பிரதமர் அலுவலகம்

உத்திரப்பிரதேசம், வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு

Posted On: 12 NOV 2018 7:58PM by PIB Chennai

ஹர ஹர மஹாதேவா!

சாத், சூரிய வழிபாடு செய்யும் இந்த மங்களகரமான நாளில் அனைத்து அன்னைகளுக்கும், சகோதரிகளுக்கும் மற்றும் மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

நான்கு நாட்கள் நடைபெறும் இப்பண்டிகையின்போது ஒவ்வொரு இல்லமும் மகிழ்ச்சியும், வளமும் பெற எனது வாழ்த்துக்கள்

தீபாவளி, பாய் தூஜ் மற்றும் கோவர்தன் பூஜா ஆகிய அனைத்து பண்டிகளுக்காக உங்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக எனது நல்வாழ்த்துக்கள்.

மேடையில் வீற்றிருக்கும் எனது அமைச்சரவை சகா திரு.நிதின் கட்கரி அவர்களே, உத்திரப்பிரதேச முதல்வர் திரு.யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதல்வர் திரு.கேசவ் பிரசாத் மவுரியா அவர்களே, உத்திரப்பிரதேச அமைச்சர் திரு.சுரேஷ் கண்ணா அவர்களே, எனது நாடாளுமன்ற சகாக்கள் டாக்டர்.மஹேந்தரநாத் பாண்டே அவர்களே மற்றும் திரு.ராம்சாரித் நிஷாத் அவர்களே, இங்கு கூடியுள்ள பிற பிரமுகர்களே மற்றும் எனதருமை வாரணாசியின் சகோதர, சகோதரிகளே.

நண்பர்களே,

தீபாவளி மற்றும் தசரா பண்டிகைகளுக்கு பின்பாக, காசி நகர மக்களாகிய உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த முறை தீபாவளி அன்று பாபா கேதார்நாத்தை தரிசிக்கும் வாய்ப்பினை பெற்றேன். தற்போது, ஒரு வாரகாலத்திற்குள்ளாக, பாபா விஸ்வநாத்தின் நகரில் உங்களின் வாழ்த்துக்களை பெற எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. உத்தர்காண்டில் தாய் பாகிரதியை நான் வழிபடும் ஆசி பெற்றேன். இன்று தாய் கங்காவை தரிசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

இந்த நாள் மஹாமானா மாள்வியா அவர்களின் நினைவு நாளாகும். அவரது சிறந்த பணி மற்றும் தவத்தினை நான் மிகுந்த மரியாதையுடன் வணங்குகிறேன்.

நண்பர்களே,

இந்த நாள் காசி, பூர்வாஞ்சல், கிழக்கு இந்தியா மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வரலாற்று சிறப்புமிக்கதாகும்.

பத்தாண்டுகளுக்கு முன்பாக முடிவடைய வேண்டிய வளர்ச்சிப் பணி துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு நடைபெறாமல், இன்று நிகழ்ந்துள்ளதை இன்று வாரணாசியும், நாடும் காண்கிறது.

தீர்மானத்துடன் ஒரு பணி நிறைவேற்றப்பட்டால், அது இறுதியில்  அற்புதமான, பிரகாசம் மற்றும் புகழ்மிக்கதாக இருக்கும் என்ற உண்மையை இன்று வாரணாசியும், நாடும் காண்கிறது.

உள்கட்டமைப்பு, போக்குவரத்து அமைப்புகளுக்கு நாட்டின் அடுத்த தலைமுறை எவ்வாறு புத்துணர்ச்சி அளிக்கப் போகிறது என்ற கருத்தினை இன்று வாரணாசியும், நாடும் காண்கிறது.

உங்களின் பிரதான சேவகன் மற்றும் வாரணாசி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக, இந்த தருணம் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியினை அளித்துள்ளது. இம்மண்ணுடன் ஆன்மிக தொடர்பு உண்மையிலேயே உள்ளது. ஆனால் இன்று, நீர், நிலம் மற்றும் வான் ஆகிய மூன்றையும் இணைக்கும் புதிய சக்தியாக உருமாறியுள்ளது.

நண்பர்களே,

சிறிது நேரத்திற்கு முன்பாக, நீர்வழியாக வந்தடைந்த நாட்டின் முதல் கொள்கலன் கப்பலை நான் வரவேற்றேன். அதே நேரத்தில், ரூ.200 கோடியில் கட்டப்பட்ட பல்நோக்கு முனையமும் துவக்கி வைக்கப்பட்டது.  இப்பணி முடிவடைந்திட பத்தாண்டுகள் பிடித்தது. ஆனால் தேசத்தின் கனவை காசி மண்ணில் நிறைவேற்றப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த கொள்கலன் கப்பல்களின் செயலாக்கம் என்பது, கிழக்கு உத்திரப்பிரதேசம், பூர்வாஞ்சல் மற்றும் கிழக்கு இந்தியா ஆகியவை தற்போது நீர்வழி மூலம் வங்காள விரிகுடாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாகும்.

சகோதர, சகோதரிகளே,

பாபத்பூர் விமான நிலையத்தை நகருடன் இணைக்கும் சாலை, சுற்றுச் சாலை, காசியுடன் இணைப்பு தொடர்பான திட்டங்கள் அல்லது நிலத்தடியில் மின்சார கம்பிகளை இடும் திட்டங்கள் அல்லது தாய் கங்காவை மாசற்றதாக உருவாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளன அல்லது அடிக்கற்கள் நாட்டப்பட்டுள்ளன. சுமார் ரூ.2500 கோடி மதிப்பிலான இத்திட்டங்கள், வாரணாசிக்கு மிகப்பெரிய மற்றும் சிறந்த தோற்றதை உருவாக்கும். இத்தகைய பல்வேறு திட்டங்களுக்காக காசி மற்றும் பூர்வாஞ்சல் மக்களுக்காக எனது இதயத்தின் அடியிலிருந்து வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

சுதந்திரத்திற்கு பின்பாக முதன்முறையாக வணிகம் மற்றும் வியாபாரத்திற்காக நமது நீர்வழிகளை மிகப் பெரிய அளவில் பயன்படுத்துவதில் நாங்கள் வெற்றியடைந்துள்ளோம். நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக வாரணாசியை நீர்வழி மூலம் ஹால்தியாவுடன் இணைக்கும் எனது யோசனையை வைத்த போது, ஒவ்வொருவரும் கேலி செய்ததுடன், எதிர்மறையாக பேசியதற்கும் காசி நகர மக்களே சாட்சியாக உள்ளார்கள்.  இருப்பினும், சிறிது நேரத்திற்கு முன்பாக கொல்கத்தாவிலிருந்து வந்தடைந்த கப்பல் அத்தகைய விமர்சகர்களுக்கு தக்க பதிலை அளித்துள்ளது.

நாட்டின் முதல் கொள்கலன் கப்பல், சரக்கு போக்குவரத்து முறையின் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல், அது புதிய இந்தியாவிற்கான புதிய பார்வைக்கான சாட்சியாக உள்ளது. இது நாட்டின் ஆதாரங்கள் மற்றும் திறன்கள் மீது கொண்டுள்ள  நம்பிக்கையை குறிக்கிறது.

சகோதர, சகோதரிகளே,

கல்காத்தாவிலிருந்து தொழிற்சாலை பொருட்களை சுமந்து இன்று வாரணாசியை வந்தடைந்த கொள்கலன் கப்பல், திரும்பி செல்லும்போது உரங்களை கொண்டு செல்லும். அதாவது, உத்திரப்பிரதேசம் மற்றும் பூர்வாஞ்சல்களில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உரங்கள் உள்ளிட்ட பொருட்கள், நேரடியாக கிழக்கு இந்திய துறைமுகங்களை சென்றடையும்.

இது ஒரு உதாரணம் தான். வாரணாசி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள எனது நெசவாள சகோதாரர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள், காய்கறிகள், உணவு தானியங்கள் இந்நீர்வழி மூலமாக கொண்டு செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை. இப்பகுதியிலுள்ள விவசாயிகள் மற்றும் சிறுதொழிற்சாலைகளுடன் தொடர்புடைய லட்சகணக்கான மக்களுக்கு அத்தகைய பெரிய பாதை திறக்கப்பட்டுள்ளதை கற்பனை செய்யுங்கள்.  அவர்களது தொழிற்சாலைகளுக்கு தேவையான உள்ளீடுகள், மூலப்பொருட்களை பெறுவதற்கும், மதிப்பு கூட்டிய பின்பாக பொருட்களை திரும்பவ அனுப்புவதற்கும் இந்த நீர்வழி முக்கிய பங்காற்றும்.

