிடமே இருக்கும்.

பிரதமர் சமையல் எரிவாயு (உஜ்வாலா) திட்டத்தை விரிவுப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு பிரதமர் சமையல் எரிவாயு இணைப்பு திட்டத்தின்கீழ் பயனடைவோரின் இலக்கை ரூபாய் 4,800 கோடி கூடுதல் நிதியுடன் ஐந்து கோடியிலிருந்து எட்டு கோடியாக அதிகரிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் சமையல் எரிவாயு இணைப்பு திட்டத்திற்கு அதிக வரவேற்பு குறிப்பாக எரிவாயு இணைப்பு இல்லாத கிராமப்புற மகளிரிடமிருந்து அதிக வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மாற்றியமைக்கப்பட்ட இலக்கை 2020-ஆம் ஆண்டிற்குள் அடைய முடியும்.


20 பிப்ரவரி 2018

தேசிய நகர்ப்புற வீட்டுவசதி நிதியத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்

 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ. 60,000 கோடி அளவுக்கு தேசிய நகர்ப்புற வீட்டு வசதி நிதியத்தை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிதியம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சங்கங்கள் பதிவுச் சட்டம் 1860ன் கீழ் பதிவு செய்யப்பட்ட சுயாட்சி கொண்ட அமைப்பான கட்டுமானப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக் கவுன்சிலில் இருக்கும்.

இந்தியா மொரோக்கோ இடையேயான ரயில்வேத் துறை உடன்படிக்கை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ரயில்வேத் துறையில் நீண்ட கால ஒத்துழைப்பிற்கான இந்தியா மற்றும் மொரோக்கோ தேசிய ரயில்வே அலுவலகத்திற்கு இடையேயான ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் பின்னேற்பு ஒப்புதல் ஆகும். ஒத்துழைப்பு உடன்படிக்கை டிசம்பர் 14, 2017 அன்று கையெழுத்திடப்பட்டது.

மகாநதி நீர் பிரச்சினைக்கு ஒடிசா மாநில அரசின் கோரிக்கையின்படி மாநிலங்களுக்கு இடைப்பட்ட நதி நீர் பிரச்சினை சட்டம் 1956-ன் படி நடுவர் மன்றம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மகாநதி ஆற்று நீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மகாநதியால் பயன்பெறும் பாசனப் பகுதி மாநிலங்களில் கிடைக்கும் முழுமையான தண்ணீர் அளவு, ஒவ்வொரு மாநிலத்தின் பங்களிப்பு, ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போது பயன்படுத்தப்படும் நீர்வளங்கள், எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பாசனப் பகுதி மாநிலங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய நீரின் அளவை நடுவர் மன்றம் நிர்ணயம் செய்யும்.

இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையேயான திரைப்பட கூட்டுத் தயாரிப்பு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையேயான திரைப்பட கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடித் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு பின்னேற்பு ஒப்புதலை வழங்கியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் திரு. பென்ஜமின் நெதேன்யாகு ஜனவரி 15, 2018 இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட போது புதுதில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் இதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திடப்பட்டது.

அரியானா, குருகிராமில் இந்திய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் நிலம் அருகே பேருந்து நிறுத்தி வைக்கும் இடம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரியானாவில் குரு கிராமில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிலத்துடன் ஒன்றோடு ஒன்று தழுவிய நிலையில் உள்ள மூன்று சென்ட் நிலத்தில் ரியானா மாநிலம், குருகிராமில் இந்திய பாதுகாப்பு பல்கலைக்கழகம் அருகே  பேருந்து நிறுத்தி வைக்கும் இடம் அமைக்க பிரதமர்  திரு  நரேந்திர மோடி  தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2011 –ம் ஆண்டு ரியானா அரசுக்கு இந்த மூன்று ஏக்கர் நிலத்தைப் பாதுகாப்பு அமைசச்கத்திற்கு வழங்கியது. தற்போது இந்த நிலத்தை மறுபடியும் மாநில அரசுக்கே வழங்கவுள்ளதால்  ரூ.1,82,719 ரொக்கத்தை அரியானா அரசு மீண்டும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஒழுங்குபடுத்தப்படாத வைப்புநிதித் திட்டங்களைத் தடை செய்யும் மற்றும் சீட்டு நிறுவனங்கள் (திருத்த) சட்ட மசோதா, 2018 - என்ற புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

முதலீட்டாளர்களின் சேமிப்புகளைப் பாதுப்பதற்கான முக்கியக் கொள்கை முயற்சியாக, பின்வரும் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்வதற்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது : -

(a) ஒழுங்குபடுத்தப்படாத வைப்புநிதித் திட்டங்களைத் தடை செய்தல் 2018 சட்ட மசோதா &

(b) சீட்டு நிறுவனங்கள் (திருத்த) சட்ட மசோதா, 2018

கர்நாடகாவில் தேசிய நெடுஞ்சாலை – 275 நிடாகட்டா-மைசூரு பகுதியை ஆறு வழிப்பாதையாக்க அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுக் கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 275ல் 74.200 கி.மீட்டரில் இருந்து 135.304 கி.மீட்டர் வரை நிடாகட்டாவில் இருந்து மைசூரு வரை ஆறு-வழிப்பாதை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட்து.

‘சார்தாம் மகாமார்க் பரியோஜனாவின் பகுதியாக உத்தரகாண்டில் சில்கியாரா பெண்ட்-பர்கோட் சுரங்கப் பாதைத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
 

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் உத்தரகாண்டில் சில்கியாரா பெண்ட் - பர்கோட் இடையே இரண்டு திசைகளில் 4.531 கி.மீ தூர இரட்டைச் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தராசு - யமுனோத்ரி பிரிவில் செயினேஜ் 25.400 கி.மீ., செயினேஜ் 51.000 கி.மீ இடையே அணுகுப்பாதை உள்ளிட்ட அவசரகால வெளியேற்று வழித்தடத்தையும் உள்ளடக்கியது.

116.95 கி.மீ. தூர பாட்னி-ஆர்னிகர் வழித்தடத்தை ரூ.1300.9 கோடி செலவில் மின்மயத்துடன் இரட்டிப்பாக்க சிசிஈஏ ஒப்புதல் அளித்துள்ளது

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஈஏ) 116.95 கி.மீ. தூர பாட்னி-ஆர்னிகர் வழித்தடத்தை ரூ.1300.9 கோடி செலவில் மின்மயத்துடன் இரட்டிப்பாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது 2021-22-ல் நிறைவடையக்கூடும். இந்தத் திட்டம் உத்தரப்பிரதேசத்தில் தியோரியா, பல்லியா, மாவ், காஸிப்பூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

ரூ. 4955.72 கோடி செலவில் 425 கி.மீ. தொலைவிலான ஜான்சி – மாணிக்பூர் மற்றும் பீம்சென் - கைரார் மார்க்கத்தில் இரண்டாவது வழித்தடம் அமைக்கவும் மின்மயமாக்கவும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் 425 கிலோமீட்டர் தொலைவிலான ஜான்சி மாணிக்பூர் மற்றும் பீம்சென் கைரார் இடையே இரண்டாவது வழித்தடம் அமைத்தல் மற்றும் மின்மயமாக்குதல் பணிகளை ரூ. 4955.72 கோடியில் நிறைவு செய்ய ஒப்புதல் அளித்தது. இந்தப் பணிகள் 2022-23ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டங்கள் உத்தரப் பிரதேசத்தில் ஜான்சி, மஹோபா, பாண்டா, சித்ரகூட் தாம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் சத்தர்பூர் மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

130 கி.மீ. நீள ஜெய்பூர் – மால்கன்கிரி புதிய வழித்தடத் திட்டத்தை ரூ. 2676.11 கோடியில் நிறைவு செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஜெய்பூர் மால்கன்கிரி இடையே 130 கிலோ மீட்டர் தொலைவுக்குப் புதிய வழித்தடம் அமைக்கும் திட்டத்தை 2626.11 கோடி செலவில் நிறைவு செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் 2021-22ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த்த் திட்டம் ஒடிஷா மாநிலம் கோரபுட் மற்றும் மால்கன்கிரி மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

100.6 கிலோமீட்டர் தூரமுள்ள முசாஃபர்பூர்-சகாலி, 109.7 கிலோமீட்டர் தூரமுள்ள சகாலி-வால்மீகி நகர் வழித்தடங்களை முறையே ரூ. 1347.61 கோடி, ரூ.1381.49 கோடி செலவில் மின்மயத்துடன் கூடிய இரண்டு தடங்களாக்கும் திட்டங்களுக்குப் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் 100.6 கிலோமீட்டர் தூரமுள்ள முசாஃபர்பூர்-சகாலி, 109.7 கிலோமீட்டர் தூரமுள்ள சகாலி-வால்மீகி நகர் வழித்தடங்களை முறையே ரூ. 1347.61 கோடி, ரூ.1381.49 கோடி செலவில் மின்மயத்துடன் கூடிய இரண்டு தடங்களாக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டங்கள் பீகாரில் உள்ள முசாஃபர்நகர், கிழக்கு சாம்பரான் (மோதிஹரி) மேற்கு சாம்பரான் (பெட்டையா) ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.

நிலக்கரிச் சுரங்க (சிறப்பு விதிகள் -2015) சட்டம் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை-1957) சட்டம் ஆகியவற்றின் கீழ் நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான வழிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகார அமைச்சகத்துக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், நிலக்கரிச் சுரங்க (சிறப்பு விதிகள் -2015) சட்டம் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை-1957) சட்டம் ஆகியவற்றின் கீழ் நிலக்கரி விற்பனைக்காக நிலக்கரிச் சுரங்கங்கள் அல்லது தொகுதிகளை ஏலம் விடுவதற்கான புதிய வழிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

28 பிப்ரவரி 2018

இந்தியாவுக்கும், ஃபிஜிக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்
 

இந்தியாவுக்கும், ஃபிஜிக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஃபியூஜியில் சூவா என்ற இடத்தில் 2017 மே மாதம் 27-ம் தேதி கையெழுத்திடப்பட்டது.

சுகாதாரத் துறையில் இந்தியா மாசிடோனியா இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதாரத் துறையில் இந்தியா மற்றும் மாசிடோனியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

சுகாதாரத்துறை ஒத்துழைப்பு குறித்த இந்தியா – ஜோர்டான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்

மருத்துவ அறிவியல் மற்றும் சுகாதாரத்துறையில் ஒத்துழைப்பு குறித்த இந்தியாஜோர்டான் இடையோன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மனித ஆற்றல் துறையில் ஒத்துழைப்புக்கான இந்தியா-ஜோர்டான் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
 

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மனித ஆற்றல் துறையில் ஒத்துழைப்புக்கான இந்தியா-ஜோர்டான் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சுங்கம் தொடர்பான விஷயங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நிர்வாக உதவிக்கான இந்தியா – ஜோர்டான் இடையிலான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

சுங்கம் தொடர்பான விஷயங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நிர்வாக உதவிக்கான இந்தியாஜோர்டான் இடையிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதற்கு ஒப்புதல் அளிப்பதெற்கென பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஏற்பு வழங்கியது.

ஆள்கடத்தல் சட்டம் -2018ன் (தடுப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு) முன்வடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவை பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (பிப்ரவரி 280ல் கூடியது. அதில், ஆள் கடத்தல் சட்டம் -2018ன் (தடுப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு) முன்வடிவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பாறை பாஸ்பேட்டுகள் மற்றும் எம்ஓபி தோண்டியெடுத்தல், பயன்படுத்துதல் மற்றும் பாஸ்பாரிக் அமிலம் / டிஏபி / என்பிகே உரங்கள் உற்பத்தி நிலையங்களை அமைத்தல் ஆகியவை குறித்த இந்தியா – ஜோர்டான் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

பாறை பாஸ்பேட்டுகள் மற்றும் எம்ஓபி தோண்டியெடுத்தல், பயன்படுத்துதல் மற்றும் பாஸ்பாரிக் அமிலம் / டிஏபி / என்பிகே உரங்கள் உற்பத்தி நிலையங்களை அமைத்தல் ஆகியவை குறித்த இந்தியா ஜோர்டான் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த்து. இந்த நீண்டகால ஒப்பந்தம் இந்தியாவுக்கு 100% உரங்களை வழங்குவதற்கானது.

இந்தியா மற்றும் வியட்நாம் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியா மற்றும் வியட்நாம் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்ட்து.

 

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்களை தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பின் ஆதார விலை திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கான உத்தரவாத தொகையை ரூ.9500 கோடியிலிருந்து ரூ.19000 கோடி என இருமடங்காக அரசு உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தை கூட்டமைப்பின் ஆதார வழித் திட்டத்தின் கீழ், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில், கொள்முதல் செய்வதற்கான கடன் தொகைக்கு, வங்கிக்கு வழங்கும் உத்தரவாதத் தொகையை ரூ.9500 கோடியிலிருந்து ரூ.19000 கோடி என இருமடங்காக உயர்த்தும் அரசின் முடிவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் சிறுவிவசாயிகள் வேளாண் தொழில் கூட்டமைப்புக்கு தேவைப்படும் ரூ.45 கோடிக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவாதங்கள் , 2021-22 வரை 5 ஆண்டு காலத்திற்கு வழங்கப்படும். இதில் 1 சதவீத அரசு உத்தரவாத கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.

01 மார்ச் 2018

தேசிய நிதி நடவடிக்கைகள் ஆணையத்தை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்
 

தேசிய நிதி நடவடிக்கைகள் ஆணையத்தை (NFRA) அமைக்கவும் இதற்கு ஒரு தலைவர் பதவி, 3 முழுநேர உறுப்பினர் பதவிகள் ஒரு செயலாளர் பதவி ஆகியவற்றை உருவாக்குவதற்குமான முன்மொழிவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கணக்குத் தணிக்கை தொழிலை முறைப்படுத்தும் சுதந்திரமான அமைப்பை நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. 2013-ம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்தின் மூலம் முக்கியமான மாற்றங்களை கொண்டு வருவதில் ஒன்றாக இது இருக்கும். நிதித்துறையின் நிலைக்குழு அளித்த 21-வது அறிக்கையில் இடம் பெற்றுள்ள குறிப்பிட்ட பரிந்துரை அடிப்படையில் இந்த அம்சம் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான மசோதா 2018-க்கு அமைச்சரவை ஒப்புதல்

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மசோதா 2018ஐ நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சகம் தாக்கல் செய்வதற்கு பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்திய நீதிமன்றங்களின் வரம்புக்கு வெளியில் இருந்து கொண்டு பொருளாதார குற்றவாளிகள் இந்திய சட்ட நடைமுறைகளிலிருந்து தப்பிப்பதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை இந்த மசோதா தெரிவிக்கிறது.

07 மார்ச் 2018

இந்தியா - பிரான்ஸ் இடையே இடம் பெயர்தல் மற்றும் பரிவர்த்தனை கூட்டுறவு தொடர்பான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான இடம் பெயர்தல் மற்றும் பரிவர்த்தனை கூட்டுறவு தொடர்பான ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸ் அதிபர் இந்தியாவிற்கு விரைவில் மேற்கொள்ள இருக்கும் பயணத்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

கல்வித்தகுதிகளை பரஸ்பரம் அங்கீகரிக்க வகை செய்யும் இந்தியா-பிரான்ஸ்-க்கு இடையிலான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கல்வித்தகுதிகளை பரஸ்பரம் அங்கீகரிக்க வகை செய்யும் இந்தியா-பிரான்ஸ்-க்கு இடையிலான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இருநாடுகளுக்கும் இடையே அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் பயின்ற காலத்தையும் அவர்கள் கற்ற கல்வியையும் அங்கீகரிக்க இந்த உடன்பாடு வகை செய்கிறது. பிரான்ஸ் அதிபர் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும்போது இந்த உடன்பாடு கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கும் ஹெல்லினிக்-கும் இடையே புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவுக்கும் ஹெல்லினிக்-கும் இடையே புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிடம் விளக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ்-க்கும் ஹெல்லினிக் குடியரசின் வெளியுறவு அமைச்சர் மாண்புமிகு நைக்கோஸ் கோட்ஜியாஸ்-க்கும் இடையே புதுதில்லியில் 2017 நவம்பரில் கையெழுத்தானது.

போதை மருந்துகள், மனநிலை பாதிக்கும் பொருட்கள், வேதியியல் முன்னோடிப் பொருட்கள் ஆகியவற்றை சட்ட விரோதமாக பயன்படுத்துதல், சட்ட விரோதமாக கொண்டு செல்லுதல் மற்றும் அது தொடர்பான குற்றங்களை குறைப்பதற்கான இந்தியா-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

போதை மருந்துகள், மனநிலை பாதிக்கும் பொருட்கள், வேதியியல் முன்னோடிப் பொருட்கள் ஆகியவற்றை சட்ட விரோதமாக பயன்படுத்துதல், சட்ட விரோதமாக கொண்டு செல்லுதல் மற்றும் அது தொடர்பான குற்றங்களை குறைப்பதற்கான இந்தியா-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

2018ஆம் ஆண்டின் மத்தியஸ்தம் மற்றும் சமரச (சட்டத்திருத்த) மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 2018ஆம் ஆண்டின் மத்தியஸ்தம் மற்றும் சமரச (சட்டத்திருத்த) மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்வதற்கு வசதியாக, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மாற்று பிரச்சினை தீர்ப்பு அமைப்பின் வலிமையான மையமாக இந்தியாவை உருவாக்குதல், பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அமைப்பு சார்ந்த மத்தியஸ்தத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்காக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒருகட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவற்றில் மேலும் ஒரு தவணையை விடுவிக்க பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 1.1.2018 முதல் அமலுக்கு வரும் இந்த உயர்வில் இவர்களின் அடிப்படை ஊதியத்தில் / ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 5 சதவீத அகவிலைப்படிக்கும் கூடுதலாக 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். விலை உயர்வை ஈடுகட்டும் வகையில் இது வழங்கப்படுகிறது.

தொலைத்தொடர்புத் துறையில் வரையறுக்கப்பட்ட கடன் தொடர்பாக அமைச்சகக் குழு அளித்த பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், தொலைத்தொடர்புத் துறை தொடர்பான இரு முக்கிய நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதலீடு செய்ய வழியமைத்தல், அத்துறையில் அலுவல் நடவடிக்கைகளை எளிமையாக்குவது ஆகிய இரு முக்கிய நடவடிக்கைகளுக்கு கேபினட் இசைவு தெரிவித்தது. ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலத்தில் தள்ளிப் போடப்பட்ட கட்டண நிலுவையை மாற்றியமைப்பதும், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையைப் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உச்ச வரம்பைத் திருத்தியமைப்பதும் இந்த நடவடிக்கையில் இடம்பெற்றுள்ளன.

வர்த்தக நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்களின் வர்த்தக பிரிவு மற்றும் வர்த்தக மேல்முறையீட்டு பிரிவு (திருத்த) மசோதா 2018-க்கு அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் வர்த்தக நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்களின் வர்த்தக பிரிவு மற்றும் வர்த்தக மேல்முறையீட்டு பிரிவு (திருத்த) மசோதா 2018-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கு தனது ஒப்புதலை அளித்தது.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு மரியாதை அளிக்கும் திட்டத்தை 2017 முதல் 2020 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு மரியாதை அளிக்கும் திட்டத்தை (SwatantraSainikSammanYojana - SSSY) மார்ச் 31, 2017-உடன் முடிவடையும் 12-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தைத் தாண்டி, 2017 முதல் 2020-ம் ஆண்டுவரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே சுற்றுச்சூழல் துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் சுற்றுச்சூழல் துறையில் இந்தியா பிரான்ஸ் இடையே ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய பணியாளர் தேர்வாணையம் மற்றும் மொரீசியஸ் பணியாளர் தேர்வாணையம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய பணியாளர் தேர்வாணையம் மற்றும் மொரீசியஸ் பணியாளர் தேர்வாணையம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தாமன் மற்றும் டியூ நகராட்சிகள் திருத்த நடைமுறைகள் 2018, தாத்ரா, நாகர் ஹவேலி நகராட்சி மன்றங்கள் திருத்த நடைமுறைகள் 2018, அந்தமான் நிக்கோபார் தீவுகள், மாநகராட்சி திருத்த நடைமுறைகள் 2018 ஆகியவற்றை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கீழ்க்கண்ட நடைமுறைகள் அமலாக்கத்திற்கு ஒப்புதல் அளித்தது.

