வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்திய கட்டமைப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழு ரியாத் செல்கிறது பெரு நகர திட்டங்களுக்காக 500 பில்லியன் டாலர் நிதி திரட்ட முயற்சி
Posted On:
26 NOV 2018 1:25PM by PIB Chennai
வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார ராஜதந்திர பிரிவும், இந்திய வர்த்தக மேம்பாட்டு கவுன்சிலும் இணைந்து, கட்டமைப்புத் துறை, வீட்டு வசதி மற்றும் அதனை சார்ந்த துறைகள் மற்றும் பொழுதுபோக்கு தொழிலில் முன்னணியில் உள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை 2018 நவம்பர் 27-28 ரியாதிற்கு அழைத்துச் செல்கின்றன. இவர்கள் சவுதி அரேபியாவில் உருவாக்கப்படும் மெகா சிட்டி திட்டங்களுக்காக 500 பில்லியன் டாலர் முதலீட்டு வாய்ப்புகளை திரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளனர். வெளியுறவுத் துறை கூடுதல் செயலாளர் மனோஜ் பார்தி இந்தக் குழுவிற்கு தலைமையேற்று செல்கிறார்.
இந்தக் குழுவினர் சவுதி அரசு மற்றும் அந்நாட்டு தொழில் துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுடன் கலந்துரையாட உள்ளனர். புதிய சாலைகள், ரயில் பாதைகள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் போன்ற பெரும் திட்டங்களுடன், கித்தியா பொழுதுபோக்கு நகரம் மற்றும் செங்கடல் சுற்றுலாத் திட்டம் போன்றவற்றின் மூலம் சவுதி அரேபிய பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எண்ணெய் வளத்தை மட்டும் சார்ந்திருக்காமல் பிற துறைகளிலும் கவனம் செலுத்தவும் சவுதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது. அந்நாட்டின் 2030 தொலைநோக்கு திட்டம், இந்தியாவின் ரயில்வே துறை, விருந்தோம்பல், சுற்றுலா, விமான நிலையம், வீட்டுவசதி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொழுதுபோக்கு துறைகளைச் சார்ந்த வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
*****
ஏடிஜி/எம்எம்/உமா
(Release ID: 1553885)