உங்களது அன்பு மற்றும் உற்சாகத்திற்கு மிக்க நன்றி. உங்களது அன்பு மற்றும் உற்சாகத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், தயவுசெய்து இந்த உற்சாகத்தை 2019-க்காக சேமித்து வையுங்கள். நான் துவங்கலாமா? நான் பேசலாமா? நீங்கள் நான் பேசுவதை அமைதியாக கேட்கப் போகிறீர்களா அல்லது தொடர்ந்து ‘மோடி! மோடி! என து முழக்கமிடப் போகிறீர்களா? உங்களது அளப்பரிய அன்பு மற்றும் உற்சாகத்திற்கு நான் மிகவும் நன்றிவுடையனாவேன். ஆனால் இன்று காசி மக்கள், அதன் நுணுக்கங்களை கேட்டு புரிந்துக்கொள்ள விரும்புகிறார்கள். எனவே, எவ்வாறு மாற்றம் நிகழ்ந்தது மற்றும் எவ்வாறு மாற்றம் நிகழும் என்பது குறித்த அனைத்தையும் நான் விளக்குவதற்கு அனுமதியுங்கள்.

வரும் நாட்களில், வாரணாசியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு முணனயத்திலிருந்து ரோரோ சேவை துவக்கி வைக்கப்படும்போது, நெடுந்தூரங்களுக்கு செல்வதற்கான மற்றொரு மாற்று வழி உங்களுக்கு கிடைக்கும். மிகப் பெரிய டேங்கர்-லாரிகள், பேரூந்துகள் மற்றும் சீருந்துகள், கப்பல்களின் உதவியுடன் பிற நகரங்களை எளிதாக சென்றடையும்.

நண்பர்களே,

இன்று கப்பல் மூலம் இங்கு கொண்டு வரப்பட்ட பொருட்களை சாலை வழியாக கொண்டு சென்றிருந்தால், 16 டிரக்குகள் தேவைப்பட்டிருக்கும். மேலும், நீர்வழி மூலம் பொருட்களை கொண்டு செல்வதன் மூலம் ஒரு கொள்கலனுக்கு ரூ.4500 மிச்சமாகும்.  அதவாது, தற்போது வந்தடைந்த பொருட்களுக்கு ரூ.70000-750000 நேரடியாக மிச்சமாகியுள்ளது. சுருக்கமாக, இந்த நீர்வழி, பணம் மற்றும் நேரத்தை சேமிக்கும், சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும், எரிபொருளை சேமிக்கும் மற்றும் மாசிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

நண்பர்களே,

ஒரு காலத்தில், நம் நாட்டு ஆறுகளில் மிகப் பெரிய கப்பல்கள் பயணித்துள்ளன. இருப்பினும், சுதந்திரத்திற்கு பின்பாக, இத்தகைய வழித்தடங்களை வலுப் பெறச் செய்வதில் கவனம் செலுத்தப்படாமல், அவை புறக்கணிக்கப்பட்டன. நாடு மிகப் பெரிய இழப்புக்குள்ளானது. நமது நாட்டின் திறன் மற்றும் ஆறுகளின் ஆற்றலுக்கு முந்தைய அரசு எவ்வாறு அநீதி இழைத்துள்ளது என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

நமது நாட்டின் திறனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை முடிவிற்கு கொண்டுவர நமது அரசு உழைத்து வருகிறது. இன்று 100-க்கும் மேற்பட்ட நீர்வழிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாரணாசி-ஹல்தியா நீர்வழி அவற்றில் ஒன்றாகும். வாரணாசி-ஹல்தியா இடையயோன வழிதடத்தில் உள்ள பாராக்கா, சஹிப்கஞ் மற்றும் புக்சாரில் ரூ.5000 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நீர்வழி உத்திரப்பிரதேசத்திற்கு மட்டும் பலனளிப்பதோடு மட்டுமல்லாமல், பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற கிழக்கு இந்தியாவின் பெரும்பகுதிக்கும் பலனளிக்கும்.

சகோதர, சகோதரிகளே,

இந்த நீர்வழி சரக்கு போக்குவரத்திற்கு மட்டும் உதவுவதோடு மட்டுமல்லாமல், சுற்றுலாவையும் அதிகரிக்கும் மற்றும் கிழக்கு இந்தியாவில் உள்ள புனித தலங்களை கிழக்காசிய நாடுகளுடன் இணைக்கும். வாரணாசி உள்ளிட்ட பூர்வாஞ்சல் மற்றும் கிழக்கு இந்தியாவின் பகுதிகள், சிறிது காலத்தில் பயண சுற்றுலாவிற்காக புகழ் பெறும். இது காசியின் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்திற்கேற்ப இருக்கும். பாரம்பரிய காசியை அதன் நவீன வடிவத்துடன் இணைத்து வளர்ச்சிக்கான வரைபடம் உருவாக்கப்படும்.

