நிதி அமைச்சகம்

புதிய நேரடி வரிச்சட்டத்தை உருவாக்க பணிக்குழு

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2018 5:06PM by PIB Chennai

1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தை மறு ஆய்வு செய்யவும், நாட்டின் பொருளாதார தேவைகளுக்கு ஏற்ற புதிய நேரடி வரிச் சட்டத்தை உருவாக்கவும், மத்திய அரசு 2017 நவம்பரில் பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது.

       இது தொடர்பான முந்தைய உத்தரவில் சிறிய மாற்றம் செய்து, மத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினர் (சட்ட மசோதா) திரு. அகிலேஷ் ரஞ்சன், பணிக்குழுவின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  பணிக்குழுவின் மற்ற உறுப்பினர்களில் எந்த மாற்றமும் இல்லை.  இந்தப் பணிக்குழு அதன் அறிக்கையை 2019 பிப்ரவரி 28-க்குள் அரசிடம் தாக்கல் செய்யும்.

 

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1553902) வருகையாளர் எண்ணிக்கை : 162
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi