குடியரசுத் தலைவர் செயலகம்

நே பி தா சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் மற்றும் அந்நாட்டு கவுன்சிலருடன் சந்திப்பு

Posted On: 11 DEC 2018 1:23PM by PIB Chennai

மியான்மரில் தமது மூன்று நாள் பயணத்தை இன்று (11.12.2018)  தொடங்கிய குடியரசுத்தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த், தலைநகர் நே பி தா-வில் உள்ள அதிபர் மாளிகைக்குச் சென்றார். அங்கு அவரை, மியான்மர் அதிபர் யு. வின் மின்ட் பாரம்பரிய முறைப்படி வரவேற்றார்.

 

அதனைத் தொடர்ந்து இரு நாட்டு குழுக்கள் இடையேயான பேச்சுவார்த்தை குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய குடியரசுத் தலைவர், மியான்மர் நாட்டுடனான நட்புறவுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறினார். இந்தியாவின் “கிழக்கை நோக்குங்கள்” மற்றும் “அண்டை நாடு முதலில்” ஆகிய கொள்கைகளின்படி மியான்மர் நாடு இந்தியாவின் முக்கிய நட்பு நாடு என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவிலிருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கு செல்வதற்கான “இயற்கை பாலமாக” மியான்மர் திகழ்கிறது என்றும் திரு.ராம் நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.

 

பின்னர் மியான்மர் அரசின் கவுன்சிலர் திருமதி ஆங் சான் சூ கி-யையும் குடியரசுத் தலைவர் சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் பல்வேறு இருதரப்பு மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். அப்போது பேசிய குடியரசுத் தலைவர் மியான்மரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களை இந்தியா வெகுவாக பாராட்டுவதாகக் கூறினார். மியான்மர் தற்போது மிகவும் சவாலான காலகட்டத்தில் உள்ளது என்பதை இந்தியா உணர்ந்துள்ளதாகவும் அந்நாட்டின் தேசிய அமைதி நடவடிக்கைகளின் நோக்கங்களுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்றும் திரு. ராம் நாத் கோவிந்த் தெரிவித்தார்.

 

இந்த சந்திப்புகளின்போது இந்தியா- மியான்மர் இடையே இரண்டு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. மேலும் ராக்கினே வளர்ச்சி திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக கட்டப்பட்ட 50 வீடுகளையும் குடியரசுத் தலைவர் முறைப்படி ஒப்படைத்தார்.

 

 

                                                                    ******
விகீ
/எம்எம்/கோ


(Release ID: 1555545) Visitor Counter : 198


Read this release in: English , Hindi