  1. தாமன் மற்றும் டியூ நகராட்சிகள் திருத்த நடைமுறைகள் 2018,
  2. தாத்ரா, நாகர் ஹவேலி நகராட்சி மன்றங்கள் திருத்த நடைமுறைகள்
  3. 2018, அந்தமான் நிக்கோபார் தீவுகள், மாநகராட்சி திருத்த நடைமுறைகள் 2018

பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், தில்லி தேசிய தலைநகரப் பகுதி ஆகியவற்றில் பயிர்க் கழிவுகளை பயிர் நிலத்திலேயே நிர்வகிப்பதற்கான வேளாண் அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், தில்லி தேசிய தலைநகரப் பகுதி ஆகியவற்றில் பயிர்க் கழிவுகளை பயிர் நிலத்திலேயே நிர்வகிப்பதற்கான வேளாண் அமைப்பை உருவாக்க, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த திட்டத்திற்கு மத்திய நிதியிலிருந்து செலவிடப்படும் மொத்த தொகை ரூ.1151.80 கோடி (2018-19ல் ரூ.591.65 கோடி மற்றும் 2019-20ல் ரூ.560.15 கோடி).

 

14 மார்ச்  2018

பாரம்பரிய மருத்துவ முறைகள் துறையில் இந்தியா-ஈரான் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாரம்பரிய மருத்துவமுறைகள் துறையில் இந்தியா-ஈரான் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்தியா-ஈரான் இடையேயான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு மற்றும் வரி ஏய்ப்பு தடுப்பு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா-ஈரான் இடையேயான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு மற்றும் வரி ஏய்ப்பு தடுப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா-இலங்கை இடையே செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா-இலங்கை இடையே செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம், மத்திய சட்டம் & நீதித்துறை மற்றும் மின்னணுவியல் & தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு.ரவிசங்கர் பிரசாத், 2018 ஜனவரி 15ஆம் தேதி இலங்கை சென்றபோது கையெழுத்தானது.

மத்திய அமைச்சரவை இந்தியா-ஈரான் இடையே வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஈரான் அதிபர் இந்தியாவில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் போது 2018 பிப்ரவரி 17 ஆம் தேதி வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறையில் இந்தியா-ஈரான் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னேற்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சுகாதாரம் மற்றும் மருந்துத் துறைகளில் இந்தியா-ஈரான் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதாரம் மற்றும் மருந்துத் துறைகளில் இந்தியா ஈரான் இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னேற்பு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், 2018 பிப்ரவரி 17அன்று ஈரான் அதிபரின் இந்திய வருகையின்போது கையெழுத்தானது.

நடைமுறையில் உள்ள யூரியா மானியத் திட்டத்தை 12-ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற்கும் அப்பாற்பட்டு நீடிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நடைமுறையில் உள்ள யூரியா மானியத் திட்டத்தை 12-ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற்கும் அப்பாற்பட்டு 2019-20 வரை நீடிப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது. மத்திய உரங்கள் துறையின் திட்டமான இந்த உர மானிய விநியோகத்திற்கான மொத்த மதிப்பீடு ரூ.1,64,935 கோடியாகும். இந்த முடிவு 2020 வரை யூரியா விலையில் ஏற்றம் ஏதும் இருக்காது என்ற அனுமானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.

21 மார்ச் 2018

கர்நாடகாவில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் “நாயாக்கா“-வுக்கு இணையாக “பரிவாரா“ மற்றும் “தலாவாரா“ சமூகங்களை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
 

கர்நாடகாவின் பழங்குடியினர் பட்டியலில் வரிசை எண். 38-ல் உள்ள நாயாக்கா“-வுக்கு இணையாக பரிவாராமற்றும் தலாவாராசமூகங்களை இணைக்க பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கொள்கை அளவில், ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்திய - ஆப்பிரிக்க கூட்டமைப்பு உச்சி மாநாட்டின் முடிவுகளை செயல்படுத்த ஆப்பிரிக்காவில் தூதரக அலுவலகங்களைத் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
 

ஆப்பிரிக்காவில் அடுத்த 4 ஆண்டுகளில் (2018-2021) 18 புதிய இந்திய தூதரகங்களை திறக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வட-கிழக்கு தொழில் வளர்ச்சித் திட்டம் (என்.இ.ஐ.டீ.எஸ்.) 2017-ற்கு அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, 2020, மார்ச் வரை ரூ.3000 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் வட-கிழக்கு தொழில் வளர்ச்சித் திட்டம் (என்.இ.ஐ.டீ.எஸ்.) 2017-ற்கு ஒப்புதல் அளித்தது. 2020, மார்ச்-ற்கு முன்பு மதிப்பீடு செய்யப்பட்ட பின்பாக, எஞ்சிய திட்டகாலத்திற்கு தேவைப்படும் நிதியை அரசு அளிக்கும். முன்பு இருந்த இரு திட்டங்களின் கீழான ஊக்கத்தொகைகளை இணைத்து அதிக நிதி ஒதுக்கீடுடன் என்.இ.ஐ.டீ.எஸ். விளங்கும்.

சுகாதாரக் கட்டமைப்புக்கு ஊக்கம் தேசிய சுகாதார இயக்கத்தை 01.04.2017 முதல் 31.03.2020 வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளுக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், தேசிய சுகாதார இயக்கத்தை 01.04.2017 முதல் 31.03.2020 வரை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு மத்திய அரசின் பங்களிப்பாக, ரூ.85,217 கோடிக்கான நிதி ஒதுக்கீட்டிற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

“ஆயுஷ்மான் பாரத்- தேசிய சுகாதார பாதுகாப்பு இயக்கத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்


குடும்பத்திற்கு ஆண்டிற்கு ரூ 5 லட்சம் வரை பலன் கிடைக்கும்
10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடையும்.
தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் (ஆர்.எஸ்.பி.ஒய்) மற்றும் முதியோர் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவை இந்த புதிய திட்டத்தில் இணைக்கப்படும்.
 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புது தில்லியில் இன்று கூடியது. அப்போது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் ஆயுஷ்மான் பாரத் என்ற தேசிய சுகாதார பாதுகாப்பு இயக்கத்திற்கு ஒப்புதலை வழங்கியது. இந்த திட்டத்தின் படி குடும்பம் ஒன்றிற்கு வருடத்திற்கு ரூ 5 லட்சம் வரை பயன் கிடைக்கும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் சமூக பொருளாதார ரீதியான தரவுகளின் அடிப்படையிலான 10 கோடிக்கும் மேலான ஏழை மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்தோரை இந்த திட்டம் உள்ளடக்கும். இந்த ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதாரப் பாதுகாப்புத்திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் (ஆர்.எஸ்.பி.ஒய்) மற்றும் முதியோர் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றை இணைத்து செயல்படுத்தும்.

 

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியா-கயானா இடையே கூட்டுறவிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்து அமைச்சரவைக்கு விளக்கம்
 

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கீழ் கூடிய மத்திய அமைச்சரவையிடம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியா மற்றும் கயானா இடையே கூட்டுறவிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை (எம்.ஓ.யூ.) குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் எரிசக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு.ஆர்.கே.சிங், கயானா, 2வது துணை அதிபர் மற்றும் கூட்டுறவிற்கான வெளியுறவுத் துறை அமைச்சர் மேதகு. திரு.கார்ல் பீ.க்ரீனிட்ஜ் ஆகியோர் புதுதில்லியில் 2018, ஜனவரி 30 அன்று கையெழுத்திட்டனர்.

இரட்டை வரி விதிப்பை தவிர்க்கவும், வரிஏய்ப்பை தடுக்கவும் வருமானவரி தொடர்பாக இந்தியா-கத்தார் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய அமைச்சரவை ஒப்புதல்

இரட்டை வரி விதிப்பை தவிர்க்கவும், வரிஏய்ப்பை தடுக்கவும் வருமானவரி தொடர்பாக இந்தியா-கத்தார் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் இந்தியா மேம்பாட்டு நிறுவனத்தை மூட அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை (மார்ச் 21) தில்லியில் கூடியது. அக்கூட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் இந்தியா மேம்பாட்டு நிறுவனத்தை (India Development Foundation of Overseas Indians (IDF-OI)) மூடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தேசிய தூய்மைக் கங்கைத் திட்டம் மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் (National Mission for clean Ganga and Swachh Bharat Mission) ஆகிய இந்திய அரசின் முதன்மைத் திட்டங்களுக்கு புலம்பெயர் இந்தியர்கள் அளிக்கும் நிதியைத் தொகுத்து அளிப்பதற்கு வசதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மத்திய அரசு பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உட்பிரிவை பரிசீலிப்பதற்கான ஆணையத்தின் பதவிக் காலத்தை 2018 ஜூன் 20-ந் தேதி வரை நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

மத்திய அரசு பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உட்பிரிவை பரிசீலிப்பதற்கான ஆணையத்தின் பதவிக் காலத்தை
2-வது மற்றும் இறுதி முறையாக 2018 மார்ச் 27-ந் தேதிக்கு பிறகும் 12 வாரங்கள் - 2018 ஜூன் 20-ந் தேதி வரை நீட்டிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவில் டிசிஐஎல் தொலைத்தொடர்பு ஆலோசனை நிறுவனம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று (மார்ச் 21) தில்லியில் நடைபெற்றது. அந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அமெரிக்காவில் இந்திய தொலைத்தொடர்பு ஆலோசனை நிறுவனத்தின் (TCIL) 100 சதவீதம் பங்கு உரிமை கொண்ட சி கார்ப்பரேஷன் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

  1. இந்திய தொலைத்தொடர்பு ஆலோசனை நிறுவனத்தின் சி கார்ப்பரேஷனை அமெரிக்கா, டெக்ஸஸ் மாகாணத்தில் அமைப்பது, அதன் வணிகத்தை அமெரிக்காவின் இதர மாகாணங்களிலும் மேற்கொள்வதற்குப் பதிவு பெறுவதற்கு அனுமதிப்பு
  2. உருவாக்கப்படும் சி கார்ப்பரேஷனில் இந்திய தொலைத்தொடர்பு ஆலோசனை நிறுவனத்தின் (டி சி ஐ எல்) 100 சதவீத பங்குகளும் மொத்தம் 50 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 33.84 கோடி) மதிப்புக்கு படிப்படியாக முதலீடு செய்வது.
  3. இத்திட்டங்களை அமெரிக்காவில் நிறைவேற்றுவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஆலோசனை நிறுவனத்தின் 50 லட்சம் அமெரிக்க டாலர் அளவுக்கு (சுமார் ரூ. 33.84 கோடி) எதிர் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். கடன் வழங்கும் நிறுவனங்கள், வசதிகளுக்கு, விற்பனையாளர்களுக்கு ஏலக் கடன் பத்திரங்களின் வாடிக்கையாளர்கள் ஆகியோருக்கும் இந்த உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும்.

“வாடகைத் தாய் குழந்தை (முறைப்படுத்துதல்) மசோதா 2016-க்கான அரசு திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ”வாடகைத் தாய் குழந்தை (முறைப்படுத்துதல்) மசோதா 2016”-க்கான அரசு திருத்தம் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதிய திட்டங்களுக்கான செயல்மூலதனத்தை அதிகரிக்கவும், கடன் பொறுப்புகளைக் குறைக்கவும், இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தேவைப்படி குறைந்தபட்ச பொதுப்பங்குகள் 25 சதவீதம் என்பதை எட்டுவதற்கும், ஐடிஐ நிறுவனத்தின் சமபங்குகளை பொதுமக்களுக்கு மேலும் விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
 

தொலைத்தொடர்பு துறையின் கீழ்க்காணும் ஆலோசனைகளை ஐடிஐ நிறுவனம் செயல்படுத்த பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

  1. புதிய திட்டங்களுக்கான செயல்மூலதனத்தை அதிகரிக்கவும், கடன் பொறுப்புகளை குறைக்கவும், இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தேவைப்படி குறைந்தபட்ச பொதுப்பங்குகள் 25 சதவீதம் என்பதை எட்டுவதற்கும் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள சமபங்குகளை உள்நாட்டுச் சந்தையில் பொதுமக்களுக்கு எஃப்பிஓ அடிப்படையில் விற்பனை செய்தல்.
  2. டிபிஈ வழிகாட்டு நெறிமுறைகள்படியும், ஐசிடிஆர் ஒழுங்குமுறை விதி 42-ன்படியும், 5 சதவீதம் வரையிலான புதிய பங்குகள் ஐடிஐ நிறுவன ஊழியர்களுக்கு ஒதுக்கப்படும்.
  3. ஐசிடிஆர் ஒழுங்குமுறை விதி 29-ன்படி, சில்லரை முதலீ்ட்டாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் 5 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
  4. உத்தேச செயல்பாடுகளுக்கு உதவி செய்யவும், நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கவும், தெரிவுசெய்யப்பட்ட ஆலோசகர்களை நியமித்தல்
  5. செபி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளி்ன்படி, நடைமுறைகளை பின்பற்றவும், மேல்நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வணிக வங்கியாளர்களுடன் கலந்தாலோசித்து வணிக வங்கியாளர்களை நியமித்தல்

புதிய உரக் கொள்கையின் கீழ் எரிசக்தி விதிமுறைகளில் திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு மத்திய உரத்துறையால் பரிந்துரைக்கப்பட்ட யோசனைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

  1. புதிய உரக்கொள்கை 2015-ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட எரிசக்தி விதிமுறைகளை 11 உர அலகுகளில் 2018 ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும்.
  2. நிர்ணயிக்கப்பட்ட எரிசக்தி விதிமுறைகளை பூர்த்தி செய்யாத 14 உர உற்பத்தி அலகுகளில், புதிய உரக்கொள்கை 2015-ன் கீழ், முன் அபராதத்துடன் தற்போதைய எரிசக்தி விதிமுறைகள் மேலும் இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
  3. தற்போது நடைமுறையில் உள்ள எரிசக்தி விதிமுறைகளின்படி நாப்தா அடிப்படையில் செயல்படும் 3 உர அலகுகள் மேலும் இரண்டாண்டுகள் அல்லது எரிவாயு இணைப்பு வழங்கும் வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  4. புதிய உரக்கொள்கை 2015-ன்படி நிர்ணயிக்கப்பட்ட எரிசக்தி விதிமுறைகள் 2020 ஏப்ரல் 1 முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரும்.

மத்திய அரசுத் திட்டமான அனைவருக்கும் உயர் கல்வி தேசியத் திட்டத்தைத் தொடர அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் மத்திய அரசின் அனைவருக்கும் உயர்கல்வி (ராஷ்ட்ரீய உச்சத சிக்‌ஷ அபியான்) தேசியத் திட்டத்தை 01.04.2017 முதல் 31.03.2020 வரை நீட்டிக்கத் தமது ஒப்புதலை அளித்துள்ளது.

பட்டுப்புழு வளர்ப்புத்துறை : யில் பட்டுத் தொழிலை மேம்படுத்த ஒருங்கிணைந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை, 2017-18 முதல் 2019-20 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு பட்டுத்துறை மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.

28 மார்ச் 2018

இந்தியா – ஜாம்பியா இடையே நீதித்துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா ஜாம்பியா இடையே நீதித்துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அறிவுசார் சொத்துரிமை விவகாரங்களில் இந்தியா மற்றும் கனடா இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா-கனடா இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. அறிவுசார் சொத்து துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு நடவடிக்கையை ஏற்படுத்துவதற்காக பிப்ரவரி 23, 2018-ல் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தானது. இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை, இரு நாடுகளிலும் புத்தாக்கம், படைப்பாற்றல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது.

தேசிய திறன்மேம்பாட்டு நிதியம் (NSDF), தேசிய திறன்மேம்பாட்டுக் கழகம் (NSDC) மறுசீரமைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (2018, மார்ச் 28) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய திறன் மேம்பாட்டு நிதியம் (NSDF), மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC) ஆகியவற்றை மறுசீரமைப்பதற்கு ஒப்புதல் அளித்தது. அந்நிறுவனங்களின் ஆளுகை, செயலாக்கம், கண்காணிப்புக் கட்டமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் இந்தச் சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தேசிய மருத்துவ ஆணையச் சட்டமுன்வடிவில் சில அரசு முறை திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (2018, மார்ச் 28) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் தேசிய மருத்துவ ஆணைய சட்ட முன்வடிவில் (National Medical Commission (NMC) Bill) சில அரசுமுறைத் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஊக்கம்
வடகிழக்கு கவுன்சிலின் புதிய திட்டங்களுக்கும் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களை தொடரவும் மத்திய அமைச்சரவை அனுமதி2020 மார்ச் வரையிலான மூன்றாண்டு காலத்திற்கான ரூ.4,500 கோடி செலவீனத்திற்கு அனுமதி
வடகிழக்கு மாநிலங்களுக்கான வடகிழக்கு கவுன்சில் சிறப்பு வளர்ச்சித் திட்டங்களை, மத்திய அரசின் திட்டங்களாக கருதி 100% மத்திய நிதியுதவி வழங்கப்படும் காலாவதியாகாத மத்திய நிதி ஆதாரங்களை வடகிழக்கு கவுன்சிலுக்கு மாற்றுதல்

 

பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறையால் செயல்படுத்தப்படும் கீழ்க்கண்ட திட்டங்களை 2020 மார்ச் வரை நீட்டிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

04 ஏப்ரல் 2018

உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் அதுதொடர்பான பிரிவுகளில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே ஒத்துழைப்பு ஏற்பாட்டை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உணவு பாதுகாப்புத் துறை மற்றும் அது தொடர்பான துறைகளில் ஒத்துழைப்புக்காக சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்துக்கும், ஆப்கானிஸ்தானின் வேளாண்மை, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடைத் துறை அமைச்சகத்துக்கும் இடையே ஒத்துழைப்பு ஏற்பாட்டில் கையெழுத்திடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வர்த்தக தீர்வு நடவடிக்கைகளுக்காக வல்லுநர் குழுவை அமைக்க இந்தியா - ஈரான் இடையே புரிந்துணர்வு உடன்பாட்டை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வர்த்தக தீர்வு நடவடிக்கைகளுக்காக வல்லுநர் குழுவை அமைக்கும் வகையில், இந்தியா மற்றும் ஈரான் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த உடன்படிக்கை, பரஸ்பரம் நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது. ஈரான் அதிபர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, பிப்ரவரி 17, 2018-ல் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தானது.

பர்ன் ஸ்டான்டர்ட் கம்பெனி லிமிடட் என்ற மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தை (CPSE) மூடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மோசமான செயல்பாடு மற்றும் நிதி நிலைமை காரணமாகவும், இதைப் புதுப்பித்தால் குறைந்த லாபமே எதிர்காலத்தில் கிடைக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டது

இந்தியா மற்றும் கனடா இடையே ஆராய்ச்சியை செம்மைப்படுத்துதல் மற்றும் தொழில்துறை - கல்வித் துறை கூட்டு முயற்சியில் ஒருமுகப்படுத்திய கவனம் செலுத்துவது தொடர்பான பங்கேற்புகளை ஊக்குவித்து வளர்ப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) குறித்து அமைச்சரவையில் தகவல் சமர்ப்பிப்பு

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா மற்றும் கனடா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த ஒப்பந்தம் புதுடெல்லியில் 2018 பிப்ரவரி 21 ஆம் தேதி கையெழுத்தானது.

ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே மேற்கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கை மத்திய அமைச்சரவையிடம் எடுத்துரைப்பு

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிலம் மற்றும் கடல் பகுதிக்கான மத்திய போக்குவரத்து ஆணையத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தான விவரம் எடுத்துரைக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை, பிப்ரவரி 10, 2018-ல் கையெழுத்தானது.

