பிரதமர் அலுவலகம்

புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 9ஆவது சுற்று நகர எரிவாயு விநியோக திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பிரதமர் ஆற்றிய உரையின் சுருக்கம்

Posted On: 22 NOV 2018 7:50PM by PIB Chennai

மேடையில் வீற்றிருக்கும் எனது அமைச்சரவை சகாக்கள் திரு. தர்மேந்திர பிரதான் அவர்களே, டாக்டர் ஹர்ஷ்வர்தன் அவர்களே, தொழில்நுட்ப உதவியால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நம்முடன் இணைந்துள்ள முக்கிய பிரமுகர்களே, ஒப்பந்தப் புள்ளியில் பங்கேற்பதற்காக இங்கு வந்துள்ள தொழில் அதிபர்களே,

 

சகோதர, சகோதரிகளே,

எதிர்கால இந்தியாவை நிர்ணயிப்பதற்காக எத்தகைய பெரும் பணிகள் செயல்பாட்டிற்கு வருகிறது என்பதை இன்று நாம் அனைவரும் கண்கூடாகக் காண்கிறோம். இந்தியாவில் அடுத்த தலைமுறைக்கான கட்டமைப்பு மேம்பாட்டு பணியில் இன்றைய தினம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் குறிக்கும் விதமாக, 129 மாவட்டங்களில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்கான பணி தொடங்குகிறது. இது தவிர, 10வது சுற்றுக்கு ஒப்பந்த புள்ளிக்கான பணிகளும்  தொடங்கியுள்ளது.

இந்தப் பணிகள் நிறைவடையும்போது, அதன் முடிவுகள் பெரிய அளவில் இருக்கும் என்பதால், இன்றைய தொடக்கங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். 10வது சுற்று ஒப்பந்தத்திற்கான பணிகள் தொடங்கி நிறைவடையும்போது, நாட்டில் உள்ள 400க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் நகர எரிவாயு விநியோகத் திட்ட கட்டமைப்பிற்குள் கொண்டு வரப்படும். இதன் மூலம் நாட்டின் மக்கள் தொகையில் 70%-க்கு மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள் என, என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியிலும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும்,  இது மாபெரும் சாதனையாகும்.

நண்பர்களே,

கடந்த 2014-ஆம் ஆண்டு வரை, நாட்டில் 66 மாவட்டங்களில் மட்டுமே, எரிவாயு விநியோக கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது, நாட்டில் உள்ள 174 மாவட்டங்களில் நகர எரிவாயு விநியோகத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த 2 – 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 400 மாவட்டங்களைத் தாண்டும்.

இந்தப் புள்ளி விவரங்களை முக்கியமற்றதாக கருதி விட முடியாது. கடந்த நான்காண்டுகளில் எரிவாயு சார்ந்த பொருளாதார மேம்பாட்டிற்காக, நமது நகரங்களில் எந்த அளவிற்கு வலுவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை சித்தரிக்கும் மாபெரும் புள்ளி விவரங்கள் இதில் அடங்கியுள்ளது. 2014ல் 25 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது.  கடந்த நான்காண்டுகளில் இந்த எண்ணிக்கை ஏற்றத்தால் இரு மடங்கு அதிகரித்துள்ளது. இன்று இந்த நகரங்களில் பணிகள் தொடங்கிய பிறகு, அந்த எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, 2014ல் 947 சிஎன்ஜி எரிவாயு விநியோக மையங்கள்தான் நாட்டில் இருந்தன. நமது ஞாபகம் சரியாக இருக்குமேயானால், 25 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில், தில்லி, மும்பை மற்றும் சூரத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் தான் சிஎன்ஜி விநியோக மையங்கள்  இருந்தன. அதன்பிறகு 2014 வரை சிஎன்ஜி விநியோக மையங்களின் எண்ணிக்கை 947 ஆகத்தான் இருந்தது. அதன்படி ஆண்டுக்கு 40 மையங்கள்தான் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 1,470-க்கு மேல் அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் சிஎன்ஜி எரிவாயு விநியோக மையங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

                                    *****



(Release ID: 1555809) Visitor Counter : 188


Read this release in: Marathi , English