குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

உயர்கல்வித் துறை மீது கவனம் செலுத்தி மறுசீரமைக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்

Posted On: 18 NOV 2018 3:03PM by PIB Chennai

21 ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப, உயர்கல்வித் துறையில் கவனம் செலுத்தி, மறுசீரமைக்க வேண்டியது அவசியம் என குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கைய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.  புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் க்ரியா (Krea) பல்கலைக்கழகத்தை தொடங்கிவைத்துப் பேசிய அவர், நாட்டிலுள்ள உயர் சிறப்பு வாய்ந்த கல்வி நிறுவனங்கள், தரமான கல்வியை வழங்குவதோடு மட்டுமின்றி, ஒரு தனிநபரின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

      க்ரியா பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள், விரைவான முன்னேற்றம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, சர்வதேச அரங்குகளில் பெரும் திறமை மற்றும் தனித்துவம் வாய்ந்த சாதனை படைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

      அரசாங்கம் ஒரு வலிமையான ஏற்பாட்டளாராக பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்திய திரு. வெங்கைய நாயுடு, கல்வித்துறையில் தனியார் துறையினர்  அதிக பங்களிப்பை வழங்க முன்வருவதுடன், பல்கலைக்கழகங்களும் கண்டுபிடிப்புக்கான மையங்களாக மாறவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

*****


(Release ID: 1553083) Visitor Counter : 120
Read this release in: English