ஹெமிஸ்பியர் பிராப்பர்ட்டீஸ் இந்தியா நிறுவனத்தில் கூடுதல் பங்குகளை இணைப்பதற்கும் டாடா தகவல் தொடர்பு நிறுவனத்தின் உபரி நிலத்தை இந்த அமைப்புக்கு மாற்றித்தருவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

ஹெமிஸ்பியர் பிராப்பர்ட்டீஸ் இந்தியா நிறுவனத்தின் (எச்பிஐஎல்) நிர்வாக கட்டுப்பாட்டை தொலைத்தொடர்பு துறையிலிருந்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு மாற்றித்தரும் திட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது. இந்த நிறுவனத்தில் ரூ.700 கோடி பங்குகளையும் மற்றும் ரூ.51 கோடி பாதுகாப்புடன் கூடிய இந்திய அரசின் கடனையும் இணைத்தபிறகு இந்த நிர்வாக கட்டுப்பாட்டு மாற்றத்தை செய்வது என்ற திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. உபரி நிலத்தை பிரிக்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தியப் போட்டித் திறன் ஆணையத்தைச் சீரமைக்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இந்தியப் போட்டித் திறன் ஆணையத்தில் (CCI) இடம்பெறுவோரின் எண்ணிக்கையைச் சீர்திருத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த ஆணையத்தில் ஒரு தலைவர் ஆறு உறுப்பினர்கள் என மொத்தம் ஏழு பேர் நியமிக்கப்படுவர். இதற்கு மாறாக, ஒரு தலைவர் மூன்று உறுப்பினர்கள் என மொத்தம் நான்கு பேரை மட்டுமே நியமிக்க இந்த சீரமைப்பு வழிசெய்கிறது. தற்போதைய ஆணையத்தில் காலியாகும் இரு உறுப்பினர்களின் பதவி நிரப்பப்பட மாட்டாது. மேலும், ஒரு கூடுதல் பதவியில் இருப்பவரின் பதவிக் காலம் வரும் 2018, செப்டம்பரில் நிறைவடைகிறது. அத்தோடு அந்தக் காலியிடத்திலும் யாரும் நியமிக்கப்பட மாட்டார்கள்.

மனித உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா 2018-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் மனித உரிமைகள் மேம்பாடு மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றுக்காக மனித உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா 2018க்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

அசாமில் 1951-ஆம் ஆண்டில் தேசிய குடிமக்கள் பதிவை மேம்படுத்தும் திட்டத்திற்கான திருத்தப்பட்ட செலவு மதிப்பீடுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில், நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு, அசாமின் 1951ஆம் ஆண்டின் தேசிய குடிமக்கள் பதிவை மேம்படுத்தும் திட்டத்திற்கு 31.12.2018 முடிய, ரூ.1,220.93 கோடி ஒதுக்கீட்டுக்கான திருத்தப்பட்ட செலவு மதிப்பீடுகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

11 ஏப்ரல் 2018

சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைத் திருப்பி அனுப்புவதற்காக இந்தியாவிற்கும், இங்கிலாந்து மற்றும் வட அயர்லாந்து நாடுகளுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைத் திருப்பி அனுப்புவதற்காக, இந்தியாவிற்கும், இங்கிலாந்து மற்றும் வட அயர்லாந்து இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களின் ஊதியம் மற்றும் படிகளை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களின் ஊதியம் மற்றும் படிகளை மாற்றியமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அரசின் செயலருக்கு இணையான ஊதியம் மற்றும் படிகளைத் துணைநிலை ஆளுநர்களுக்கு வழங்க இது வகை செய்யும்.

இந்தியா மற்றும் சர்வதேசச் சூரியச் சக்திக் கூட்டமைப்பு இடையே தலைமையிட (நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் நாடு) ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவுக்கும் சர்வதேசச் சூரியச் சக்திக் கூட்டமைப்புக்கும் இடையே கையெழுத்தான, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் நாடு தொடர்பான தலைமையிட ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள வெளியுறவு அமைச்சகத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 2018 மார்ச் மாதம் 26-ஆம் தேதி கையெழுத்தாகியது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறையில் வர்த்தகம் புரிதலை எளிதாக்குவதை உயர்த்துதல்

சர்வதேச போட்டி ஏலத்திற்கு (ஐ.சி.பி.) பிறகு பகுதிகள்/ஒப்பந்தப் பரப்புகள் ஆகியவற்றை வெற்றிகரமாக ஏலம் எடுத்தவர்களுக்கு எச்.இ.எல்.பி./ஒ.ஏ.எல்.பி.-ன் கீழ் ஒப்புதல் வழங்குவதற்கு பெட்ரோலியம், இயற்கை வாயு அமைச்சர் மற்றும் நிதி அமைச்சருக்கு அதிகாரம் வழங்கும் நடைமுறைக்கு அமைச்சரவை ஒப்புதல்

இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்க ஒப்பந்தத்தின் கீழ் வரும் பகுதிகளில் நிலக்கரி படுகை மீத்தேன் (சி.பி.எம்.) துரப்பணத்துக்கும், பயன்படுத்துவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய பெட்ரோலியம், இயற்கை வாயு அமைச்சகம் வெளியிட்ட 3.11.2015 தேதியிட்ட அறிவிக்கையின் பிரிவு 3 (xiii) –ஐ எண்ணெய் வயல்கள் வரன்முறை மற்றும் மேம்பாடு சட்டம் 1948-ன் பிரிவு 12-ன் கீழ் திருத்தி அறிவிக்கை வெளியிடுவதற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.

 

 

25 ஏப்ரல் 2018

பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறைகளில் இந்தியாவுக்கும் சவோ டோமி மற்றும் பிரின்சிபி நாட்டுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறைகளில் இந்தியாவுக்கும் மற்றும் சவோ டோமி மற்றும் பிரின்சிபி நாட்டுக்கும் இடையே ஏற்கெனவே கையெழுத்திடப்பட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2018 மார்ச்சில் கையெழுத்திடப்பட்டது.

உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் அதன் தென் கிழக்கு ஆசிய மண்டல அலுவலகம், இந்திய நாட்டு அலுவலகத்தின் மூலம் இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்பாட்டு ஒப்பந்தம் குறித்து அமைச்சரவைக்கு விளக்கப்பட்டது

உலகச் சுகாதார நிறுவனத்தின் சார்பில் அதன் தென்கிழக்கு ஆசிய மண்டல அலுவலகம், இந்திய நாட்டு அலுவலகத்தின் மூலம் இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்பாட்டு ஒப்பந்தம் குறித்துப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுதில்லியில் 2018 மார்ச் 13-ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது.

இந்தியாவுக்கும், சவோ டோமி மற்றும் பிரின்ஸ்பி நாட்டுக்கும் இடையே மூலிகைகள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

இந்தியாவுக்கும், சவோ டோமி மற்றும் பிரின்ஸ்பிக்கும் இடையே மூலிகைத்தாவரங்கள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 14.03.2018 அன்று கையெழுத்திடப்பட்டது.

பிரிக்ஸ் நாடுகளின் மருந்துக் கட்டுப்பாட்டு முகமைகளிடையே மனித உபயோகத்திற்கான மருந்து உற்பத்திப் பொருட்களைக் கட்டுப்படுத்தும் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

பிரிக்ஸ் நாடுகளின் மருந்துக் கட்டுப்பாட்டு முகமைகளிடையே மனித உபயோகத்திற்கான மருந்து உற்பத்திப் பொருட்களைக் கட்டுப்படுத்தும் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

உலோகங்கள் மற்றும் தாதுக்கள் வர்த்தகக் கழகம் மூலம், நீண்டகால அடிப்படையில், ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கு இரும்புத்தாது வழங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உலோகங்கள் மற்றும் தாதுக்கள் வர்த்தகக் கழகம் மூலம், நீண்டகால அடிப்படையில், ஜப்பானீஸ் ஸ்டீல் மில்ஸ் மற்றும் தென்கொரியாவின் போஸ்கோ நிறுவனங்களுக்கு 64% இரும்புத்தன்மை கொண்ட இரும்புத்தாதுவை மேலும் 5 ஆண்டுகளுக்கு (1.4.2018 முதல் 31.3.2023 வரை) வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 5 –வது பட்டியலின்கீழ் ராஜஸ்தானில் பட்டியலிடப்பட்ட பகுதிகளை அறிவிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
 

1981 பிப்ரவரி 12 ஆம் தேதியிட்ட அரசியலமைப்பு உத்தரவு (சி.ஓ) 114 ஐ ரத்துசெய்து புதிய அரசியலமைப்பு உத்தரவைப் பிறப்பிப்பதன் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 5 –வது பட்டியலின்கீழ் ராஜஸ்தானில் பட்டியலிடப்பட்டப் பகுதிகளை அறிவிக்கப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

02 மே 2018

பிரதமரின் முதியோர் வந்தன திட்டத்தின் (பி.எம்.வி.வி.ஒய்.) கீழ், மூத்த குடிமக்கள் முதலீட்டு வரம்பை ரூ.7.5 லட்சத்திலிருந்து, ரூ.15 லட்சம் என இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் மூத்த குடிமக்கள் மாதம் ரூ.10 ஆயிரம் வரை ஓய்வூதியம் பெற வகை செய்கிறது பி.எம்.வி.வி.ஒய். திட்டத்தின்கீழ் சந்தா செலுத்தும் கால வரம்பு 2018 மே 4 ஆம் தேதி முதல் 2020 மார்ச் 31 ஆம் தேதிவரை நீடிக்கப்படுகிறது
அனைத்தையும் உள்ளடக்கிய நிதி நிலைமை மற்றும் சமூக பாதுகாப்பு மீதான அரசின் உறுதிப்பாட்டை திட்டம் எதிரொலிக்கிறது

 

பிரதமரின் முதியோர் வந்தனத் திட்டம், பி.எம்.வி.வி.ஒய்.-ன் கீழ் முதலீட்டு வரம்பை ரூ.7.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தவும், சந்தா செலுத்தும் கால வரம்பை 2018 மே 4 ஆம் தேதி முதல் 2020 மார்ச் 31 ஆம் தேதி வரை விரிவாக்கவும் பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அனைவரையும் உள்ளடக்கிய நிதி நிலைமை மற்றும் சமூக பாதுகாப்பில் அரசின் உறுதிப்பாட்டின் ஒரு அம்சமாக இந்த நடவடிக்கையை அமைச்சரவை மேற்கொண்டது.

இந்திய பட்டய கணக்காளர் பயிற்சி நிறுவனம் மற்றும் தென்னாப்பிரிக்க பட்டயக் கணக்காளர் பயிற்சி நிறுவனம் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு அமிச்சரவை

இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் பயிற்சி நிறுவனம் மற்றும் தென்னாப்பிரிக்கப் பட்டயக் கணக்காளர்கள் பயிற்சி நிறுவனத்திற்கு இடையே பரஸ்பர அங்கீகரத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்திய சுரங்க அமைப்பை மறுசீரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். இணை செயலருக்கு மேல் உள்ள பதவியிடங்களை உருவாக்க மேம்படுத்த நீக்கவும் முடிவு

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் இந்தியச் சுரங்க அமைப்பை மறுசீரமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி இணைச் செயலர் மற்றும் அதற்கு மேல் உள்ள சில பதவிகள் மேம்பாடு, உருவாக்கம் மற்றும் நீக்கம் செய்யப்படும். இந்திய சுரங்க அமைப்பில் தற்போது பணியாளர்களின் எண்ணிக்கை 1477 ஆக உள்ளது.

இந்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு சேவை (ஐ.பி.ஈ.எஸ்.எஸ்) என்ற பெயரில் பெட்ரோலியம் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் (பி.ஈ.எஸ்.ஓ) தொழில்நுட்ப பிரிவில் குழு ‘ஏ பணிகள் அமைப்பிற்கும் பணியாளர் பதவிகள் ஆய்விற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு சேவை (ஐ.பி.ஈ.எஸ்.எஸ்) என்ற பெயரில் பெட்ரோலியம் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் தொழில்நுட்ப பிரிவில் குழு பணிகள் அமைப்பிற்கும் பணியாளர் பதவிகள் ஆய்விற்கும் பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

புதுதில்லியில் நஜாஃப்கர் என்ற இடத்தில் 100 படுக்கைகள் கொண்ட பொது மருத்துவமனை அமைத்து செயல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுதில்லியில் நஜாஃப்கர் என்ற இடத்தில் உள்ள ஊரக சுகாதார பயிற்சி மையத்தில் 100 படுக்கைகள் கொண்ட பொது மருத்துவமனையை ரூ.95 கோடி மதிப்பீட்டில் அமைத்து செயல்படுத்துவதற்கு பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

மருத்துவக் கட்டமைப்பு வசதிகளுக்கு ஊக்கம் பிரதமரின் சுகாதார பாதுகாப்புத் திட்டம் 2019-20 வரை தொடர அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் மருத்துவ கட்டமைப்பு வசதி விரிவாக்கத்திற்கு பெரிய அளவில் வேகம் அளிக்கும் வகையில் பிரதமரின் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை 12 ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்திற்கு பிறகும், 2019-20 வரை நீடிக்க பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ.14,832 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை உருவாக்கவும், அரசு மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

புகையிலை பொருட்களின் சட்டவிரோதமான விற்பனையை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பின் செயல்முறையை ஏற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புகையிலைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்த புகையிலைக் கட்டுப்பாடு குறித்த உலக சுகாதார அமைப்பின் நெறிமுறைகளை ஏற்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்தது. இது உலக சுகாதார அமைப்பின் புகையிலைக்கு எதிரான கட்டமைப்பின் விதி 15ன் கீழ் குறிப்பிடப்பட்டிருப்பது போல புகைபிடித்தல் மற்றும் மெல்லுதல் அல்லது புகையில்லா புகையிலை ஆகிய இரண்டுக்கும் பொருந்தும். உலக சுகாதார அமைப்பின் புகையிலைக்கு எதிரான கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியா ஓர் அங்கமாகும்.

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தர சர்க்கரை ஆலைகளுக்கு நிதி: அமைச்சரவை ஒப்புதல்

மத்திய பொருளாதார விவகாரத் துறைக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (2018, மே 2) நடைபெற்றது. 2017-18ம் ஆண்டு சர்க்கரை ஆலைகள் பிழிவதற்காக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் கரும்புக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 5.50 என்ற அளவில் நிதியுதவி அளிப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு அவர்கள் தர வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தலாம்.

பலதுறை அபிவிருத்தித் திட்டத்தில் மாற்றம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (மே, 2, 2018) கூடிய பொருளாதார விவகாரத்துக்கான மத்திய அமைச்சரவைக் குழு பலதுறை வளர்ச்சித் திட்டத்தை (Multi-sectoral Development Programme) மாற்றியமைப்பதற்கும், பெயர் மாற்றம் செய்வதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, அத்திட்டம் பிரதம பொது வளர்ச்சித் திட்டம்(Pradhan Mantri Jan Vikas Karyakram) என பெயர் மாற்றம் செய்யப்படும். இத்திட்டம் 14வது நிதி ஆணையத்தின் மீதமுள்ள காலத்திலும் நடைமுறையில் இருப்பதற்கும் பொருளாதார விவகார அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

 சென்னை, லக்னோ, குவஹாத்தி விமான நிலையங்களின் அடிப்படை வசதி மேம்பாடுசென்னை, லக்னோ, குவஹாத்தி விமான நிலையங்களின் மேம்பாடு மற்றும் விமான நிலைய அடிப்படை வசதி விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சென்னை, லக்னோ, குவஹாத்தி விமான நிலையங்களில் ஒருங்கிணைந்த முனையங்களை விரிவாக்கி மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. இந்த விமான நிலையங்கள் திட்டம் முறையே ரூ.2467 கோடி, ரூ.1383 கோடி, ரூ.1232 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

வேளாண்மை ஒருங்கிணைந்த பசுமைப் புரட்சி தொடர் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய பொருளாதார விவகாரத் துறைக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டம் இன்று (மே 2, 2018) நடைபெற்றது. வேளாண்மையின் பல்வேறு திட்டங்களை ஒரு குடைக்கீழ் கொண்டு வரும் வகையில் திட்டமிடப்படும் பசுமைப் புரட்சி கிரிஷோணத்தி யோஜனாஎன்ற திட்டத்திற்கு அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டம் 2017-18ம் ஆண்டு முதல் 2019-2020ம் ஆண்டு வரையிலான 12ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தையும் கடந்து செயல்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதற்கான மத்திய நிதி ஒதுக்கீட்டுப் பங்கு ரூ. 33,269.976 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

16 மே 2018

ரயில்வேத் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த இந்தியா-பிரான்ஸ் புரிந்துணர்வு ஓப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவைக்கு எடுத்துரைக்கப்பட்டது.
 

ரயில்வேத் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த இந்திய ரயில்வேக்கும், பிரான்ஸ் நாட்டின் அரசுக்கு சொந்தமான எஸ் என் சி எஃப் மொபிலிட்டிஸ் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஓப்பந்தம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு எடுத்துரைக்கப்பட்டது. 2018 மார்ச் 10ம் தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

சட்டத் துறையில் இந்தியா மற்றும் மொரோக்கோ இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சட்டத் துறையில் இந்தியா மற்றும் மொரோக்கோ இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின் ஏற்பு ஒப்புதல் அளித்தது உள்ளது. இது சட்டம் மற்றும் சட்டம் இயற்றல் துறையில் அனுபவங்கள் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்ள உதவும்.

சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் இந்தியா – ஸ்வசிலாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் இந்தியா ஸ்வசிலாந்து இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏப்ரல் 9, 2018 அன்று கையெழுத்திடப்பட்டது.

தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத்துறையில் ஒத்துழைப்புக்கான இந்தியா – சுரிநாம் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்

தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத்துறையில் ஒத்துழைப்புக்கான இந்தியா சுரிநாம் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்பதல் அளித்தது. இந்த ஒப்பந்தத்தில் தேர்தல் நடைமுறை தொடர்பான அமைப்பு சார்ந்த தொழில்நுட்ப மேம்பாடு, தகவல் பரிவர்த்தனை ஆதரவு, நிறுவன வலுப்படுத்துதல் மற்றும் திறன்மேம்பாடு, பணியாளர்களுக்கான பயிற்சி, அடிக்கடி ஆலோசனைகள் நடத்துதல் போன்ற துறைகள் அறிவு மற்றும் அனுபவ பரிமாற்றத்திற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

பாரம்பரிய மருத்துவத்துறை சார்ந்த ஒத்துழைப்புக்கான இந்தியா மற்றும் ஈக்வடோரியல் கினியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பாரம்பரிய மருத்துவத்துறை சார்ந்த ஒத்துழைப்புக்கான இந்தியா மற்றும் ஈக்வடோரியல் கினியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் வழங்கியது. 2018 ஏப்ரல் 8ம் தேதியன்று இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியாவும் ஈக்விடோரியல் கினியாவும் மூலிகை செடிகள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 

இந்தியாவுக்கும் ஈக்விடோரிய கினியாவுக்கும் இடையே மூலிகை செடிகள் துறையில் ஒத்துழைப்புக்காக செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை பிந்தைய ஒப்புதலை அளித்துள்ளது.

சுரங்கம் மற்றும் நிலவியல் துறையில் இந்தியா மற்றும் மொரோக்கோ இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 

சுரங்கம் மற்றும் நிலவியல் துறையில் இந்தியா மற்றும் மொரோக்கோ இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்பந்தம் 11.04.2018 அன்று புதுதில்லியில் மொரோக்கோ மின்சாரம், சுரங்கங்கள், நிலையான மேம்பாடு அமைச்சகத்திற்கும், இந்திய சுரங்கத்துறை அமைச்சகத்துக்கும் இடையே கையெழுத்தானது.

பாரம்பரிய மருத்துவ முறை துறையில் இந்தியா மற்றும் கொலம்பியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 

இந்திய பாரம்பரிய மருத்துவ துறையை அமைக்க ஒத்துழைப்பு வழங்க இந்தியா மற்றும் கொலம்பியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது உள்ளது. கொலம்பியாவில் இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறையையை ஊக்குவிக்கவும் பரப்பவும் இது உதவும்.