சகோதர, சகோதரிகளே,

நவீன வசதிகளுடன் கூடிய இத்தகைய பண்டைய வழித்தடங்கள், இயற்கை, கலாச்சாரம் மற்றும் சாகசம் ஆகியவை சங்கமிக்கும் இடமாக உருவாகும்.

நண்பர்களே,

கம்பள உற்பத்தியின் மையமாக உள்ள வாரணாசி, பாதோஹி மற்றும் மிர்சாபூர் ஆகியவை தற்போது நாட்டின் கைத்தறி ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக உருவாகி வருகின்றன. கடந்த மாதம், முதல்முறையாக, தீன் தயாள் ஹஸ்தகாலா சங்குலில் இந்தியா கம்பள கண்காட்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியை நான் புதுதில்லியிலிருந்து துவக்கி வைத்தேன்.  வாரணாசி மற்றும் கொல்கத்தா இடையேயான தேசிய நீர்வழியானது, இத்துறையில் தொடர்புடைய மக்களுக்கும் உதவும். அவர்களது ஏற்றுமதிக்காக அவர்கள் மிகவும் பலனடைவார்கள்.

நண்பர்களே,

எளிதாக அணுகுதல் மற்றும் வசதி இடையே நேரடி தொடர்பு உள்ளது; சில சமயங்களில், வசதி, பெருமைக்கு காரணமாக அமைகிறது. பாபத்பூர் விமான நிலையத்தை இணைக்கும் உலகத்தரம் வாய்ந்த சாலை அத்தகைய உதாரணங்களில் ஒன்றாகும். தொலைதூர இடங்களிலிருந்து மக்கள் அங்கு சுயபுகைப்படங்கள் (selfies) எடுக்க வருவதாக என்னிடம் கூறினர். வாரணாசி மற்றும் இந்த சாலை தான் சமூக ஊடகங்களின் கவனமாக உள்ளது. இது பண்டிகைகளின் காலமாகும். உங்களில் யாரேனும் தங்களது சொந்த ஊருக்கு விமானத்தின் மூலம் திரும்ப வந்திருந்திருந்தால், அவர்கள் பாபத்பூர் விமான நிலையத்திலிருந்து வெளியே வரும்போது பெருமையை கொண்டிருப்பார்கள். சிறிது தினங்களுக்கு முன்பாக இந்நகரைவிட்டு சென்ற மக்கள், இந்நகரத்திற்கு மீண்டும் திரும்ப வருகின்றபோது, நாம் இதே ஹரிஹுவா மற்றும் டார்னா-ஷிவ்பூர் சாலையை தான் கடந்து செல்கிறோமா என நம்புவது கடினமாக உள்ளது எனக் கூறியதாக என்னிடம் தெரிவித்தார்கள். இச்சாலையில் பெரும் போக்குவரத்து நெருக்கடிகளால் உங்கள் விமானத்தை தவறவிட்டது மற்றும் விமானத்தை பிடிப்பதற்கு வீட்டை  விட்டு பல மணி நேரங்களுக்கு முன்பாக புறப்பட்ட நாட்களை நீங்கள் நினைவு கூறுங்கள். சாலைகளில் உள்ள குழிகள் உங்களை அழ வைக்கும். தற்போது அந்த நிலை மாறியுள்ளது.

நண்பர்களே,

ரூ.800 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாபத்பூர் விமான நிலையம் மற்றும் நகரத்தை இணைக்கும் சாலையானது விரிவுபடுத்தப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், 4 வழியாக உருவாக்கப்பட்டு, உலகம்  முழுவதிலிருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்க துவங்கியுள்ளது. இச்சாலை காசி மற்றும் இதர சுற்றுலா பயணிகளுக்கு நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், ஜான்பூர், சுல்தான்பூர் மற்றும் லக்னௌ செல்வதற்கான பயணத்தை எளிதாக்கும். நகரின் சுற்றுச் சாலையின் முதல் கட்டம், இன்று காசி மக்களுக்ககாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.760 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இச்சாலையினால், கோரக்பூர், லக்னோ, ஆசாம்கர் மற்றும் அயோத்யா ஆகியவற்றுக்கு சென்று வரும் வாகனங்கள் நகருக்குள் நுழைய வேண்டியதில்லை.

நண்பர்களே,

இந்த இரு சாலை திட்டங்களும், வாரணாசி நகரின் பல்லாண்டுகளுக்கும் மேலான தேவையாக உள்ளது. பிரதமராக பதவியேற்ற 6 மாதங்களுக்குள்ளாக, இந்த இரு திட்டங்களை விரைவாக முடித்திட எனது முயற்சிகளை துவக்கினேன். இந்த இரு சாலைகளும் உங்களது ஒத்துழைப்பினால் தற்போது முடிவடைந்துள்ளது. சுற்றுச் சாலையின் இரண்டாவது கட்டப் பணியும் தற்போது விரைவாக நடைபெற்று வருகிறது. இதுவும் மிக விரைவில் முடிவடையும். இத்திட்டங்கள் வாரணாசியின் போக்குவரத்து நெரிசல், மாசு ஆகியவற்றை குறைப்பதுடன், உங்களது நேரத்தையும் சேமிக்கும். இது சுற்றுலா பயணிகள் சாரநாத் செல்வதை எளிதாக்கும். சிறிது நேரத்திற்கு முன்பாக ராம்நகரில் கட்டப்பட உள்ள ஹெலிபோர்ட்டிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவும் இங்கு சுற்றுலாவிற்கு பயனளிக்கும்.

நண்பர்களே,

இணைப்பு, சுற்றுலாவின் திறன் மற்றும் வேலைவாய்ப்புகளை மட்டுமில்லாமல், நாட்டின் நம்பிக்கையும் அதிகரிக்கச் செய்யும். இன்று துவங்கி வைக்கப்பட்ட அல்லது அடிக்கல் நடப்பட்ட அனைத்து திட்டங்களும், இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகளை திறந்து வைத்துள்ளது.

சகோதர, சகோதரிகளே,

பா.ஜ.க. அரசுகளுக்கும் மற்றும் பா.ஜ.க. தலைமையிலான அரசுகளுக்கும், நாடு மற்றும் நாட்டுமக்களின் வளர்ச்சியே அனைத்துமாகும். தற்போது நாடு வளர்ச்சி சார்ந்த அரசியலையே விரும்புகிறது. ஓட்டு வங்கி அரசியலின் அடிப்படையில் இல்லாமல், வளர்ச்சியின் அடிப்படையிலேயே மக்கள் முடிவு எடுக்கிறார்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளில், நவீன உள்கட்டமைப்புகள் விரைவாக உருவாக்கப்பட்டுள்ளதை நாம் தெளிவாக காணலாம். கடினமான பகுதிகளில் புதிய விமான நிலையங்கள், வடகிழக்கு இந்தியாவின் மலைப் பகுதிகள் மற்றும் தொலைதூர பகுதிகளில் ரயில்கள் முதன் முறையாக சென்றது, ஊரகச் சாலைகள் மற்றும் மிகப் பெரிய மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுசாலைகளின் இணைப்புகள் ஆகியவை நமது அரசின் அடையாளமாக உருவாகியுள்ளன.

நண்பர்களே,

ஆதாரங்களின் வளர்ச்சிக்கு மட்டும் நாங்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை, தூய்மை மற்றும் சுகாதாரம் போன்ற சாதாரண மனிதன் அனைத்து தேவைகளுக்கும் நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். 2014-க்கு முன்பாக 40%-க்கும் குறைவாக இருந்த ஊரக சுகாதாரம், தற்போது 95% ஆக அதிகரித்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் இயக்கத்தின் காரணமாக, எளிய ஏழைகள் தீவிர நோய்களுக்கான மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதை உறுதியகியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், இந்நாள் வரையிலும், 2 லட்சத்துக்கும் அதிகமான ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டம் துவங்கப்பட்டு 40 நாட்களுக்கும் மேலாக கூட ஆகவில்லை.

நண்பர்களே,

மக்களின் உடல்நலத்தின் மீது மட்டும் எங்களது கவனத்தை செலுத்தவில்லை, நமது உயிர்நாடியான, நமது ஆறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உறுதிபூண்டுள்ளோம். இதனை எய்திட, தாய் கங்கையை தூய்மைப்படுத்தவற்கான நமாமி கங்கே இயக்கம், தற்போது புதிய அளவினை அடைந்துள்ளது.

