பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பாதுகாக்கப்பட்ட பகுதியின் பழங்குடியினரால் கொல்லப்பட்டதாக அஞ்சப்படும் அமெரிக்கர் குறித்த பிரச்சினை தொடர்பாகக் கண்காணிக்க, டிசம்பர் 4 முதல் 6 வரை என்.சி.எஸ்.டி ஆணையம் அந்தமான் நிகோபார் தீவுகளுக்குப் பயணம்

Posted On: 28 NOV 2018 6:20PM by PIB Chennai

தேசியப் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் திரு நந்த் குமார் சாய் தலைமையில் நடைபெற்ற 108-ஆவது கூட்டத்தில், அந்தமான் நிகோபார் தீவுகளில் பாதுகாக்கப்பட்ட பகுதி பழங்குடியினரால் கொல்லப்பட்டதாக அஞ்சப்படும் அமெரிக்கர் குறித்த பிரச்சினை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.  மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் அந்தமான் நிகோபார் நிர்வாகம் அளித்த அறிக்கைகளை ஆணையம் ஆய்வு செய்தது.  மத்தியப் பழங்குடியினர் விவகாரத் துறையின் கூடுதல் செயலர், அமைச்சகம் அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள 30 தீவுகளில் பயணம் மேற்கொள்வது குறித்து எடுத்த முடிவு தொடர்பாக ஆணையத்திடம் எடுத்துரைத்தார்.  அந்தமான் நிகோபார் தீவுகளில் பழங்குடியினர் நலத் துறை செயலரின் கீழ் ஐந்து பேர் கொண்ட குழுவை அந்தமான் நிகோபார் தீவுகளில் துணை ஆளுநர் அமைத்துள்ளது குறித்தும் அவர் விவரித்தார்.

 

இந்தக் குழு வட சென்டினல் தீவுகளில் பிற நாடுகளில் வெளிநாட்டு மக்கள் வருகையை தவிர்ப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள வடிவமைப்பை ஆய்வு செய்து வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் 30 நாட்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.

 

தேசிய பழங்குடியினருக்கான ஆணையத்தின் தலைவர் இந்த அசம்பாவிதம் வடக்கு சென்டினல் தீவுகளில் வாழும் பழங்குடியினரின்  அமைதியைக் குலைக்கும் வகையில் உள்ளது.  உடலை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் தீவுகளின் அமைதியைக் கெடுக்கும் வகையில் அமையும் என்று கூறினார்.  இதுதொடர்பாக டிசம்பர் 4 முதல் 6 வரை ஆணையம் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டு இந்திய அரசியல் அமைப்பு சட்டம், 338 ஏ (5ஏ)-ன் கீழ் இந்த நிகழ்வு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.  வடக்கு சென்டினல் தீவுக்குள் அனுமதியின்றி நுழையாமல் இருக்க அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

                              *****************



(Release ID: 1554198) Visitor Counter : 162


Read this release in: English