ஜார்கண்ட் மாநிலம் தேவ்கரில் புதிய எய்ம்ஸ் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

ஜார்கண்ட் மாநிலம் தேவ்கரில் புதிய அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனம், எய்ம்ஸ் அமைப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்திற்கு ரூ.1103 கோடி நிதிச்செலவுக்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த எய்ம்ஸ் நிறுவனம் பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும்.

வரி வசூல் தொடர்பான உதவி மற்றும் தகவல் பரிமாற்றம் தொடர்பாக இந்தியாவுக்கும் புருனே டாருசலாமுக்கும் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கும் அமைச்சரவை ஒப்புதல்

வரி வசூல் தொடர்பான உதவி மற்றும் தகவல் பரிமாற்றம் தொடர்பாக இந்தியாவுக்கும் புருனே டாருசலாமுக்கும் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மத்திய ஆந்திர பிரதேச பல்கலைகழகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஆந்திரப் பிரதேசம் அனந்தபூர் மாவட்டத்தின் ஜனதலுரு கிராமத்தில் மத்திய ஆந்திரப் பிரதேசப் பல்கலைகழகம் அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு கொள்கை ரீதியிலான ஒப்புதல் அளித்துள்ளது. பல்கலைகழகம் அமைப்பதிற்கான முதற் கட்ட செலவிற்கான ரூ. 450 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நொய்டா சிட்டி செண்டரில் இருந்து செக்டர் 62க்கு மெட்ரோ ரயிலை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நொய்டாவில் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைக்குப் பெரும் ஊக்கம் அளிக்கும் வகையில், தில்லி மெட்ரோ ரயில் வழித்தடத்தை நொய்டா சிட்டி செண்டரில் இருந்து நொய்டாவின் செக்டர் 62 வரை 6.675 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ. 1967 கோடி செலவில் நீட்டிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்தது. இதில் மத்திய அரசு மானியம் மற்றும் சார்புக் கடனாக ரூ. 340.60 கோடி அளிக்கும்.

தேசிய மனநல மறுவாழ்வு நிறுவனத்தை போபாலில் ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல்

 

போபாலில் தேசிய மனநல மறுவாழ்வு நிறுவனத்தை (என் ஐ எம் எச் ஆர்) ஒரு சங்கமாக ஏற்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த நிறுவனம் 1860 ஆம் ஆண்டின் சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் மத்திய மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கட்டுப்பாட்டில் அமைக்கப்படும். இந்தத் திட்டத்திற்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட மொத்தச் செலவீனம் ரூ.179.54 கோடி. இந்த மதிப்பீட்டில் ஒருமுறை செலவினமான ரூ.128.54 கோடியும், ஆண்டுதோறும் ஏற்படும் செலவீனமாக ரூ.51 கோடியும் அடங்கும்.

மத்தியப் பொது நிறுவனங்களின் வர்த்தக முரண்பாடுகளுக்குத் தீர்வு காணும் நுணுக்கத்தை வலுப்படுத்த அமைச்சரவை ஒப்புதல்

மத்தியப் பொதுத் துறை நிறுவனங்களுக்கு இடையே மற்றும் துறைகளுக்கு இடையே ஏற்படும் வர்த்தக முரண்பாடுகளுக்குத் தீர்வு காணும் நுணுக்கத்தை பலப்படுத்துவதற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்தது. செயலர்கள் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவு நீதிமன்றங்களுக்கு வெளியே பொது துறை நிறுவனங்களின் வர்த்தக முரண்பாடுகளுக்கு விரைவான தீர்வினை எட்டுவதற்கான நிறுவன நுணுக்கம் ஒன்றை இந்த முடிவு ஏற்படுத்தும்.

உயிரி எரிபொருள் 2018 தேசிய கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை உயிரி எரிபொருள் 2018க்கான தேசிய கொள்கைக்கு ஒப்புதல் அளித்த்து.

தில்லி-மும்பை தொழில் பகுதி திட்டத்தின் கீழ் ஹரியானாவில் நங்கல் சவ்தாரி என்ற இடத்தில் “சரக்குப் போக்குவரத்து கிராமம் எனப்படும் ஒருங்கிணைந்த பன்முறை போக்குவரத்து மையத்தின் முக்கிய அடிப்படை வசதி பகுதிகளை உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 

மத்திய தொழிலியல் கொள்கை மேம்பாட்டுத்துறையின் கீழ்கண்ட திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.

  1. ஹரியானா மாநிலம் நங்கல் சவ்தாரி என்ற இடத்தில் சரக்குப் போக்குவரத்து கிராமம் எனப்படும் ஒருங்கிணைந்த சரக்குப் போக்குவரத்து மையம் 886.78 ஏக்கர் நிலத்தில் இரண்டு கட்டங்களில் திட்டத்துக்கான சிறப்பு நோக்க திட்டத்தினால் அமல்படுத்தப்படும்.
  2. முதலாவது கட்ட மேம்பாட்டுக்கென ரூ.1029.49 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட திட்ட மேம்பாட்டுக்கென கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதலாவது கட்ட செலவினத்தில் மொத்த நிலத்தின் விலையான ரூ.266 கோடி அடங்கியிருக்கும். இந்த நில விலையில் இரண்டாம் கட்ட மேம்பாட்டுக்கான நிலமும் அடங்கும்.
  3. திட்டத்தை அமல்படுத்தும் சிறப்பு நோக்க அமைப்புக்கு தேசிய தொழிலியல் மேம்பாடு மற்றும் அமலாக்க அறக்கட்டளை (NICDIT) ரூ.763.49 கோடி முதலீடு வழங்கும். இதில் ரூ.266 கோடி பங்கு மூலதனமாகவும், ரூ.497.49 கோடி கடனாகவும் இருக்கும்.
  4. முக்கியமான அடிப்படை வசதி மேம்பாட்டு ஏலத்தை இந்த சிறப்பு நோக்க அமைப்பு பொறியியல் கொள்முதல் கட்டுமானம் (EPC) அடிப்படையில் மேற்கொள்ளும்.

பிரதமர் விவசாயப் பாசனத்திட்டத்தின் கீழ் நபார்டு வங்கியுடன் குறு பாசன நிதியம் அமைப்பதற்கான முதலீட்டுத் தொகை வழங்க அமைச்சரவை ஒப்புதல்

 

பிரதமர் விவசாயப் பாசனத்திட்டத்தின் கீழ் நபார்டு வங்கியுடன் அர்ப்பணிக்கப்பட்ட குறு பாசன நிதியம் அமைக்க தொடக்க மூலதன நிதியாக ரூ.500 கோடி வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று (16.05.2018) ஒப்புதல் அளித்தது.

பாதுகாப்புச் சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் நெட்வொர்க் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பட்ஜெட் தொகையை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்

 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு ரூ. 11,330 கோடி அளவுக்கு ஸ்பெக்ட்ரம் நெட்வொர்க் திட்டத்திற்கான பட்ஜெட் தொகையை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கெனவே 2012 ஜூலையில் உள்கட்டமைப்புக்காகப் பாதுகாப்புச் சேவைகளுக்கான மாற்றுத் தொடர்பு வலைப்பின்னலை அமைப்பதற்குரிய ஸ்பெக்ட்ரத்தை உருவாக்க ரூ. 13,334 கோடி அளவுக்கு அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்திருந்தது.

 

 

13 ஜூன் 2018

இதர பிற்படுத்தப்பட்டோர் துணை வகைப்பாட்டு ஆணையத்தின் நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை கூடியது. மத்திய பட்டியலில் இதர பிற்படுத்தப்பட்டோர் குறித்த வகைப்பாட்டை ஆராயும் ஆணையத்தின் காலத்தை 2018, ஜூலை 31ம் தேதி வரையில் நீட்டிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது இதற்கான காலக்கெடு ஜூன் 20 ஆகும்.

இந்தியா – பெரு நாடுகளுக்கு இடையில் உடன்பாடு
 

பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இந்தியாவுக்கும் பெரு நாட்டுக்கும் இடையில் பெருநாட்டின் தலைநகர் லிமாவில் 2018, மே மாதம் கையெழுத்திடப்பட்ட உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்திய வியட்நாம் கூட்டு அஞ்சல் தலைகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை புதன்கிழமை கூடியது. அதில், இந்திய அஞ்சல் துறையும் வியட்நாம் அஞ்சல் துறையும் கூட்டாக அஞ்சல் தலை வெளியிடுவது குறித்து விவரிக்கப்பட்டது.

வடகிழக்கு சபையை மாற்றியமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

வடகிழக்கு சபையின் பதவி வழித் தலைவராக மத்திய உள்துறை அமைச்சரை நியமிக்கவும், அனைத்து 8 வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களை அதன் உறுப்பினர்களாக நியமிக்கவும் மத்திய வடகிழக்கு மண்டல மேம்பாட்டு அமைச்சகம் பரிந்துரைத்த திட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த சபைக்கு வடகிழக்கு மண்டல மேம்பாட்டு இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) துணைத் தலைவராக நியமிக்கப்படுவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

2018 அணைகள் பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 

2018 அணைகள் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் திட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ஐசிஎம்ஆர்) மற்றும் பிரான்ஸின் ஐஎன்எஸ்இஆர்எம் நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை மற்றும் பிரான்ஸின் ஐஎன்எஸ்இஆர்எம் நிறுவனங்களுக்கு இடையே 2018 மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

தில்லி, பிரகதி மைதானில் 3.70 ஏக்கர் நிலத்தில் ஹோட்டல் கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் தில்லி, பிரகதி மைதானில் உள்ள 3.70 ஏக்கர் நிலப் பரப்பைத் தனியாருக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு ஒதுக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (India Trade Promotion Organisation) அந்த நிலப்பகுதியில் தனியார் நிறுவனம் ஹோட்டல் கட்டுவதற்கு அனுமதிக்கப்படும். இதற்கு வெளிப்படையான ஏல நடைமுறை கையாளப்படும்.

மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத் திருத்த மசோதா 2013ஐ விலக்கிக்கொள்ளும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத் திருத்த மசோதா 2013 விலக்கிக்கொள்ளும் திட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

 

27 ஜூன் 2018

திட்டமிடுதல் துறையில் இந்தியா சிங்கப்பூர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நகர்ப்புற திட்டமிடுதல் மற்றும் மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை பின் தேதியிட்ட ஒப்புதலை அளித்துள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2018 மே 31ம் தேதி கையொப்பமானது.

சிவில் விமானப்போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்புக் குறித்த இந்தியா – ஜெர்மனிக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்தி்ய அமைச்சரவை ஒப்புதல்
 

சிவில் விமானப்போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்புக் குறித்த இந்தியா ஜெர்மனிக்கு இடையில் கையெழுத்தான இந்தியாவுக்கும் ஜெர்மனிககும் இடையேயான விருப்பம் குறித்த கூட்டுப்பிரகடனம் என தலைப்பு இடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (27.06.2018) ஒப்புதல் அளித்தது. இந்தக் கூட்டு பிரகடனம், பாதுகாப்பான திறம்பட்ட பயனளிக்கக் கூடிய இந்தியா ஜெர்மனிக்கு இடையிலான விமானப்போக்குவரத்து மேம்பாட்டுக்கு உதவும்.

அறிவியல், தொழில்நுட்பம் , புதுமைப் படைப்பு துறைகளில் ஒத்துழைப்புக் குறித்த இந்தியா – டென்மார்க் ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவையிடம் விளக்கம் அளிக்கப்பட்டது

அறிவியல், தொழில்நுட்பம், புதுமைப் படைப்பு துறைகளில் ஒத்துழைப்புக் குறித்த இந்தியா டென்மார்க் ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிடம் இன்று (27.06.2018) விளக்கம் அளிக்கப்பட்டது.

கற்பித்தல், நோயாளிகள் மருத்துவ பராமரிப்பு மற்றும் பொது சுகாதார திட்ட அமலாக்கம் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். மத்திய அரசு, மத்திய அரசின் அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த அதிக அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை கற்பித்தல்/ மருத்துவ பராமரிப்பு / பொது சுகாதார திட்ட அமலாக்கம் ஆகிய பணிகளுக்கு மாற்றவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கற்பித்தல், நோயாளிகள் மருத்துவ பராமரிப்பு மற்றும் பொது சுகாதார திட்ட அமலாக்கம் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கு பிரதமர் திரு நரேந்தி்ர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (27.06.2018) ஒப்புதல் அளித்தது. மத்திய அரசு, மத்திய அரசின் அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த அதிக அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை கற்பித்தல்/ மருத்துவ பராமரிப்பு / பொது சுகாதார திட்ட அமலாக்கம் ஆகிய பணிகளுக்கு மாற்றவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

கடல்சார் விழிப்புணர்வு இயக்க ஒத்துழைப்பு குறித்து இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் இடையிலான நடைமுறைப்படுத்தும் ஏற்பாடு குறித்து அமைச்சரவையில் விளக்கம்

இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் இடையே 2018 மார்ச் 10ம் தேதி கையொப்பம் செய்து கொள்ளப்பட்ட முன்பே உருவாக்கப்பட்ட கடல்சார் விழிப்புணர்வு இயக்க்த்தை நடைமுறைப்படுத்தும் ஏற்பாடு குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்ட்த்தில் விளக்கப்பட்ட்து.

ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக இந்தியா இந்தோனேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவையிடம் விளக்கம்

ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக இந்தியாவும் இந்தோனேசியாவும் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2018 மே 29ம் தேதி செய்து கொள்ளப்பட்டது.

போபால் நினைவு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள பொதுப் பணி மருத்துவ அதிகாரிகள், சிறப்பு நிலை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

போபாலில் உள்ள போபால் நினைவு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் பொதுப் பணி மருத்துவ அதிகாரிகள், சிறப்பு நிலை மருத்துவர்கள் மற்றும் கற்பிக்கும் மருத்துவ ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை மத்திய சுகாதார சேவைகள் மற்றும் இதர மத்திய மருத்துவமனைகள்/ நிறுவனங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு நிகராக 65 ஆக அதிகரிக்கும் வகையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித் துறையின் யோசனைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்தது.

சுகாதாரத் துறையில் இந்தியா மற்றும் பஹ்ரைன் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பஹ்ரைனுடன் இந்தியா கையொப்பமிட பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஒடிசா மாநிலம் சண்டிகோல், கர்நாடகா மாநிலம் பாடூர் ஆகிய இடங்களில் 6.5 எம் எம் டி பெட்ரோலியம் இருப்புகளை கூடுதலாக உருவாக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

ஒடிசா மாநிலம் சண்டிகோல், கர்நாடகா மாநிலம் பாடூர் ஆகிய இரண்டு இடங்களில் 6.5 மில்லியன் மெட்ரிக் டன் (எம் எம் டி) பெட்ரோலியம் இருப்புகளை கூடுதலாக உருவாக்கும் தளத்தகை பெட்ரோலியம் கையிருப்பு ( எஸ் பி ஆர்) திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (27.06.2018) ஒப்புதல் அளித்தது. இந்த இரண்டு எஸ் பி ஆர்-களுக்கான அர்ப்பணிக்கப்பட்ட ஒருமுனை நிறுத்துமிடம் (எஸ் பி எம்) கட்டுமானத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சண்டிகோல் மற்றும் பாடூரில் அமைய உள்ள எஸ் பி ஆர் வசதி நிலத்தடியிலான பாறைக் குகைகளாக இருக்கும். அவை முறையே 4 எம் எம் டி 2.5 எம் எம் டி திறன்கள் கொண்டதாக இருக்கும். 2017-18 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் கூடுதலாக இரண்டு எஸ் பி ஆர்-கள் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தை செயல்படுத்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எத்தனால் கொள்முதல் செய்வதற்கான அமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு எத்தனால் வழங்குவதற்கான விலை மாற்றத்திற்கும் ஒப்புதல்

எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தை செயல்படுத்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எத்தனால் கொள்முதல் செய்வதற்கான அமைப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எத்தனால் விலை மாற்றத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தேசிய ஏற்றுமதி காப்பீட்டு கணக்கு அறக்கட்டளைக்கு தொகுப்பு நிதி அளிக்க அமைச்சரவை ஒப்புதல்

தேசிய ஏற்றுமதி காப்பீடு கணக்கு அறக்கட்டளைக்கு ரூ. 1000 கோடி மானிய உதவி (தொகுப்பு) அளிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

04 ஜூலை 2018

ஜலந்தர் கண்டோன்மெண்ட் சர்வே எண். 408-ல் கேந்திரிய வித்யாலயா கட்ட பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 7.5 ஏக்கர் நிலத்தை கேந்திரிய வித்யாலய சங்கதத்திற்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

ஜலந்தர் கண்டோன்மெண்ட் சர்வே எண். 408-ல் கேந்திரிய வித்யாலயாவை 4 ஆம் எண் கட்ட பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 7.5 ஏக்கர் ஏ-1 நிலத்தை கேந்திரிய வித்யாலய சங்கதத்திற்கு நிரந்தரமாக குத்தாக முறையில் அளிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் இன்று அளித்துள்ளது. இதற்கு ரூ. 1/- வாடகையாக வசூலிக்கப்படும்.

தில்லி கண்டோன்மெண்ட் பகுதியில் கந்தர் லைன்ஸில் 4 ஆம் எண் கேந்திரிய வித்யாலயாவை கட்ட பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை கேந்திரிய வித்யாலய சங்கதத்திற்கு குத்தகை முறையில் அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

தில்லி கண்டோன்மெண்ட் பகுதியில் கந்தர் லைன்ஸில் 4 ஆம் எண் கேந்திரிய வித்யாலயாவை கட்ட பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை நிரந்தரமாங்க கேந்திரிய வித்யாலய சங்கதத்திற்கு அளிக்க பிரதமர் திரு. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு வருடத்திற்கு ரூ. 1/- வாடகையாக வசூலிக்கப்படும்.

தவாங்கில் அமைந்துள்ள 5.99 ஏக்கர் நிலப்பரப்பு உள்ள ஆயுதம் தாங்கிய எல்லைக் காவல்படையின் நிலத்தை அருணாச்சலப் பிரதேச அரசிற்கு மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தவாங்கில் ஆயுதம் தாங்கிய எல்லைப்பாதுகாப்புப் படைக்கு சொந்தமான பெரு விழா மற்றும் பன்னோக்கு மைதானம் அமைக்க அருணாச்சலப் பிரதேச அரசிற்கு மாற்றுவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டம் தர் சாலையில் 2 ஆம் எண் கேந்திரிய வித்யாலயாவை கட்ட பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 7.118 ஏக்கர் நிலத்தை கேந்திரிய வித்யாலய சங்கதத்திற்கு மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டம் தர் சாலையில் 2 ஆம் எண் கேந்திரிய வித்யாலயாவை கட்ட பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 7.118 ஏக்கர் நிலத்தை கேந்திரிய வித்யாலய சங்கதத்திற்கு மாற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் படி 7.118 ஏக்கர் நிலம் 30 வருடத்திற்கு குத்தகையாக அளிக்கப்படும். இதற்கு வருடத்திற்கு ரூ. 1/- வாடகையாக வசூலிக்கப்படும். இந்த குத்தகையை 30 ஆண்டுகளுக்கு இரண்டு முறை நீட்டித்துக்கொள்ளலாம்.