சிறிது நேரத்திற்கு முன்பாக, கங்கையில் பாயும் கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக ரூ.400 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டிலான நான்கு திட்டங்களை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டும் வாய்ப்பினை நான் பெற்றேன். தினாபூரில் உள்ள மூன்று சுத்திகரிப்பு ஆலைகள் நகரிலிருந்து தாய் கங்கையில் பாயும் கழிவு நீரை வரும் பல்லாண்டுகளுக்கு தடுக்கும். அதேபோன்று, ராம்நகர் ஆலையும் தாய் கங்கைக்கு பணியாற்ற தயாராக உள்ளது.

நண்பர்களே,

நமது அரசு கங்கைக்கான நிதியை வீணடிக்கவில்லை, ஆனால் அது கழிவு நீர் கங்கையில் பாய்வதை சுத்திகரிப்பதற்கே பயன்படுத்தப்படுகிறது. நமாமி கங்கே இயக்கத்தின் கீழ், இன்று வரை, ரூ.23000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. ரூ.5000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, கங்கை ஆற்றை ஒட்டியுள்ள ஏறக்குறைய அனைத்து கிராமங்களும் திறந்தவெளி கழித்தல் அற்றவையாக மாறியுள்ளன.   இத்திட்டங்கள் அனைத்தும், கங்கோத்ரி முதல் கங்காசாகர் வரை கங்கையை தூய்மையாக்குவதற்கான நமது தீர்மானங்களின் ஒரு பகுதியாகும்.

மக்களின் பங்கேற்பாலும், ஆறுகள் மீது ஒவ்வொரு குடிமகனுக்குமான பொறுப்பு குறித்த அறிவும் இத்திட்டத்தை இன்று விரைவாக முன்னேற்றமடைய செய்துள்ளது. இல்லையென்றால், கங்கையை தூய்மைப்படுத்துகிறோம் என்ற பெயரில் முந்தைய அரசுகள் எவ்வாறு பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை எவ்வாறு செலவழித்தது என்ற உண்மையை நாம் அறிவோம்.

நண்பர்களே,

வாரணாசியின் சில பகுதிகளுக்கான மின் சீர்திருத்தப் பணிகள் இன்று துவங்கப்பட்டன. பழைய காசியை தவிரவும், ஐ.பி.டீ.எஸ். திட்டத்தின் கீழ் இப்பணி பிற பகுதிகளிலும் முடிவடைந்துள்ளன. தொங்கிக் கொண்டிருந்த அனைத்து மின் கம்பிகளும் நிலத்தடியில் புதைக்கப்பட்டன. சிறப்பான காசியை உருவாக்கும் நமது கனவை நிறைவேற்றுவற்கு எடுத்து வைப்பதற்கான மிக முக்கியமான அடி இதுவாகும். வரும் நாட்களில், இப்பணி நகரின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

நண்பர்களே,

உங்களது முயற்சிகள் மற்றும் உணர்வினால், பண்டைய காசியின் புதிய முகம் நாடு மற்றும் உலகத்திற்கு முன்பாக தோன்றியுள்ளது. நாம் அதனை பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் வைத்திருப்பதன் மூலம் நமது சிறப்பான நகரம் உலகம் முழுவதாலும் கவுரவிக்கப்படும்.

அடுத்த ஆண்டு, பர்வாசி பாரதிய திவாஸ் ஜனவரி மாதத்தில் புனித காசியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள உலகம் முழுவதிலும் இருந்து வரும் மக்களை வரவேற்ப்பதற்காக உங்களை போன்றே, நானும் வாரணாசியில் இருப்பேன். அந்நேரத்தில் பிரயாக்ராஜில் அர்த-கும்பா நடைபெறும். அங்கிருந்தும் பலர் வாரணாசிக்கு வருகை தருவார்கள்.

உலகின் பழம்பெரும் நகரமான காசியின் பெருமை மற்றும் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறந்த வசதிகளின் இணைப்பு ஆகியவை விருந்தினர்களின் நினைவில் காசியின் நினைவுகள் அழிக்க இயலாதவையாக இடம் பெற்று அவர்கள் மீண்டும்மீண்டும் இந்நகருக்கு வருவார்கள் என நாம் அனைவரும் விரும்புவோம்.

இறுதியாக, மீண்டும் ஒரு முறை, இத்தகைய பல்வேறான வசதிகள் மற்றும் புதிய வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். சாத் பூஜாவிற்காக பூர்வாஞ்சல் மற்றும் கிழக்கு இந்தியாவை சேர்ந்த எனது அனைத்து நண்பர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

ஜெய் சாத்தி மையா! ஹர ஹர மஹாதேவா!

 

 

***



(Release ID: 1554709) Visitor Counter : 254


Read this release in: English