பிரதமர் அலுவலகம்

தில்லி தால்கடோரா விளையாட்டரங்கத்தில் இந்திய தபால் கட்டண வங்கியை தொடங்கி வைத்து பிரதமர் உரை

Posted On: 01 SEP 2018 10:53PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள தால்கடோரா விளையாட்டரங்கத்தில் இந்திய தபால் கட்டண வங்கியை பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தில்லியில் நடந்த முக்கிய நிகழ்வோடு தொடர்பில் உள்ள நாடெங்கிலும் உள்ள மூன்றாயிரம் இடங்களில் இந்த நிகழ்ச்சிக் காணக்கிடைத்தது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்திய தபால் கட்டண வங்கியின் மூலமாக  நாட்டின் கடைகோடி பகுதிகளுக்கும் அங்கு வாழும் மக்களுக்கும் வங்கி சேவைகள் எளிதாக கிடைக்கும் என்றார்.

 நிதித்துறையில், உள்ளடக்கிய நிலையை உறுதி செய்ய மத்திய அரசு, ஜன்தன் யோஜனா திட்டத்தை தொடங்கியதை அவர் நினைவு கூர்ந்தார்.  இந்திய தபால் கட்டண வங்கியின் தற்போதைய தொடக்கம் இந்த இலக்கை சாதிப்பதற்கான மற்றுமோர் படி என்றார் அவர். இன்று 650 மாவட்டங்களில் இந்திய தபால் கட்டண வங்கியின் கிளைகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கிராமங்களில் நீண்ட காலமாக தபால்காரர் மதிக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நபராக இருந்துள்ளார் என்றார் பிரதமர். நவீன தொழில்நுட்பத்தின் வரவுக்குப் பிறகும், தபால்காரர் மீதான நம்பிக்கை தொடர்கிறது என்றார் அவர். மாறி வரும் காலத்திற்கு ஏற்றாற்போல் தற்போதைய  கட்டமைப்பை சீரமைப்பதே அரசின் அணுகுமுறை என்றார். நாட்டில் தற்போது 1.5 லட்சத்திற்கும் மேலாக தபால் நிலையங்கள் இருப்பதாகவும், 3 லட்சம் தபால்காரர்கள் நாடெங்கிலும் மக்களோடு தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  இப்போது நிதிச்சேவைகளை வழங்க இவர்களுக்கு கைபேசிகளும், டிஜிட்டல் கருவிகளும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

இந்திய தபால் கட்டண வங்கியின் பயன்களை பட்டியலிட்ட பிரதமர், இது பணபரிவர்த்தனை, அரசு பயன்களின் பரிவர்த்தனை, கட்டணம் செலுத்துதல் மற்றும் முதலீடு, காப்பீடு உள்ளிட்ட சேவைகளுக்கும் உதவும் என்றார். தபால்காரர்கள் மக்களின் வாயிற்படியில் இந்த சேவைகளை கொண்டு செலுத்த முடியும் என்றார் அவர். இந்திய தபால் கட்டண வங்கி, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வழி வகுப்பதோடு, பிரதான் மந்திரி  ஃபசல் பீமா யோஜனா உட்பட்ட திட்டங்களின் பயன்களை பெறுவதில் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்றார்.

தாறுமாறான முறையில் கடனுக்கான முன்பணம், கொடுக்கப்படுவதால் இந்திய வங்கித்துறையில் எழுந்துள்ள பிரச்சினைகளை 2014 முதல், அரசு உறுதியோடு  எதிர்கொண்டுள்ளது என்றார். தற்போதைய கடன்கள் மறு ஆய்வு செய்யப்பட்டதாகவும், வங்கித்துறையைப் பொறுத்தவரை தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.  குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்வதற்கு, தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மசோதா போன்று பல நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

சுயவேலைவாய்ப்புகளை உருவாக்க 13 லட்சம்  கோடி ரூபாய் மதிப்பிலான முத்ரா கடன்கள், ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் கூறினார். இன்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முன் எப்போதும் இல்லாத வெற்றி, சிறந்த வளர்ச்சிக்கான புள்ளி விவரங்களைக் கொண்ட பொருளாதாரம் ஆகியவற்றால் இன்று ஒட்டுமொத்த நாடும் புதிய தன்னம்பிக்கையோடு இருப்பதாக அவர் கூறினார். இது மக்களின் கூட்டு முயற்சியினால் சாத்தியமானது என்றார். இன்று இந்தியா உலகத்திலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மட்டுமல்ல, வேகமாக வறுமையை ஒழிக்கும் நாடாகவும் உள்ளது என்றார்.

கிராமங்களில் உள்ள ஒவ்வொரு இல்லத்திற்கும், ஒவ்வொரு விவசாயிக்கும், ஒவ்வொரு சிறிய வியாபாரத்திற்கும் நிதிச் சேவைகளை வழங்குவதில் 3 லட்சம் தபால்காரர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்று பிரதமர் கூறினார். கடந்த சில மாதங்களாக தபால்காரர்களின் நலனுக்காகவும், அவர்களது நீண்டநாளைய கோரிக்கைகளை நிறைவேற்றவும் பல நடவடிக்கைகளை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.  இதனால் அவர்களது ஊதியம் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.  அடுத்த சில மாதங்களில் இந்திய தபால் கட்டண வங்கி நாடெங்கிலும் உள்ள 1.5 லட்சம் தபால் நிலையங்களை சென்றடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

----------



(Release ID: 1553243) Visitor Counter : 127


Read this release in: English , Marathi , Bengali , Bengali