புது தில்லியில் பிஜி தூதரத்திற்கு அளிக்கப்பட்டுள்ள நிலத்திற்கு வணிக கட்டணம் வசூலிப்பதற்கு விலக்கு அளிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

புது தில்லியில் பிஜி தூதரத்திற்கு அளிக்கப்பட்டுள்ள நிலத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நேரத்தில் விதிக்கப்பட்ட வணிக கட்டணத்தை வசூலிப்பதற்கு விலக்கு அளிப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புது தில்லி சாணக்யபுரியில் 2800 சதுர மீட்டர் அளவுடைய பிளாட் எண்: 31-பி பிஜி தூதரகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிஜி நாட்டின் சுவாவில் இந்திய தூதரகத்திற்கு வழங்கப்பட்ட நிலத்திற்கு அளிக்கப்பட்ட அதே சலுகைகள் மற்றும் விதிவிலக்குகள் ஆகியவற்றை பிஜிக்கும் அளிக்கும் வகையில் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் உடன்படிக்கை 1996 மற்றும் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் செயல்பாடு மற்றும் ஃபோனோகிராம் உடன்படிக்கை 1996க்கு உரிமை கொண்டாட மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் உடன்படிக்கை 1996 மற்றும் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் செயல்பாடு மற்றும் ஃபோனோகிராம் உடன்படிக்கை 1996-ன் உரிமைகளை, இணையதளம் மற்றும் டிஜிட்டல் சூழலுக்கும் நீட்டிக்க மத்திய வர்த்தக தொழில்துறையின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை அளித்த கருத்துருவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இணையதளம் மற்றும் செல்போன் வாயிலாக மின்னணு வணிகத்திற்கான வர்த்தக வாய்ப்புகள் பற்றி, விரிவாக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பு, உரிமையாளர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு வழங்கி, வணிக மயமாக்குவதன் மூலம், அறிவுசார் சொத்துரிமையின் மதிப்பை, அறிந்துகொள்ளும் நோக்கில், 12 மே 2016-அன்று அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய அறிவுசார் சொத்துரிமை கொள்கைக்கு செயல் வடிவம் அளிக்கும் வகையில், இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய பட்டயக் கணக்கர்கள் பயிற்சி நிறுவனம் & சவுதி அரேபியாவின் சான்றிதழ் பெற்ற பொது கணக்காளர்கள் அமைப்புகளிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பெரு நிறுவன ஆளுகை, தொழில்நுட்ப ஆராய்ச்சி & ஆலோசனை, தர உறுதிபாடு, தடயவியல் சார்ந்த கணக்கீடு, சிறு மற்றும் நடுத்தர செயல்பாடுகள் தொடர்பான பிரச்சினைகள், இஸ்லாமிய நிதி, தொழில் வல்லமை மேம்பாடு மற்றும் கணக்கு பதிவியல் துறையில் இருதரப்பு நலன் சார்ந்த துறைகளில், இந்திய பட்டயக் கணக்கர்கள் பயிற்சி நிறுவனம் & சவுதி அரேபியாவின் சான்றிதழ் பெற்ற பொது கணக்காளர்கள் அமைப்பும் 2014ஆம் ஆண்டு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அகதிகள் மற்றும் தாயகம் திரும்பியோருக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்கும் முன்னோடி திட்டங்களைத் தொடர அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தோர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு என்னும் முன்னோடி திட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சகத்தின் 8 திட்டங்களை 2020 மார்ச் வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்தது.

திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா விமான நிலையத்தின் பெயரை மகாராஜா பீர் பிக்ரம் மாணிக்ய கிஷோர் விமான நிலையம் என்று பெயர்மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா விமான நிலையத்தின் பெயரை மகாராஜா பீர் பிக்ரம் மாணிக்ய கிஷோர் விமான நிலையம் என்று பெயர்மாற்றம் செய்ய பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. மகாராஜா பீர் பிக்ரம் மாணிக்ய கிஷோர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திரிபுரா மாநில மக்களும் அரசும் நெடுங்காலமாக கேட்டுக்கொண்டிருக்கும் கோரிக்கையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மண்டல ஊரக வங்கிகளின் மறு முதலீட்டுத் திட்டத்தை 2019 - 20 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மண்டல ஊரக வங்கிகளின் மறு முதலீட்டுத் திட்டத்தை, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு, அதாவது, 2019 - 20 வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மண்டல கிராமிய வங்கிகள், இடர்பாடு மதிப்பீட்டுடன்கூடிய கையிருப்பு வீதத்தை குறைந்தபட்ச முதலீட்டை ஒன்பது சதவீத அளவுக்கு பராமரிக்க வகைசெய்யப்பட்டுள்ளது.

சட்டம் மற்றும் நீதித் துறையில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஆலோசனைக் குழுவை நிறுவுதல் குறித்து இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சட்டம் மற்றும் நீதித் துறையில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஆலோசனைக் குழுவை நிறுவுதல் குறித்து இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான ஒப்புதல் மத்திய அமைச்சரவை அளித்துள்ளது.

தேசிய துப்புரவு தொழிலாளர்கள் ஆணையத்தில் ஒரு துணை தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தேசிய துப்புரவு தொழிலாளர்கள் ஆணையத்தில் ஒரு துணை தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியை உருவாக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மரபணு தொழில்நுட்ப (பயன் மற்றும் பயன்பாடு) வரன்முறை மசோதா 2018க்கு அமைச்சரவை ஒப்புதல்
மரபணு ஆய்வகங்கள் அங்கீகாரம் மற்றும் வரன்முறை கட்டாயம்

மரபணு தொழில்நுட்ப (பயன் மற்றும் பயன்பாடுகள்) வரன்முறை மசோதா 2018க்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

போயிங் 747-400 விமான சிறப்பு கூடுதல் பிரிவு விமானங்களுக்கான இழப்பீட்டை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல்
 

சிறப்பு கூடுதல் பிரிவு விமானங்களுக்கான செயல்பாட்டு செலவுகளை பொருந்தும் வரிகளுடன் சேர்த்து ரூ. 336.24 கோடியில் இருந்து பொருந்தும் வரிகளுடன் சேர்த்து ரூ. 534.38 கோடியாக பி.747-400 விமானங்களை பாராமரிப்பதற்காக 10 சதவீத இழப்பீட்டு செலவு உயர்வுடன் விரிவுபடுத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

2022-க்குள் உயர் கல்வித் துறையில் கட்டமைப்பு வசதி மற்றும் நடைமுறைகளை மேம்படுத்த மத்திய அமைச்சரவை அனுமதி

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 2022-க்குள் உயர் கல்வித் துறையில் கட்டமைப்பு வசதி மற்றும் நடைமுறைகளை மேம்படுத்த ஏதுவாக, உயர் கல்வி நிதியுதவி முகமையின் முதலீட்டை ரூ.10,000 கோடி அளவுக்கு உயர்த்தி, ரூ.1,00,000 கோடி திரட்டுவதற்கான திட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது.

2018-19 பருவத்தில் அனைத்து கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல்

விவசாயிகளின் வருவாய்க்கு பெரும் ஊக்கம் அளிக்கும் வகையில் 2018-19 பருவத்தில் அனைத்து கரீப் பயிர்களுக்கும் அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

18 ஜூலை 2018

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி சிறை கைதிகளை விடுவிக்கும் சிறப்புத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி சிறைக் கைதிகளை விடுவிக்கும் சிறப்புத் திட்டத்திற்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மண்டல விமானப் போக்குவரத்து கூட்டு: பிரிக்ஸ் நாடுகளுடன் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு கேபினட் ஒப்புதல்
 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையில் மண்டல அளவில் விமானப் போக்குவரத்து தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் இந்திய – கியூபா இடையில் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு கேபினட் ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், இந்திய பாரம்பரிய மருத்துவ முறை, ஹோமியோபதி மருத்துவம் ஆகியவை குறித்து இந்தியாவுக்கும் கியூபா நாட்டுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கெனவே 2018, ஜூன் 22ம் தேதி கையெழுத்தாகிவிட்டது.

மருந்துப் பொருட்கள் தயாரிப்புத் துறையில் ஒத்துழைப்பு அளிப்பதற்கான இந்தியா-இந்தோனேஷியா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

மருந்துப் பொருட்கள் தயாரிப்பு, உயிரியல் உற்பத்தி, அழகு சாதனப் பொருட்கள் ஒழுங்குமுறை குறித்த துறையில் இந்தியா-இந்தோனேஷியா இடையே, ஜகார்த்தாவில் இந்த ஆண்டு மே 29ஆம் தேதி கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்தியா-அயர்லாந்து பட்டயக் கணக்காளர் நிறுவனங்கள் இடையே 2010ஆம் ஆண்டு கையெழுத்தான பரஸ்பர அங்கீகார உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

இந்தியாவின் பட்டயக் கணக்காளர் நிறுவனத்திற்கும், அயர்லாந்தின் பொதுக் கணக்குகள் சான்றளிப்பு நிறுவனத்திற்கும் இடையே 2010ஆம் ஆண்டு கையெழுத்தான பரஸ்பர அங்கீகார உடன்படிக்கை செயல் வடிவம் பெறும் வகையில், அதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கணக்கு குறித்த ஞானத்தை மேம்படுத்துவது, தொழில்முறை மேம்பாடு, இருநாடுகளின் பட்டயக் கணக்கு தொழிலை மேம்படுத்தும் வகையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் – பஹ்ரைன் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் பிரதமர் திரு. நரேநதிர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில், இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்துக்கும் (Institute of Chartered Accountants of India) பஹ்ரைன் நாட்டில் உள்ள பஹ்ரைன் வங்கியியல் மற்றும் நிதிய நிறுவனத்துக்கும் (Bahrain Institute of Banking and Finance) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பட்டயக் கணக்காளர்கள் குறித்த இந்தியா-தான்சானியா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 

இந்தியாவின் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தில் மற்றும் தான்சானியாவின் கணக்காளர்கள் மற்றும் தணிக்கையாளர்களின் தேசிய வாரியம் ஆகியவற்றுக்கு இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. உறுப்பினர் மேலாண்மை, தொழில்முறை மரபுகள், ஆராய்ச்சி நுட்பம், தொழில்முறை மேம்பாடு, பயிற்சி, தரமான தணிக்கை உள்ளிட்ட பிரிவுகளில் பரஸ்பர ஒத்துழைப்பு கட்டமைப்பை ஏற்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

2018-19 சர்க்கரை பருவத்தில் சர்க்கரை ஆலைகள் நியாயமான, லாபகரமான விலையை நிர்ணயிக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

2018-19 சர்க்கரை பருவத்தில் கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ.275 என்ற நியாயமான, லாபகரமான விலை நிர்ணயம் செய்வதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 10 சதவீத அடிப்படை உற்பத்தியில் உள்ள கரும்புக்கு இந்த விலை பொருந்தும். 10 சதவீதத்திற்கும் கூடுதலாக ஒவ்வொரு 0.1 சதவீத உயர்வுக்கும் குவிண்டாலுக்கு ரூ.2.75 உயர்த்தி வழங்கவும் இந்த முடிவு வகை செய்கிறது. கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில் கரும்பு உற்பத்திச் செலவினம் இந்த கரும்பு பருவத்தில் குவிண்டாலுக்கு ரூ.155 என எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம், தேவரியாவில் சேலம்பூர் மருத்துவக் கல்லூரியை நிறுவ அமைச்சரவை ஒப்புதல்
 

மத்திய நிதியுதவித் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் ரூ. 250 கோடி செலவில் தேவரியாவில் புதிய மருத்துவக் கல்லூரியை நிறுவ உத்தரப்பிரதேச மாநில அரசு அளித்துள்ள முன்மொழிவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

2017 – 18 முதல் 2019 – 20 வரையிலான காலத்திற்குச் சிறுபான்மைச் சமூக மாணவர்களுக்கான (i) மெட்ரிக்கிற்கு முந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டம் (ii) மெட்ரிக்கிற்கு பிந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டம் மற்றும் (iii) தகுதி வழிவகைக் கல்வி உதவித் திட்டம் ஆகியவை தொடர அமைச்சரவை ஒப்புதல்

 

2017 – 18 முதல் 2019 – 20 வரையிலான காலத்திற்கு, ரூ. 5,338.32 கோடி மொத்த மதிப்பீட்டில் அறிவிக்கை செய்யப்பட்ட ஆறு சிறுபான்மைச் சமூக மாணவர்களுக்கான (i) மெட்ரிக்கிற்கு முந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டம் (ii) மெட்ரிக்கிற்கு பிந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டம் மற்றும் (iii) தகுதி வழிவகைக் கல்வி உதவித் திட்டம் ஆகியவை தொடர்வதற்கான முன்மொழிவிற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் 70 லட்சம் மாணவர்கள் பலனடைவார்கள்.

மாரத்வாடாவின் விதர்பா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நீண்ட நாட்களாக வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏனைய பகுதிகளின் நீர்ப்பாசனத் திட்டங்களின் சிறப்புத் தொகுப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்

 

மாரத்வாடாவின் விதர்பா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நீண்ட நாட்களாக வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏனைய பகுதிகளின் 83 சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களையும், 8 பெரிய / நடுத்தரப் பாசனத் திட்டங்களையும் நிறைவு செய்வதற்கான மத்திய நிதியுதவித் திட்டத்தை அமல்படுத்துவதற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

01 ஆகஸ்ட் 2018

01 ஆகஸ்ட் 2018

வெளிநாடுகளில் பாதுகாப்பு சார்ந்த முக்கியமான கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களை பெற வகை செய்யும் சலுகை நிதியுதவித் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வெளிநாடுகளில் பாதுகாப்பு சார்ந்த முக்கியமான கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களை பெற வகை செய்யும் சலுகை நிதியுதவித் திட்டத்தின் முதல் நீட்டிப்பிற்கு இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியத்தை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியத்தை மாற்றியமைப்பதற்கான யோசனைகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மரபுசாரா ஹைட்ரோ கார்பன் துரப்பணப்பணி மற்றும் பயன்படுத்துவதற்கான கொள்கை விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஷேல் எண்ணெய் / எரிவாயு, மீத்தேன் எரிவாயு போன்ற மரபுசாரா ஹைட்ரோ கார்பன் பொருட்களின் துரப்பணப்பணி மற்றும் அவற்றை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வகைசெய்யும் கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவை தற்போது நடைமுறையில் உள்ள உற்பத்தி பகிர்வு ஒப்பந்தம், நிலக்கரிப் படுகை மீத்தேன் ஒப்பந்த அடிப்படையில், குறியீடு செய்யப்பட்ட இடங்களில், உரிமம் பெற்ற / குத்தகைக்கு விடப்பட்ட பகுதிகளில் இதுவரை எடுக்கப்படாமல் உள்ள மரபுசாரா ஹைட்ரோ கார்பன் பொருட்களை எடுப்பதற்கு தற்போதுள்ள ஒப்பந்ததாரர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.

ஐ.டி.பி.ஐ. வங்கியில் கட்டுப்படுத்தும் பங்குரிமையை ஆயுள் காப்பீட்டுக் கழகம் பெறவிருக்கிறது இவ்வங்கியில் அரசின் பங்குகளை 50%க்கும் கீழாக குறைத்திட அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது

ஐடிபிஐ வங்கியில் இந்திய அரசின் பங்குகளை 50 சதவீதத்திற்குக் கீழ் குறைப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த வங்கியின் கட்டுப்படுத்தும் பங்குகளை ஆயுள் காப்பீட்டுக் கழகம் பெறவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒதுக்கீட்டின் மூலமாக வங்கியை வளர்ப்பவராகவும், சொத்தின் சம பங்குகள், வங்கி நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் அரசின் உரிமையை விட்டுக் கொடுப்பதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

7 மாநிலங்களில் 13 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்கவும், மத்தியப் பிரதேசத்தின் ரட்லம் மாவட்டம் அலோட்டில் 2-வது ஜவஹர் நவோதயா வித்யாலயா தொடங்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில், 7 மாநிலங்களில் 13 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்கவும், மத்தியப் பிரதேசத்தின் ரட்லம் மாவட்டம் அலோட்டில் 2-வது ஜவஹர் நவோதயா வித்யாலயா தொடங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் செலுத்திய பங்கு மூலதனத்தில் 15% அளவுக்கு புதிதாக பங்கு வெளியிட மத்திய அமைச்சரவை அனுமதி

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் செலுத்திய பங்கு மூலதனத்தில் 15 சதவீத அளவிற்கு புதிதாக 13,87,82,700 பங்குகளை, தலா ஐந்து ரூபாய் மதிப்பிலான பங்குகளாக, தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மூலம், பங்கு பரிவர்த்தனை வாரியம் மற்றும் இதர விதிமுறைகளின்படி வெளியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

-----------------

09 ஆகஸ்ட் 2018

சுகாதார ஒத்துழைப்பில் இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 

 

சுகாதாரா ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய பட்டியலில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை துணை பிரிவுப்படுத்தும் பிரச்சனை தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலத்தை நீடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 

மத்திய பட்டியலில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை துணை பிரிவுப்படுத்தும் பிரச்சனை தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலத்தை இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை நீடிக்க இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் மொழிபெயர்ப்பாளர் பணி பிரிவில் இணை செயலர் அளவிலான இரண்டு பணியிடங்களை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

 

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் மொழிபெயர்ப்பாளர்  பணிப் பிரிவில்இரண்டு இணை செயலர் அளவிலான இரண்டு பணியிடங்களை உருவாக்க பிரதமர்திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்தியா-கனடா நாடுகளில் உள்ள பட்டய கணக்காயர் நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 

இந்தியா-கனடா நாடுகளில் உள்ள பட்டய கணக்காயர் நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநிலம் கர்மாவில் புதிய மருத்துவக் கல்லூரியை அமைக்க மத்திய மருத்துவமனையை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஜார்க்கண்ட் மாநிலம் கர்மாவில் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கி வரும் மத்திய மருத்துவமனையை அதன் நிலம் மற்றும் கட்டிடங்களுடன், புதிய மருத்துவ கல்லூரியை உருவாக்க ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு இலவசமாக வழங்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

வர்த்தக தீர்வு ஒத்துழைப்பு குறித்து இந்தியா மற்றும் கொரியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


 

வர்த்தக தீர்வு ஒத்துழைப்பு குறித்து இந்தியா மற்றும் கொரியா இடையே சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை செயல்பாட்டிற்குப் பிந்தைய ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் மு.கருணாநிதி மறைவுக்கு மத்திய அமைச்சரவை இரங்கல்
 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, சென்னை காவேரி மருத்துவமனையில் ஏழாம் தேதி காலமான தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் மு. கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது.

இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டப் பின்னர் மத்திய அமைச்சரவை இரண்டு நிமிட நேரம் மவுன அஞ்சலி செலுத்தியது.

கோரக்பூர், சிந்திரி உர ஆலைகள் மீண்டும் செயல்பட நில குத்தகை ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்ற மத்தியஅமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்காணும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது:

  • இந்துஸ்தான் உரம் மற்றும் ரசாயன நிறுவனத்துக்கு (Hindustan Urvarak & Rasayan Limited -HURL) குத்தகை அடிப்படையில் நில ஒதுக்கீடு செய்தல்;e
  • உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர், ஜார்க்கண்ட் மாநிலம் சிந்திரி ஆகியஇடங்களில் உள்ள இந்திய உரக் கழகத்தின் (Fertilizer Corporation of India Limited - FCIL) ஆலைப் பிரிவுகளுக்கும், பரோனியில் இந்துஸ்தான் உரம் மற்றும்ரசாயன நிறுவனம் (HURL) நடத்தும் இந்துஸ்தான் உரக் கழகம் (Hindustan Fertilizer Corporation Limited - HFCL) ஆகியவை மீண்டும் செயல்படுவதற்குசலுகையும் நிலக் குத்தகையும் அளிக்க வகை செய்தல்;
  • இந்த மூன்று ஆலைப் பிரிவுகளுக்காக இந்திய உரக் கழகம், இந்துஸ்தான் உரக்கழகம் மற்றும் இந்துஸ்தான் உரம் மற்றும் ரசாயன நிறுவனம் ஆகியவற்றுக்குஇடையில் ஏதேனும் மாற்று ஒப்பந்தங்களும் இதர ஒப்பந்தங்களும்கையெழுத்தாக வேண்டுமானால், அவற்றுக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தைஅமைச்சகங்கள் கமிட்டிக்கு (Inter-Ministerial Committee) அளித்தல்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இணைந்து வெளியிட்ட அஞ்சல் தலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 “இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான 20 வருட உத்திசார் கூட்டாண்மை” என்ற தலைப்பில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள அஞ்சல் தலை குறித்து புதுதில்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.

அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த இந்தியா- இந்தோனேசியா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்தியா - இந்தோனேசியா இடையிலான அறிவியல் தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையில் (NDRF) கூடுதலாக மேலும் நான்கு அணிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் புதுதில்லியில் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்றது. அதில், தேசிய பேரிடர் மீட்புப் படையில் (NDRF) கூடுதலாக நான்கு பட்டாலியன்களை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்தப் படையை வலுப்படுத்துவதற்கு ரூ. 637 கோடி அளிக்கவும் இசைவு தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களுக்கு நல்வாழ்வுத் திட்டங்களுக்கு பயன்படுத்த வசதியாக மானிய விலைப் பருப்பு வகைகளின் ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

விலை ஆதரவு திட்டங்களின்கீழ் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ள பயறு வகைகளை பல்வேறு நலத்திட்டங்களுக்காக பயன்படுத்துவதற்கு ஏற்ப அவற்றை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கீடு செய்ய, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

பீகாரில் கோசி ஆற்றின் குறுக்கே புதிய நான்கு வழி பாலம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பீகார் மாநிலம் புலாவத் என்னும் இடத்தில் 6.930 கிலோ மீட்டர் தொலைவுக்கு நான்கு வழி பாலம் அமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும் மூன்றாண்டுகள் நீடிப்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வியைத் தொடர உதவித் தொகை

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 10ம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திக் கொள்வதைத் தடுத்து, அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க உதவும் வகையிலான உதவித் தொகை திட்டம் திருத்தியமைக்கப்பட்டு, மேலும் மூன்றாண்டுகளுக்கு அமலில் இருக்கும். இதற்கான ஒப்புதல் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஆகஸ்ட் 9) கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அளிக்கப்பட்டது.

12-ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்கு பின்பும் பிரதமர் கிராமசாலைகள் திட்டம் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் கிராம சாலைகள் திட்டம் 12ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்திற்குப் பின்பும் தொடருவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

------------------

29 ஆகஸ்ட் 2018

இந்தியா மற்றும் பல்கேரியா இடையே சுற்றுலா துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு, இந்தியா மற்றும் பல்கேரியா இடையேயான சுற்றுலா துறையில் ஒத்துழைப்பை வலுபடுத்தும் வகையில் சுற்றுலா தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ரயில்வே துறையில் இந்தியாவிற்கும் கொரிய குடியரசுக்கும் இடையேயான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி மத்திய அமைச்சரவைக்கு விவரிக்கப்பட்டது

இந்திய ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பிற்கும், கொரிய குடியரசின் ரயில்வே ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையோன ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு விவரிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் ரயில்வே துறையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், முன்னெடுத்துச் செல்லவும் எட்டப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் தேதியன்று கையெழுத்தானது.

கால்நடை பராமரிப்பு, பால் பொருட்கள் மற்றும் மீன் வளத்துறையில் ஒத்துழைப்புக்காக இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி அமைச்சரவை கூட்டத்தில் விவரிக்கப்பட்டது
 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளுடன் கால்நடை பராமரிப்பு, பால் பொருட்கள் மற்றும் மீன்வளத் துறை ஆகியவற்றில் ஒத்துழைப்புக்காக செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து விவரிக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பதம் 17.04.2018 அன்று கையெழுத்தானது.

இந்தியாவுக்கும் மொரோக்கோவுக்கும் இடையே விமான சேவைகளுக்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இந்தியாவுக்கும் மொரோக்கோவுக்கும் இடையேயான திருத்தப்பட்ட விமான சேவைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியா மற்றும் ருவாண்டா இடையேயான வர்த்தக ஒத்துழைப்பு கட்டமைப்பிற்கு அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு இந்தியா மற்றும் ருவாண்டா இடையேயான வர்த்தக ஒத்துழைப்பு கட்டமைப்பிற்கு, செயலாக்கத்திற்கு பிந்தைய ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த வர்த்தக ஒத்துழைப்பு கட்டமைப்பு 23 ஜூலை, 2018 கையெழுத்திடப்பட்டது.

காப்பீட்டு ஒழுங்குமுறை துறையில் இந்தியா அமெரிக்கா இடையே புரிந்துணர்வு இஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மற்றும் அமெரிக்கவின் ஃபெடரல் காப்பீட்டு அலுவலகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்தது.

 

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத கூடுதல் அகவிலைப்படி அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக இரண்டு சதவீத அகவிலைப்படி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய அஞ்சலக பணப்பட்டுவாடா வங்கி அமைக்கும் திட்ட மதிப்பீட்டை திருத்தியமைக்க அமைச்சரவை ஒப்புதல் அஞ்சலகங்களில் வங்கிச் சேவைகளுக்கு ஊக்கம்
 

இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி அமைப்பதற்கான திட்ட மதிப்பீட்டை ரூ. 800 கோடியில் இருந்து ரூ. 1435 கோடியாக திருத்தியமைப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

புவி அறிவியல் அமைச்சகத்தின் “கடல் சேவைகள், தொழில்நுட்பம், ஆழ்ந்து கவனித்தல், வளங்களின் மாதிரி மற்றும் அறிவியல் எனப்படும் (ஓ-ஸ்மார்ட்) திட்டத்திற்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல்

 

பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு “கடல் சேவைகள், தொழில்நுட்பம், ஆழ்ந்து கவனித்தல், வளங்களின் மாதிரி மற்றும் அறிவியல் எனப்படும் (ஓ-ஸ்மார்ட்)” திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

--------------

 

செப்டம்பர் 12, 2018

ராஷ்டிரிய ரசாயன மற்றும் உரத்தொழிற்சாலையின் இடத்தை மும்பை மாநகர மண்டல மேம்பாட்டு ஆணையத்திற்கு மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
ராஷ்டிரிய ரசாயன மற்றும் உரத்தொழிற்சாலையின் இடத்தை கிரேட்டர் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு வழங்க முடிவு மற்றும் மாற்று மேம்பாட்டு உரிமைகளை விற்கவும், அது தொடர்பான சான்றிதழ்களைப் பெறவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 

புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்கண்ட இடம் மாற்றங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

விண்வெளி ஆய்வு, அறிவியல் மற்றும் பயன்பாடு குறித்த இந்தியா – புருனே இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் இந்தியாவுக்கும் புருனே நாட்டுக்கும் இடையில் விண்வெளி ஆய்வு, அறிவியல், செயற்கைக்கோள் தகவல் தடமறிதல், தகவல் பெறுதல் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து விவரிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2018, ஜூலை 19ம் தேதி கையெழுத்தானது.

பிரிக்ஸ் நாடுகளுடனான வங்கிகள் மற்றும் இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இடையே கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரிக்ஸ் நாடுகளுடனான வங்கிகள் மற்றும் இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இடையே கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு இன்று புதுதில்லியில் நடைபெற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விண்வெளியை அமைதி நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதில் ஒத்துழைக்க இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

விண்வெளியை அமைதி நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதில் ஒத்துழைக்க இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவரிக்கப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 26.07.2018 அன்று ஜோகன்னஸ்பர்கில் கையெழுத்தானது.

வேளாண்மை மற்றும் வேளாண் சார் துறைகளில் இந்தியா மற்றும் எகிப்து இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

வேளாண்மை மற்றும் வேளாண் சார் துறைகளில் இந்தியா மற்றும் எகிப்து இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சுற்றுலா துறையில் உள்ள ஒத்துழைப்பை வலுபடுத்த இந்தியா மற்றும் மால்டா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

சுற்றுலா துறையில் உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா மற்றும் மால்டா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அதிகரிப்பு முறைகளை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் கொள்கை வகுப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல்

எண்ணெய் மற்றும் எரிவாயுவின் உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக தற்போதுள்ள எண்ணெய் வளப் பகுதிகளில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் முறைகள் / தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தலுக்கான கொள்கையை வகுப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்க பிரதம மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கத்திற்கு (PM-AASHA) மத்திய அமைச்சரவை ஒப்புதல்

விவசாயிகளுக்கு ஆதரவான திட்டங்களை மத்திய அரசு உத்வேகமாகச் செயல்படுத்தும் வகையிலும் விவசாயிகளின் அர்ப்பணிப்பைப் போற்றும் வகையிலும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை பிரதம மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கம் (Pradhan Mantri Annadata Aay SanraksHan Abhiyan - PM-AASHA) என்ற திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது

தேசிய வடிவமைப்புக் கல்வி நிறுவன (என் ஐ டி) சட்டம் 2014-ல் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்

ஆந்திரபிரதேசத்தில் அமராவதி / விஜயவாடா தேசிய வடிவமைப்புக் கல்வி நிறுவனம், மத்தியப்பிரதேச மாநிலம் போபால் தேசிய வடிவமைப்புக் கல்வி நிறுவனம், அசாம் மாநிலம் ஜோர்ஹட் தேசிய வடிவமைப்புக் கல்வி நிறுவனம்,அரியானா மாநிலம் குருக்ஷேத்ரா தேசிய வடிவமைப்புக் கல்வி நிறுவனம் ஆகிய நான்கு புதிய தேசிய வடிவமைப்புக் கல்வி நிறுவனங்களை தேசிய வடிவமைப்புக் கல்வி நிறுவனச் சட்டம் 2014-ன் அதிகார எல்லைக்குள் கொண்டுவரவும், அகமதாபாதில் உள்ள தேசிய வடிவமைப்புக் கல்வி நிறுவனத்திற்கு இணையாக இவற்றை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக அறிவிக்கவும், வகை செய்யும் என்.ஐ.டி சட்டம் 2014 திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் அனுமதி வழங்கியுள்ளது

எத்தனால் விலை நிர்ணயம் மற்றும் மறு சீரமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

பி ஹெவி மொலாசஸ் / பகுதி அளவான கரும்புச் சாறு ஆகியவற்றிலிருந்து பெறப்படும் எத்தனாலுக்கு விலை நிர்ணயம் மற்றும் மறுசீரமைப்புக்கும், 100 சதவீத கரும்புச்சாறு அடிப்படையிலான எத்தனாலுக்கு விலை நிர்ணயம் செய்வதற்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

2017-18 முதல் 2019-20 திறன் மேம்பாட்டுத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய பொருளாதார விவகாரத் துறை அமைச்சரவைக் கமிட்டி கூட்டத்தில், திறன் மேம்பாட்டுத் திட்டம் 2017-18 முதல் 2019-20 வரையிலான காலத்துக்கு நீடிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய ரயில்வேயில் மின்மயமாக்கப்படாமல் எஞ்சியுள்ள அகல ரயில்பாதைகளை மின்மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்திய ரயில்வேயில் மின்மயமாக்கப்படாமல் எஞ்சியுள்ள அகல ரயில்பாதைகளை மின்மயமாக்க பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது

------

செப்டம்பர் 26, 2018

இந்திய மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே போதைப் பொருள், மருந்துப்பொருட்கள், மன நிலைமாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்கள், ஊக்க மருந்துகளை சட்டவிரோதமாக கடத்துவதை தவிர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்திய மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே போதைப் பொருள், மருந்துப்பொருட்கள், மன நிலைமாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்கள், ஊக்க மருந்துகளை சட்டவிரோதமாக கடத்துவதை தடுக்க பரஸ்பரம் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சட்டம் மற்றும் நீதி துறையில் இந்திய மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்திய மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே சட்டம் மற்றும் நீதி துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா – உஸ்பெகிஸ்தான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
 

சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா – உஸ்பெகிஸ்தான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உஸ்பெகிஸ்தான் ஆண்டிஜன் பகுதியில் உஸ்பெகிஸ்தான்-இந்தியா இடையேயான தடையற்ற மருந்து மண்டலம் உருவாக்குதல் குறித்து இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையேயான ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

உஸ்பெகிஸ்தான் ஆண்டிஜன் பகுதியில் உஸ்பெகிஸ்தான்-இந்தியா இடையேயான தடையற்ற மருந்து மண்டலம் உருவாக்குதல் குறித்து இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையேயான ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய பட்டய கணக்கர் நிறுவனம் மற்றும் கென்யா சான்றுபெற்ற பொதுக் கணக்கர் நிறுவனம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
 

இந்திய பட்டய கணக்கர் நிறுவனம் (ஐ.சி.ஏ.ஐ.) மற்றும் கென்யாவின் சான்றுபெற்ற பொதுக் கணக்கர் நிறுவனம் (ஐ.சி.பி.ஏ.கே.) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

மருத்துவ துறையில் இந்திய மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய- அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே மருத்துவ துறையில் வர்த்தகம், தொழிற்சாலை, ஆய்வு மற்றும் வளர்ச்சி ஆகியவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில கையெழுத்திட பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், உஸ்பெகிஸ்தான் அதிபர் அக்டோபர் 1, 2018 இந்தியா வரும் போது கையெழுத்திட உள்ளார்.

வேளாண் மற்றும் அதைச் சார்ந்த தொழில்துறைகளில் இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே கூட்டு ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளில் இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே கூட்டு ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு ஒப்புதல் அளித்தது.

சமூகம், பொருளாதாரம், தொழில்துறை மற்றும் பிராந்திய வளர்ச்சி திட்டங்களுக்காக நித்தி ஆயாக் மற்றும் ரஷிய பொருளாதார வளர்ச்சி அமைச்சகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

சமூகம், பொருளாதாரம், தொழில்துறை மற்றும் பிராந்திய வளர்ச்சி திட்டங்களுக்காக நித்தி ஆயாக் மற்றும் ரஷிய பொருளாதார வளர்ச்சி அமைச்சகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பயன்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்துறை தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் தென் கொரியா இடையே உள்ள கூட்டுறவை மேம்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

பயன்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்துறை தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் தென் கொரியா இடையே உள்ள கூட்டுறவை மேம்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தென் கொரியா அதிபர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட போது ஜூலை 9, 2018 அன்று இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் புது தில்லியில் கையழுத்திடப்பட்டது.

ராஜஸ்தான் பாசனக் கால்வாய். சிர்ஹிந்த் பாசனக் கால்வாய் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க ரூ.825 கோடி நிதியுதவிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
பஞ்சாபில் முக்ட்சார் ஃபரீத்கோட், பெரோஸ்பூர் ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க இந்த இரட்டைத் திட்டங்கள் உதவும்

பஞ்சாபில் உள்ள ராஜஸ்தான் பாசனக் கால்வாய் மற்றும் சிர்ஹிந்த் பாசனக் கால்வாய் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க முறையே ரூ.620.42 கோடி, ரூ. 205.758 கோடி மத்திய அரசு நிதியுதவி வழங்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அமல்படுத்த ஐந்தாண்டுகளாகும் (2018-19 , 2022-23)

சுகாதாரம் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையேயான ஒத்துழைப்பு உறவிற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
 

சுகாதாரம் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையேயான ஒத்துழைப்பு உறவிற்கான ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி வலைப்பின்னலில் மத்திய அரசின் உரிமையை அதிகரிப்பது, தற்போது அமலில் உள்ள அமைப்பை இடைநிலைத் திட்டத்துடன் மாற்றம் செய்வது குறித்தும் மத்தி்ய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கிறது

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இன்று கூடியது. இதில் சரக்கு மற்றும் சேவை வரி வலைப்பின்னலில் மத்திய அரசின் உரிமையை அதிகரிப்பது, தற்போது அமலில் உள்ள அமைப்பை இடைநிலைத் திட்டத்துடன் மாற்றம் செய்வது குறித்தும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கிறது.

தேசிய டிஜிட்டல் தொலை தொடர்பு கொள்கை- 2018-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இந்தியாவை இணைக்கவும்,உந்தி செல்லவும், பாதுகாக்கவும் உலகளாவிய அகன்ற அலைவரிசை இணைப்புகள் வினாடிக்கு 50 மெகாபைட்கள் வேகத்தில் அனைத்து குடிமக்களுக்கும் வழங்குதல்அனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும் வினாடிக்கு 1 கிகாபைட் வேகத்தில் அகன்ற அலைவரிசை இணைப்பு வழங்குதல் இதுவரை இணைய சேவை கிடைக்க பெறாத அனைத்துப் பகுதிகளிலும் இணைய சேவை கிடைப்பதை உறுதி செய்தல் டிஜிட்டல் தொலைதொடர்பு துறையில் 100 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகளை ஈர்த்தல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய டிஜிட்டல் தொலை தொடர்புக் கொள்கை – 2018 மற்றும் தொலைத் தொடர்பு ஆணையத்தை “டிஜிட்டல் தொலைத் தொடர்பு ஆணையம்” என்று பெயர் மாற்றம் செய்வதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கட்கோரா முதல் தோங்கர்கட் வரையிலான 294.53 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மயமாக்கப்பட்ட அகல ரயில் பாதை, சத்தீஸ்கரில் இதுவரை ரயில் சேவை இல்லாத பகுதிகளில் ரயில் போக்குவரத்துக்கு வகை செய்துள்ளது
 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் கீழ்கண்டவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது:-

  1. கட்கோரா முதல் தோங்கர்கட் வரை 294.53 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மயமாக்கப்பட்ட அகல ரயில் பாதை, சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை ரயில் போக்குவரத்து இல்லாத பகுதிகளில் ரயில் சேவையை ஏற்படுத்த வகை செய்திருப்பதுடன், மும்பை-ஹவுரா வழித்தடத்தில் நெரிசல் மிகுந்த ஜர்சுகுடா – நாக்பூர் பிரிவில், பிலாஸ்பூர், சம்பா மற்றும் துர்க் ரயில் நிலையங்களை தவிர்த்து செல்வதற்கும் இப்பகுதியில் தொழில் வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும்.
  2. சத்தீஸ்கரில் உள்ள கொர்பா, பிலாஸ்பூர், முங்கேலி, கபீர்தாம் மற்றும் ராஜ்நந்தகவுன் மாவட்டங்கள், இந்த புதிய ரயில் பாதை மூலம் பலனடையும்.
  3. ரூ.5950.47 கோடி திட்ட மதிப்பிலான இந்தப் பணிகள், சத்தீஸ்கர் கட்கோரா- தோங்கர்கட் ரயில்வே நிறுவனம் என்ற சிறப்பு நிறுவனத்தின் மூலம் ரயில்வே துறை, சத்தீஸ்கர் மாநில அரசின் சத்தீஸ்கர் நிறுவனம் மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் நிறைவேற்றப்படும்.

விமான நிலைய உள்கட்டமைப்புக்கு ஊக்குவிப்பு
பாட்னா, விமான நிலையத்தில் உள்நாட்டு முனையக் கட்டிடம் மற்றும் அதைச்சார்ந்த கட்டுமானப் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், பாட்னா விமான நிலையத்தில் ரூ.1,216.90 கோடி மதிப்பீட்டில் உள்நாட்டு முனையக் கட்டிடம் மற்றும் அதைச்சார்ந்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.

குல்மார்க்கில் உள்ள, ஓட்டல் குல்மார்க் அசோக் மற்றும் பாட்னாவில் உள்ள ஓட்டல் பாடலிபுத்திரா அசோக்-கில் நிறைவேற்றப்படாமல் உள்ள பணிகளை, முறையே ஜம்மு & காஷ்மீர் மற்றும் பீகார் மாநில அரசுகளுக்கு மாற்றுவதற்கு (பங்கு விலக்கல் மூலம்) மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசின் பங்கு விலக்கல் கொள்கையின் தொடர்ச்சியாக, குல்மார்க்கில் உள்ள, ஓட்டல் குல்மார்க் அசோக் மற்றும் பாட்னாவில் உள்ள ஓட்டல் பாடலிபுத்திரா அசோக்-கில் நிறைவேற்றப்படாமல் உள்ள பணிகளை, முறையே ஜம்மு & காஷ்மீர் மற்றும் பீகார் மாநில அரசுகளுக்கு மாற்றுவதன் (பங்கு விலக்கல்) மூலம் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சொத்துகள்/ கிளைகள்/ கூட்டு நிறுவனங்களிலும் பங்கு விலக்கலை மேற்கொள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சர்க்கரை உற்பத்தி அதிகரிப்பதைக் கையாள விரிவான கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
 

ஏற்கனவே சர்க்கரை கையிருப்பு அதிகமாக இருப்பதாலும், 2018-19 சர்க்கரை பருவத்தில் இதேபோன்ற கூடுதல் சர்க்கரை உற்பத்திக்கான அறிகுறி இருப்பதாலும், வருகின்ற கரும்பு பருவத்திலும் சர்க்கரை ஆலைகளின் கடன் பிரச்சினை நீடிக்கும் என்று தெரிகிறது. இதன் காரணமாக கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையும் முன்னெப்போதும் இல்லாத அளவாக உச்சத்திற்கு செல்லக்கூடும்.

