சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

தலித் மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க ஊடக அதிகாரமளிப்பதற்கான டாக்டர் பி ஆர் அம்பேத்கர் பள்ளியில் மாணவர் சேர்க்கையை திரு.தாவர்சந்த் கெலாட் தொடங்கி வைத்தார்

Posted On: 06 DEC 2018 4:06PM by PIB Chennai

தலித் மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க ஊடக அதிகாரம் அளித்தலுக்கான டாக்டர் பி ஆர் அம்பேத்கர் பள்ளியில் மாணவர் சேர்க்கையை திரு.தாவர்சந்த் கெலாட் இன்று (06.12.2018) தொடங்கி வைத்தார்.  பத்திரிகைத் துறையில், தலித் மற்றும் பழங்குடி இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கு முதலாவதாக  அமைக்கப்பட்டுள்ள இந்த ஊடகப்பள்ளிக்கு மக்கள் தொடர்புக்கான இந்திய கல்விக் கழகத்தின் (ஐ ஐ எம் சி) ஆதரவுடன் செயல்படுகிறது.  இந்தப் பள்ளியின் கிளைகள் புனே, அசாம், அருணாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் நாட்டின் இதரப் பகுதிகளில் அமைக்கப்படும். இந்த நிகழச்சியில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு. அமர் சாப்லே, மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் திரு தருண் விஜய், ஐ ஐ எம் சி,  டி.ஜி.,  திரு கே ஜி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு.தாவர்சந்த் கெலாட், இந்த நலிந்த பிரிவு சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள், ஊடகத்துறையில் தங்களுக்கான இடத்தைக் கண்டறிவதற்கு இந்த முயற்சி ஊக்கப்படுத்தும் என்றார்.

 செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட    இதழியல்     மற்றும் மக்கள் தொடர்பு சார்ந்த அனைத்து  முக்கிய பாடப்பிரிவுகளையும், இந்த ஊடகப்பள்ளிக் கொண்டிருக்கும். புனே மையம் விரைவில், திறக்கப்படும்.

     மகத்தான பத்திரிகையாளராகவும், பத்திரிகை ஆசிரியராகவும், இருந்த டாக்டர் பி ஆர் அம்பேத்கரும், அவரின் பணிகளும் ஊடக அதிகாரம் அளித்தலுக்கான டாக்டர் பிஆர் அம்பேத்கர் பள்ளியைத் திறப்பதற்கு முக்கிய ஈர்ப்பு சக்திகளாக இருந்தன.

----

எஸ் எம் பி -கீதா



(Release ID: 1554888) Visitor Counter : 181


Read this release in: English , Hindi