------

அக்டோபர் 3, 2018

எளிமையான நடைமுறைகள் மற்றும் நீண்ட கால குத்தகை மூலம் இந்திய ரயில் நிலையங்கள் மேம்பாட்டு ஆணையத்தை இணைப்பு முகமையாகக் கொண்டு ரயில் நிலையங்களை மறுமேம்பாடு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ரயில்வே நிலையங்களை மறுமேம்பாடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. பல்வேறு வர்த்தக மாதிரிகளை ஏற்று எளிமையான நடைமுறைகள் மற்றும் 99 ஆண்டு வரையிலான நீண்ட கால குத்தகை அடிப்படையில் இந்தப் பணிகள் நடைபெறும். இந்திய ரயில் நிலையங்கள் மேம்பாட்டு ஆணையமும், திட்ட மேம்பாட்டு முகமையும் இவற்றை செயல்படுத்தும். இதன் மூலம் மிகப் பெரிய நவீனமயத்திற்கும் உலகத் தரம் வாய்ந்த அடிப்படை கட்டமைப்பை உறுதி செய்வதற்கும் வழி ஏற்படும்.

சாலை போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து தொழில் துறைகளில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சாலை போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து தொழில் துறைகளில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யா அதிபர் இந்தியாவிற்கு வருகை தரும்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்திய குடியரசின் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனமான தேசிய சிறு தொழில்கள் நிறுவனமும் ரஷ்யாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில் வர்த்தக நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரஷ்ய அதிபர் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் போது கையெழுத்திடப்படும்.

இந்தூரில் மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதி
இந்தூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சுற்றுப்பாதை (பெங்காலி சதுக்கம்-விஜய் நகர்- பாவர்சாலா- விமானநிலையம்-பட்டாசியா-பெங்காலி சதுக்கம்)

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மெட்ரோ ரயில்போக்குவரத்துத் திட்டம் பெங்காலி சதுக்கம்-விஜய் நகர்- பாவர்சாலா- விமானநிலையம்- பட்டாசியா-பெங்காலி சதுக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுற்றுப்பாதையின் நீளம் 31.55 கி.மீ. ஆகும். இந்தூரில் முக்கிய பொது இடங்களையும், நகரின் நெருக்கமான பகுதிகளையும் மெட்ரோ ரயில் போக்குவரத்து இணைக்கும்.

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை திருத்தம் செய்யும் இரண்டாவது நெறிமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை திருத்தம் செய் வதற்கு ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட இரண்டாவது நெறிமுறைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் ஏற்கனவே ஆகஸ்ட் 24, 2018 அன்று கையெழுத்திடப்பட்டது.

போபாலில் மெட்ரோ ரயில் இணைப்பு வசதி
போபால் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான இரண்டு வழித்தடங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
(i) கரோன்ட் வட்டத்திலிருந்து எய்ம்ஸ்வரை (ii) பத்படா சதுக்கத்திலிருந்து ரத்னகிரி திர்ஹாவரை

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் புதுதில்லியில் இன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் போபால் நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தில் இரண்டு வழித்தடங்கள் 27.87 கி.மீ தூரம் வரை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. கரோன்ட் வட்டத்திலிருந்து எய்ம்ஸ்வரை (14.99கி.மீ), பத்படா சதுக்கத்திலிருந்து ரத்னகிரி திராஹாவரை (12.88கி.மீ) போபாலில் இவை இரண்டும் முக்கிய பொது இடங்களையும், நெருக்கமான பகுதிகளையும் இணைக்க உதவும்.

போபாலுக்கு பதிலாக, செகூர் மாவட்டத்தில் மனநல மறுவாழ்வுக்கான தேசிய நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 16.05.2018 அன்று எடுக்கப்பட்ட முடிவில் சிறு மாற்றம் செய்து, மத்திய பிரதேசம் போபாலுக்கு பதிலாக, செகூர் (போபால் செகூர் நெடுஞ்சாலை) மாவட்டத்தில் மனநல காப்பகத்திர்கான தேசிய நிறுவனத்தை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

நேபா லிமிடெட் நிறுவனத்திற்கான நிதி உதவிக்கு மத்திய அமைசச்சரவை ஒப்புதல்

நேபா லிமிடெட் நிறுவனத்தின் புத்துயிரூட்டல் மற்றும் ஆலை மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ. 469.41 கோடி நிதி உதவி அளிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் நேபா நகரில் அமைந்துள்ள இந்த நிறுவனம் பொதுத்துறை செய்தித்தாள் அச்சிடும் நிறுவனம் ஆகும்.

2018-19 ஆம் ஆண்டு ரபிப் பருவ பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

விவசாயிகளின் வருவாயை அதிகப்படுத்தும் வகையில் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு 2019-20 ஆம் ஆண்டு சந்தைப்படுத்துவதற்குரிய 2018-19 ஆம் ஆண்டு ரபிப் பருவ பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளின் உற்பத்திச் செலவை விட குறைந்தபட்சம் 50 சதவீதம் அதிகமாக கிடைக்கும் வகையிலும், விவசாயிகளின் வருவாயை 2 மடங்காக்க உதவும் வகையிலும் குறிப்பிட்ட பயிர் வகைகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலன் சார்ந்த இந்த நடவடிக்கை மூலம் விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.62,635 கோடி வருவாய் கிடைக்கும்.

அக்டோபர் 10, 2018

வேளாண்மை மற்றும் அதன் சார்பான துறைகளில் இந்தியா மற்றும் லெபனான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

வேளாண்மை மற்றும் அதன் சார்பான துறைகளில் இந்தியா மற்றும் லெபனான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய சணல் உற்பத்தியாளர்கள் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான பேர்ட்ஸ் சணல் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தை மூட மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

தேசிய சணல் உற்பத்தியாளர்கள் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான பேர்ட்ஸ் சணல் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தை மூட பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சுற்றுலா துறையில் இந்தியா - ருமேனியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சுற்றுலா துறையில் இந்தியா - ருமேனியா இடையே ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. செப்டம்பர் 2018-ல் ருமேனியா நாட்டின் துணை அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

சுற்றுசூழல் ஒத்துழைப்பு துறையில் இந்தியா - பின்லாந்து இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சுற்றுசூழல் ஒத்துழைப்பு துறையில் இந்தியா - பின்லாந்து இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களின் மேலாண்மை ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான மற்றும் நீண்ட கால ஒத்துழைப்பை ஏற்படுத்தவும், ஊக்குவிக்கவும் இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் வழிவகுக்கும். இது இரு நாடுகளின் சட்ட விதிகளை கருத்தில் கொண்டு சமபங்கு, பரஸ்பர பரிமாற்றம் மற்றும் பரஸ்பர நன்மைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படும்.

ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தித் திறனுடன் இணைந்த போனசுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
 

2017-18ஆம் நிதியாண்டிற்கு அரசிதழ் பதிவுபெறாத தகுதியுள்ள அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் (ஆர்.பி.எஃப். / ஆர்.பி.எஸ்.எஃப் ஊழியர்கள் நீங்கலாக) 78 நாள் ஊதியத்திற்கு இணையாக உற்பத்தித் திறனுடன் இணைந்த போனஸ் வழங்குவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரூ.2044.31 கோடி நிதி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. போனஸ் பெறுவதற்கான ஊதிய உச்சவரம்பு மாதத்திற்கு ரூ.7,000ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.17,951 கிடைக்கும். இந்த முடிவால் அரசிதழ் பதிவுபெறாத சுமார் 11.91 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள் என்று தெரிகிறது.

திருப்பதி மற்றும் பெர்ஹாம்பூரில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகங்களை நிரந்தரமாக நிறுவிச் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

திருப்பதி (ஆந்திர பிரதேசம்) மற்றும் பெர்ஹாம்பூரில் (ஒடிஸா) இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்) வளாகங்களை நிரந்தரமாக நிறுவிச் செயற்படுத்துவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்குத் தேவைப்படும் மொத்த செலவு ரூ. 3074.12 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. (தொடராச் செலவினம்: ரூ. 2366.48 கோடி, தொடரும் செலவினம் : ரூ. 707.64 கோடி )

தொழிற்பயிற்சிக்கான தேசிய கவுன்சிலான என்.சி்.வி.டி. மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு முகமை என்.எஸ்.டி.ஏ. ஆகியவற்றை ஒருங்கிணைத்து, தொழில்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், என்.சி.வி.இ.டி. –யை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தொழிற்பயிற்சிக்கான தேசிய கவுன்சில் என்.சி்.வி.டி., தேசிய திறன் மேம்பாட்டு முகமை என்.எஸ்.டி.ஏ. என தற்போதுள்ள திறன் மேம்பாட்டு அமைப்புகளை ஒருங்கிணைத்து, தொழில்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், என்.சி.வி.இ.டி.–யை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பீக்கோ லாறி நிறுவனத்தை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக்கூட்டத்தில், பீக்கோ லாறி நிறுவனத்தை மூடும் திட்டத்திற்கும், இந்நிறுவனத்தின் பணியாளர்களுக்கான விருப்ப ஓய்வுத்திட்டம் (வி.ஆர்.எஸ்) / விருப்பத்தின் பேரில் பிரிந்து செல்லும் திட்டம் ( வி.எஸ்.எஸ்.) ஆகியவற்றுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அக்டோபர் 24, 2018

இந்தியா மற்றும் மலாவி இடையே குற்றம் புரிந்தவர்களை அந்த திருப்பிஅனுப்புதல் குறித்த உடன்படிக்கை ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா மற்றும் மலாவி இடையே குற்றம் புரிந்தவர்களை உரிய நாட்டுக்குத் திருப்பி அனுப்புதல் குறித்த ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஏற்பு அளித்துள்ளது.

ரே பரேலி, கோரக்பூர், பத்திண்டா, குவஹாத்தி, பிலாஸ்பூர், தியோகர் ஆகிய இடங்களில் தொடங்கப்படும் எய்ம்ஸ் நிறுவனம் ஒவ்வொன்றிற்கும் இயக்குநர் பதவியை உருவாக்க மத்திய அமைசச்சரவை ஒப்புதல்

ரே பரேலி(உத்தரப் பிரதேசம்), கோரக்பூர் (உத்தரப் பிரதேசம்), பத்திண்டா (பஞ்சாப்), குவஹாத்தி (அசாம்), பிலாஸ்பூர் (இமாச்சல பிரதேசம்), தியோகர் (ஜார்கண்ட்) ஆகிய இடங்களில் தொடங்கப்படும் எய்ம்ஸ் நிறுவனங்களுக்கு இயக்குநர் பதவியை உருவாக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பதவிக்கு அடிப்படை சம்பளமான (நிலையானது) ரூ. 2,25,00/-உடன் மருத்துவப் பணி செய்யாததற்கான படி எனினும் ரூ. 2,37,500-க்கு மிகாமல் இருக்கும்.

அரசு தனியார் பங்களிப்பு (பிபிபி) மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தியத் திறன் நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரசு தனியார் பங்களிப்பு மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தியத் திறன் நிறுவனம் அமைக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பிட்ட இடங்களில் தேவை மற்றும் உட்கட்டமைப்பு வசதி அடிப்படையில் இந்திய திறன் நிறுவனத்தை மேம்படுத்தும் வாய்ப்புகள் ஆராயப்படும்.

பினாமி சொத்து பரிமாற்றங்கள் தடுப்புச் சட்டம் 1988-ன்கீழ் நடுவர் ஆணையம் அமைக்கவும், மேல் முறையீட்டு நடுவர் மன்றம் உருவாக்கவும் அமைச்சரவை ஒப்புதல்
 

பினாமி சொத்து பரிமாற்றங்கள் தடுப்புச் சட்டம் 1988-ன்கீழ் நடுவர் ஆணையம் அமைக்கவும், மேல் முறையீட்டு நடுவர் மன்றம் உருவாக்கவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரிக்ஸ் நாடுகளுடன் சமூக மற்றும் தொழிலாளர் நலத்துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையில் புதுதில்லியில் இன்று (24.10.2018) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரேசில், ரஷ்ய கூட்டமைப்பு, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் சமூக மற்றும் தொழிலாளர் நலத்துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்தியா – சிங்கப்பூர் இடையே நிதி சார்ந்த தொழில்நுட்ப ஒத்துழைப்பு இணை பணிக்குழு அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

இந்தியா – சிங்கப்பூர் இடையே நிதி சார்ந்த தொழில்நுட்ப ஒத்துழைப்பு இணை பணிக்குழு அமைப்பது தொடர்பாக இந்த ஆண்டு ஜூன் மாதம் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய பட்டயக் கணக்காளர்கள் கல்வி நிறுவனம்- ஆப்கானிஸ்தானின் சான்றிதழ் பெற்ற கணக்காளர்கள் அமைப்பு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

இந்திய பட்டயக் கணக்காளர்கள் கல்வி நிறுவனம்- ஆப்கானிஸ்தானின் சான்றிதழ் பெற்ற கணக்காளர்கள் அமைப்பு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. “ஆப்கானிஸ்தான் கணக்கியல் வாரியத்தின்” திறன் கட்டமைப்பில் பரஸ்பர ஒத்துழைப்பு ஏற்படுத்துவதையும், அறிவுப் பரிமாற்றத்தின் மூலம் ஆப்கானிஸ்தானில் ஐ.டி திறன் மற்றும் தரத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதையும், மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பரிமாற்றத்தையும், பரஸ்பரம் பயனளிக்கும் கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் கூட்டு செயல்பாடுகளையும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிலைநிறுத்தும்.

பிரிக்ஸ் நாடுகள் இடையே சுற்றுசுழல் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்; அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பிரிக்ஸ் நாடுகள் இடையே சுற்றுச்சுழல் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. தென்னாப்பிரிக்கா, ஜோகன்னஸ்பர்கில் ஜூலை 2018 – ல் நடைபெற்ற 10வது பிரிக்ஸ் மாநாட்டில் இதற்கான புரிந்துணர்வு கையெழுத்திடப்பட்டது.

தாய்பெயில் உள்ள இந்திய தாய்பெய் கழகம் மற்றும் இந்தியாவில் உள்ள தாய்பெய் பொருளாதார மற்றும் கலாச்சார மையம் இடையேயான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தாய்பெயில் உள்ள இந்திய தாய்பெய் கழகம் மற்றும் இந்தியாவில் உள்ள தாய்பெய் பொருளாதார மற்றும் கலாச்சார மையம் இடையேயான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான தேசிய கண்காணிப்பு கட்டமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையில் புதுதில்லியில் இன்று (24.10.2018) நடைபெற்றது. நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்து அவ்வப்போது மறு ஆய்வு செய்யவும், மேம்படுத்தவும், தேசிய அளவில் சுட்டிக்காட்டும் கட்டமைப்பை உருவாக்குவதற்கான உயர்மட்ட வழிகாட்டுதல் குழுவை ஏற்படுத்துவதற்கு இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆஷா சமூக சுகாதார ஆர்வலர்களுக்கு வழங்கப்படும் மேற்பார்வை வருகைக் கட்டண உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையில் புதுதில்லியில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஆஷா சமூக சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் வருகைக் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம், பஹ்ராய்ச் – கலிலாபாத் இடையே புதிய ரயில் பாதைக்கு அமைச்சரவை ஒப்புதல்
 

உத்தரப் பிரதேச மாநிலம், பஹ்ராய்ச் – கலிலாபாத் இடையே புதிய ரயில் பாதைக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புதிய அகல ரயில்பாதையின் மொத்த நீளம் 240.26 கி.மீ-ஆக இருக்கும்.

நவம்பர் 1, 2018

குற்றம் சார்ந்த விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவிக்காக இந்தியா-மொராக்கோ இடையே கையெழுத்தான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

குற்றம் சார்ந்த விஷயங்களில் பரஸ்பரம் சட்ட உதவிக்காக இந்தியா-மொராக்கோ இடையே கையெழுத்தான ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஒடிஷா மாநிலம் ஜர்சுகுடா விமான நிலையத்தை “வீர் சுரேந்திர சாய் விமான நிலையம், ஜர்சுகுடா என்று பெயர் மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஒடிஷா மாநிலம் ஜர்சுகுடா விமான நிலையத்தை “வீர் சுரேந்திர சாய் விமான நிலையம், ஜர்சுகுடா” என்று பெயர் மாற்றம் செய்ய பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

போக்குவரத்து கல்வியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இந்திய – ரஷ்யக் கூட்டமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதன் விவரம் மத்திய அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டது
 

ரஷ்யாவுடன் 5.10.2018 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்த விவரம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டது.

சுற்றுலாத் துறையில் இந்தியா மற்றும் கொரியா இடையேயான உறவினை வலுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சுற்றுலாத் துறையில் இந்தியா மற்றும் கொரியா இடையேயான உறவினை வலுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளும் சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பில் உறுப்பினராக சேரும் வாய்ப்பு அளிப்பதற்காக சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதற்காக சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் முதல் மாநாட்டில் தீர்மானம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

ஐக்கிய நாடுகள் அமைப்பில் உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளுக்கும் சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பில் உறுப்பினராக சேரும் வாய்ப்பு அளிப்பதற்காக சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதற்காக இந்தக் கூட்டமைப்பின் முதல் மாநாட்டில் ஏற்கனவே செய்யப்பட்ட தீர்மானத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நவம்பர் 8, 2018

பொது மற்றும் வணிக விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவிகளுக்காக இந்தியா- மொரோக்கோ நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை பொது மற்றும் வணிக விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவிகளை மேற்கொள்ள இந்தியா- மொரோக்கோ நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் செய்து கொள்ள தனது ஒப்புதலை அளித்தது.

 

இந்தியா-மொராக்கோ இடையே குற்றவாளிகளை நாடுகடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா-மொராக்கோ இடையே குற்றவாளிகளை நாடுகடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தமானது, இம்மாதம் 11 முதல் 18-ம் தேதிவரை, மொராக்கோ-விலிருந்து இந்தியாவுக்கு முக்கிய பிரமுகர்கள் மேற்கொள்ளும் பயணத்தின்போது கையெழுத்தாக உள்ளது.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளில் பயிற்சி மற்றும் கல்வியைத் தொடர்வதற்காக இந்தியா-இத்தாலி இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையில் பயிற்சி மற்றும் கல்விக்காக இந்தியா-இத்தாலி இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, குவஹாத்தி, திருவனந்தபுரம், மங்களூரு விமான நிலைய மேலாண்மைப் பணிகளை தனியார்-அரசு ஒத்துழைப்பு அமைப்பிடம் ஒப்படைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கீழ்க்காணும் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது:

    1. இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் உள்ள ஆமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, குவஹாத்தி, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய 6 விமான நிலையங்களின் செயல்பாடுகள், மேலாண்மை மற்றும் மேம்பாட்டுப் பணிகளை அரசு-தனியார் ஒத்துழைப்பு அமைப்பிடம் ஒப்படைக்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது அரசு தனியார் ஒத்துழைப்பு மதிப்பீடு குழு மூலம் ஒப்படைக்கப்படும்.
    2. அரசு தனியார் ஒத்துழைப்பு மதிப்பீட்டுக் குழு எடுக்கும் முடிவுகளில் பிரச்சினைகள் எதுவும் வந்தால், அது குறித்து முடிவுசெய்ய செயலாளர்கள் கொண்ட வல்லுநர் குழு அமைத்தல். நித்தி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி தலைமையிலான இந்தக் குழுவில், விமானப் போக்குவரத்து அமைச்சக செயலாளர், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர், செலவின துறை செயலாளர் ஆகியோர் இடம்பெறுவார்கள்.

சர்வதேச எரிசக்தி முகமையின் கீழ் உள்ள மேம்பட்ட மோட்டார் எரிபொருள் தொழில்நுட்பம் ஒருங்கிணைப்பு திட்டத்தில் இந்தியா உறுப்பினராக சேர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

சர்வதேச எரிசக்தி முகமையின் கீழ் உள்ள மேம்பட்ட மோட்டார் எரிபொருள் தொழில்நுட்பம் ஒருங்கிணைப்பு திட்டத்தில் இந்தியா மே 9, 2018 அன்று உறுப்பினராக சேர்ந்ததற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச எரிசக்தி முகமையின் கீழ் இயங்கும் இந்த மேம்பட்ட மோட்டார் எரிபொருள் தொழில்நுட்பம் ஒருங்கிணைப்பு திட்டத்தில் இந்தியா மார்ச் 30, 2017-ல் முதல் “கூட்டமைப்பு” அந்தஸ்தில் இருந்து வருகிறது.

எதிரி சொத்து பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

எதிரி சொத்து பங்குகளை விற்பதற்காக நடைமுறை விதிகள் மற்றும் செயல்முறைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கர்நாடகா மாநிலம் பாடூரில் உள்ள கேந்திரமான பெட்ரோல் இருப்பை வெளிநாடுகளில் இருந்து செயல்பட்டு வரும் தேசிய எண்ணெய் நிறுவனங்கள் நிரப்பிக் கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கர்நாடக மாநிலம் பாடூரில் உள்ள கேந்திரமான பெட்ரோல் சேமிப்புக் கிடங்கை வெளிநாடுகளில் இருந்து செயல்பட்டு வரும் தேசிய எண்ணெய் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள தனது ஒப்புதலை வழங்கியது. பாடூரில் உள்ள கேந்திர பெட்ரோல் சேமிப்புக் கிடங்கு என்பது பூமிக்குக் கீழே குகைப் பாறைகளில் சேமிப்பதாகும். இதன் மொத்த கொள்ளளவு 25 லட்சம் மெட்ரிக் டன்கள் ஆகும். தலா 6.25 லட்சம் மெட்ரிக் டன்களைக் கொண்ட நான்கு பகுதிகளாக இது அமைந்துள்ளது. மத்திய அரசின் பட்ஜெட் உதவியை சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்குடனேயே பொது-தனியார் கூட்டுச் செயல்பாட்டு முறையில் இந்த கையிருப்பை பயன்படுத்திக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பழங்குடிகளுக்கான மத்திய பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக 2009-ம் ஆண்டின் மத்திய பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் பழங்குடிகளுக்கான மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கான ஒப்புதலை வழங்கியது. 2014-ம் ஆண்டின் ஆந்திரப் பிரதேச சீரமைப்பு சட்டத்தின் 13 வது பிரிவின் கீழ் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ரெல்லி கிராமத்தில் “ஆந்திரப் பிரதேச பழங்குடிகள் மத்திய பல்கலைக்கழகம்” நிறுவப்படும். இந்த பழங்குடிகளுக்கான மத்திய பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான முதல் கட்ட செலவுகளுக்காக ரூ. 420 கோடியை ஒதுக்கீடு செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ட்ரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள மத்திய அரசு பங்குகளை 100 சதவீதம் கைவிடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய பொருளாதார விஷயங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, ட்ரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள மத்திய அரசின் பங்குகளை 100% விசாகப்பட்டினம் துறைமுக நிறுவனம், பாரதீப் துறைமுக அறக்கட்டளை, ஜவகர்லால் நேரு துறைமுக அறக்கட்டளை மற்றும் கண்ட்லா துறைமுக அறக்கட்டளை ஆகிய நான்கு நிறுவனங்கள் அடங்கிய கூட்டணிக்கு விற்க கொள்கையளவிலான தனது ஒப்புதலை வழங்கியது.

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் மற்றும் பிபிஎன்எல் ஆகிய நிறுவனங்களின் கொள்முதலில் ஐடிஐ நிறுவனத்திற்கு பங்கு நிர்ணயிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய பொருளாதார விஷயங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் மற்றும் பிபிஎன்எல் ஆகிய நிறுவனங்களின் கொள்முதலில் ஐடிஐ நிறுவனத்திற்கு பங்கு நிர்ணயிக்க தனது ஒப்புதலை வழங்கியது.

நவம்பர் 13, 2018

மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு அனந்த்குமார் மறைவுக்கு அமைச்சரவை இரங்கல்

பெங்களூருவில் 12.11.2018 அன்று பிற்பகல் மணி ஒன்று ஐம்பதுக்கு மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு அனந்த்குமாரின் சோகமான மறைவுக்கு மத்திய அமைச்சரவை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. அனுபவம் மிக்க தலைவர் ஒருவரை தேசம் இழந்துவிட்டதாக சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. பிரதமர் திரு. நரேந்திரடி மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை, துயருற்றுள்ள குடும்பத்தினருக்கு மத்திய அரசு மற்றும் ஒட்டுமொத்த தேசத்தின் சார்பாக மனம் நெகிழ்ந்த இரங்கலை தெரிவித்தது.

நவம்பர் 22, 2018

 

மத்திய பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வகைப்படுத்தலை ஆய்வு செய்யும் ஆணையத்தின் கால வரையறை மே 31, 2019 வரை நீடிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மத்திய பட்டியலில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வகைப்படுத்தல் குறித்து ஆய்வு செய்யும் ஆணையத்தின் காலத்தை நவம்பர் 30,2018 –லிருந்து மே 31, 2019 வரை நீடித்துள்ளது.

மருத்துவ சுகாதாரப் பணியாளர்கள், சேவைகள் மற்றும் மருத்துவ சுகாதாரக் கல்வியை தரப்படுத்தி, ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான சுகாதாரப் பராமரிப்புப் பணிகள் மசோதா 2018-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மருத்துவ சுகாதாரப் பணியாளர்கள், சேவைகள் மற்றும் மருத்துவ சுகாதாரக் கல்வியை தரப்படுத்தி, ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான சுகாதாரப் பராமரிப்புப் பணிகள் மசோதா 2018-க்கு இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதாவின்படி, தேசிய அளவில் இந்திய மருத்துவப் பணிகள் கவுன்சிலும், மாநில அளவில், மாநில மருத்துவப் பணிகள் கவுன்சிலும் ஏற்படுத்தப்படும். இந்த கவுன்சில்கள் மருத்துவ, சுகாதாரப் பணிகள் மற்றும் அவைசார்ந்த பிற பணிகளின் தரத்தை கண்காணித்து, வரைமுறைப்படுத்தும்.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் உஸ்பேகிஸ்தான் இடையான ஒத்துழைப்பு உடன்பாடு குறித்து மத்திய அமைச்சரவையிடம் தெரிவிப்பு

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிடம்அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் உஸ்பேகிஸ்தான் இடையே ஒத்துழைப்பிற்கான உடன்பாடு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த உடன்பாடு, புது தில்லியில், பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் உஸ்பேகிஸ்தான் அதிபர் திரு. ஷவ்கத் மிராயோயேவ் முன்னிலையில், இந்தாண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி கையெழுத்தானது. இந்தியா சார்பில் மத்திய அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனும்மற்றும் உஸ்பேக் சார்பில் புதிய கண்டுபிடிப்புகள் வளர்ச்சி துறை அமைச்சர் திரு. இப்ரோஹிம் அப்துர்க்கமனோவும் கையெழுத்திட்டனர்.

இந்தியா-தஜகிஸ்தான் இடையே இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைக்க வகை செய்யும் புர்ந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில், இந்தியா-தஜகிஸ்தான் இடையே இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைக்க வகை செய்யும் புர்ந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அடல் புதுமை திட்டம், இந்தியா மற்றும் திறமை மற்றும் வெற்றிக்கான நிதியம், ரஷ்யா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவையிடம் இன்று எடுத்துரைக்கப்பட்டது

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான அடல் புதுமை திட்டம், இந்தியா மற்றும் திறமை மற்றும் வெற்றிக்கான நிதியம், ரஷ்யா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவையிடம் இன்று எடுத்துரைக்கப்பட்டது.

மொரிஷியஸ் உடன் நுகர்வோர் நலன் பாதுகாப்பு மற்றும் அளவியல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்தியா மற்றும் மொரிஷியஸ் இடையே நுகர்வோர் நலன் பாதுகாப்பு மற்றும் அளவியல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் உள்ள சில்வாசாவில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் உள்ள சில்வாசாவில் மருத்துவக் கல்லூரி அமைக்க இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஸ்ரீ குருநானக் தேவ்ஜியின் 550ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள
ஸ்ரீ குருநானக் தேவ்ஜியின் 550ஆவது பிறந்தநாளை, நாடு முழுவதும், உலகெங்கும் மிக பிரம்மாண்டமான அளவில் மாநில அரசுகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் ஒத்துழைப்புடன் கொண்டாடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குருநானக் தேவ்ஜியின் அன்பு, அமைதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கான போதனைகள் என்றென்றும் பலன் தரக்கூடியதாகும்.

சணல் பொருளை கட்டாயமாக பயன்படுத்தும் விதிமுறைகள் நீட்டிப்பு

1987-ஆம் ஆண்டு சணல் பொருட்கள் சட்டப்படி, சணலை விவசாயப் பொருட்களை கட்டி எடுத்துச் செல்வதற்கு, கட்டாயமாக பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை நீட்டிக்க இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

தட்பவெப்ப நிலை மற்றும் பருவநிலை ஆராய்ச்சி, மாதிரி, கூர்ந்து நோக்கும் அமைப்புகள் மற்றும் பணிகள் தொடர்பான விரிவான திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்
 

தட்பவெப்ப நிலை மற்றும் பருவநிலை ஆராய்ச்சி, மாதிரி, கூர்ந்து நோக்கும் அமைப்புகள் மற்றும் பணிகள் தொடர்பான, 9 துணைத் திட்டங்கள் அடங்கிய விரிவான திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் புதுதில்லியில் இன்று கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. இவை ரூ.1450 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டங்கள் இந்திய வானிலைத் துறை, வெப்பமண்டலம் சார்ந்த வானிலைக்கான இந்திய நிறுவனம், நடுத்தர அளவு வானிலை கணிப்புக்கான தேசிய மையம், கடல்சார் தகவல் சேவைக்கான இந்திய தேசிய மையம் ஆகிய நிறுவனங்கள் வாயிலாக மத்திய புவி அறிவியல் அமைச்சகம் இந்தத் திட்டங்களை செயல்படுத்தவுள்ளது.

டிசம்பர் 6, 2018

சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு துறையில் இந்தியா - ஜப்பான் இடையே ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா - ஜப்பான் இடையே ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டபோது அக்டோபர் 29, 2018 அன்று கையெழுத்திடப்பட்டது.

புவி அறிவியல் துறையில் அறிவியல் மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

புவி அறிவியியல் துறையில் அறிவியில் மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே கையெழுத்தான ஒப்பந்தத்திற்குப்பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் நவம்பர் 1, 2018 அன்று கையெழுத்தானது.

இந்தியாவுக்கும் வெளிநாட்டு நிதி நுண்ணறிவுப் பிரிவுகளுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்திற்கான மாதிரி புரிந்துணர்வு ஒப்பந்த திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தகவல் பரிமாற்றத்திற்கென இந்திய நிதி நுண்ணறிவு பிரிவுக்கும் வெளிநாட்டு நிதி நுண்ணறிவுப் பிரிவுகளுக்கும் இடையே மாதிரி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் திருத்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எக்மாண்ட் குழு செயலகத்தின் திருத்தப்பட்ட மாதிரி புரிந்துணர்வு ஒப்பந்தம் 2014 அடிப்படையில் இந்த திருத்தப்பட்ட மாதிரி புரிந்துணர்வு ஒப்பந்த வரைவு உருவாக்கப்பட்டது.

இந்தியா - பிரான்ஸ் இடையே எரிசக்தி பாதுகாப்புத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு இந்தியா - பிரான்ஸ் இடையே எரிசக்தி பாதுகாப்புத் துறையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அக்டோபர் 17 2018 அன்று கையெழுத்திடப்பட்டது.

ஜாலியன்வாலா பாக் தேசிய நினைவிடச் சட்டம், 1951-ல் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

ஜாலியன்வாலா பாக் தேசிய நினைவிடச் சட்டம், 1951-ல் திருத்தம் செய்ய பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வேளாண் ஏற்றுமதிக்கொள்கை 2018-க்கு அமைச்சரவை ஒப்புதல்

வேளாண் ஏற்றுமதிக்கொள்கை 2018-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்தியில் கண்காணிப்புக் கட்டமைப்பை நிறுவும் ஆலோசனைக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு வர்த்தக அமைச்சகம், மேம்பாட்டு முகமையாக செயல்படும். சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் பிரதிநிதிகள், பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், முகமைகள், ஆகியவை வேளாண் ஏற்றுமதிக் கொள்கையின் அமலாக்கத்தைக் கண்காணிக்கும்.

வளர்ச்சிக்காக விண்வெளித் தொழில்நுட்பத்தின் அமைதிப் பயன்பாட்டு ஒத்துழைப்புக்கு இந்தியா-தஜிகிஸ்தான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

வளர்ச்சிக்காக விண்வெளித் தொழில்நுட்பத்தின் அமைதிப் பயன்பாட்டு ஒத்துழைப்புக்கு இந்தியா-தஜிகிஸ்தான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தஜிகிஸ்தானின் துஷான்பே-யில் அக்டோபர் 8, 2018 அன்று கையெழுத்தானது.

அஞ்சல் துறையில் இந்தியா - ஜப்பான் இடையே ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம் -மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு அஞ்சல் துறையில் இந்தியா - ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான அஞ்சல் சேவைகளையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தும்.

மனிதர்களைக் கொண்ட விண்வெளிப்பயணத் திட்டத்தில் இந்தியா மற்றும் ரஷ்யா,கூட்டு நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விண்வெளி திட்டத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து நடவடிக்கைகளையும் செயல்பாடுகளையும் தொடர ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுதில்லியில் அக்டோபர் 15 2015 அன்று கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா - ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பு வலுப்பெறும்.

புவியியல், சுரங்கம் மற்றும் தாது வளங்கள் துறையில் ஒத்துழைப்புக்கு இந்தியா-ஜிம்பாப்வே இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

புவியியல், சுரங்கம் மற்றும் தாது வளங்கள் துறையில் ஒத்துழைப்புக்கு இந்தியா-ஜிம்பாப்வே இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜிம்பாப்வேயின் ஹராரேயில் நவம்பர் 3, 2018 அன்று கையெழுத்தானது.

அமைதிக்காக விண்வெளி ஆய்வு மற்றும் கண்டறிதல்களைப் பயன்படுத்துவதற்காக இந்தியா - உஸ்பெகிஸ்தான் இடையேயான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

அமைதிக்காக விண்வெளி ஆய்வு மற்றும் கண்டறிதல்களைப் பயன்படுத்துவதற்காக இந்தியா - உஸ்பெகிஸ்தான் இடையே கையெழுத்தானஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உஸ்பெகிஸ்தான் அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது இந்த ஒப்பந்தம் அக்டோபர் 1, 2018 அன்று புது தில்லியில் கையெழுத்தானது.

விண்வெளியை அமைதிக்காக பயன்படுத்துவதற்கு இந்தியா-மொராக்கோ இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

விண்வெளியை அமைதிக்காகப் பயன்படுத்துவதற்கு இந்தியா-மொராக்கோ இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செப்டம்பர் 25, 2018 அன்று புதுதில்லியில் கையெழுத்தானது.

அஞ்சல் தலை வெளியீடு தொடர்பாக இந்தியா மற்றும் ஆர்மீனியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இந்தியா - ஆர்மீனியா இடையே அஞ்சல்தலை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூன் 2018 –ல்கையெழுத்திடப்பட்டது.

சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்துறையில் இந்தியா – ஜப்பான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்துறையில் இந்தியா – ஜப்பான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் அக்டோபர் 29, 2018 அன்று கையெழுத்தானது.

சுகாதாரம் மற்றும் நலத் துறையில் இந்தியா - ஜப்பான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

சுகாதாரம் மற்றும் நலத்துறையில் இந்தியா - ஜப்பான் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.

பஞ்சாபில் உள்ள ரவி ஆற்றின் குறுக்கே ஷாபூர்கண்டி அணை (தேசியத் திட்ட) அமலாக்கத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

பஞ்சாபில் உள்ள ரவி ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் ஷாபூர்கண்டி அணைத்திட்ட அமலாக்கத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு 2018-19 முதல் 2022-23 வரை ஐந்தாண்டு காலத்திற்கு மத்திய அரசு(பாசனப் பிரிவுக்காக) ரூ.485.38 கோடி உதவி வழங்கும்.

பலதுறை சார்ந்த இணையதளம் மற்றும் அதனைப் பயன்படுத்துவோரின் தேசிய இயக்கத்தைத் தொடங்க அமைச்சரவை ஒப்புதல்

பலதுறை சார்ந்த இணையதளம் மற்றும் அதனை பயன்படுத்துவோரின் தேசிய இயக்கத்தைத் தொடங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் ரூ.3,360 கோடி மதிப்பில் ஐந்தாண்டு காலத்திற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையால் அமல்படுத்தப்படும்.

ஊரக மின்மயக் கழகத்தின் 52.63 சதவீத சமபங்குகளை மின்சார நிதிக்கழகத்திற்கு விற்க அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

ஊரக மின்மயக் கழகத்தில் தற்போது மத்திய அரசுக்கு சொந்தமாக உள்ள 52.63 சதவீத சமபங்குகளை நிர்வாகக் கட்டுப்பாட்டுடன் மின்சார நிதிக்கழகத்திற்கு மாற்ற பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில், நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியது.

டிசம்பர் 17, 2018

இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தின் போது, இந்திய சூரிய எரிசக்தி நிறுவனம் (சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்) (எஸ்.இ.சி.ஐ), இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான ஆராய்ச்சி நிறுவனம், எரிசக்தி மற்றும் மாற்று எரிசக்திக்கான ஆணையரகம், (காமிஸ்சாரரியட் அ எல் எனர்ஜிஅடாமிக் எட் ஆக்ஸ் எனர்ஜிஸ் ஆல்டர்னெடிவ்ஸ்) மற்றும் பிரான்ஸ் நிறுவனமான புளுஸ்டோரேஜ் எஸ்.ஏ.எஸ். ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த புரிந்துணைர்வு உடன்படிக்கை புதுதில்லியில் 3, அக்டோபர், 2018 அன்று கையெழுத்தானது. ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு ஆகிய மூன்று மொழிகளில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை தயாரிக்கப்பட்டு கையெழுத்தானது.

பிரதம மந்திரி ஸ்வாஸ்த்ய சுரக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு & தெலுங்கானாவில் இரண்டு புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இன்று, பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, தமிழ்நாட்டில் மதுரையில் ரூ.1,264 கோடி செலவிலும், தெலுங்கானாவில் பிபிநகரில் ரூ.1,028 கோடி செலவிலும் இரண்டு புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைத்திட ஒப்புதல் வழங்கியது. இந்த எய்ம்ஸ் நிறுவனங்கள் பிரதம மந்திரி ஸ்வாஸ்த்ய சுரக்ஷா திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும்.

இந்தியா தென்னாப்பிரிக்கா இணைந்து கூட்டு அஞ்சல்தலைகள் வெளியீடு – அமைச்சரவைக்கு விளக்கம்

மகாத்மா காந்தியின் பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில்நிலைய சம்பவத்தின் 125-வது ஆண்டு மற்றும் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நூற்றாண்டை நினைவு கூரும் வகையில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இணைந்து அஞ்சல் தலைகள் வெளியிட்டது குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிடம் எடுத்துரைக்கப்பட்டது. கூட்டு அஞ்சல்தலை வெளியீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த ஆண்டு ஜூலை மாதம்24ஆம் தேதியன்று கையெழுத்தானது.

மாற்றுத் திறனாளிகள் துறையில் ஒத்துழைக்க இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

இந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதியன்று, ஆஸ்திரேலியா சிட்னியில் கையெழுத்தான, மாற்றுத்திறனாளிகள் துறையில் ஒத்துழைப்பதற்கான இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு, பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.



(Release ID: 1556417) Visitor Counter : 2766


Read this release in: English