வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2018 அக்டோபர் வரையில் வெளிநாட்டுடன் இந்தியாவின் ஏற்றுமதி 17.17 சதவீதம் வளர்ச்சி
Posted On:
15 NOV 2018 5:41PM by PIB Chennai
2018-19ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் இந்தியாவிலிருந்து மொத்தம் 30,832 கோடி டாலர் (ரூ. 22,17,650.87 கோடி) மதிப்புள்ள பொருட்களும், சேவைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
அதைப் போல் இதே கால கட்டத்தில் (2018-19 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை) ஒட்டுமொத்தமாக 37,488 கோடி டாலர் (ரூ. 26,96,396.46 கோடி) மதிப்புக்கு பொருட்களும் சேவைகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் கடந்த ஆண்டை விட ஏற்றுமதியில் 17.17 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்றுமதி
2018 அக்டோபரில் 2698 கோடி டாலருக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 1,98,634.84 கோடி) ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதே காலத்தில் கடந்த ஆண்டு 2289 கோடி டாலர் (ரூ. 1,48,962.64 கோடி) மட்டுமே ஏற்றுமதியாகியுள்ளது. இது 17.17 சதவீத வளர்ச்சியாகும்.
இறக்குமதி
2018 அக்டோபரில் 4411 கோடி டாலர் (ரூ. 3,24,774.78 கோடி) மதிப்புக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதே காலத்தில் 2017ம் ஆண்டு இறக்குமதி 3750 கோடி டாலர் (ரூ. 2,44,064.20 கோடி) ஆகும். இது டாலர் மதிப்பில் 17.62 சதவீதமும், ரூபாய் மதிப்பில் 33.07 சதவீதமும் வளர்ச்சியாகும்.
ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மொத்த இறக்குமதி அளவு 30247 கோடி (ரூ. 20,97,058.41 கோடி). இதே காலத்தில் கடந்த ஆண்டு இறக்குமதி அளவு 25,992 கோடி டாலர் (ரூ.16,75,887.95 கோடி) ஆகும். இது டாலர் மதிப்பில் 16.37 சதவீதம் வளர்ச்சியாகும். ரூபாய் மதிப்பில் 25.13 சதவீதம் வளர்ச்சியாகும்.
சேவைகள் (2018 செப்டம்பர் வரை):
சேவைகளின் ஏற்றுமதி கடந்த செப்டம்பரில் 1638 கோடி டாலர் (ரூ.1,18,295.88 கோடி) ஆகும். இது டாலர் மதிப்பில் ஆகஸ்ட் மாதத்தை விட 0.88 சதவீதம் குறைவாகும்.
கடந்த செப்டம்பர் வரையிலான இறக்குமதி 995 கோடி டாலர் (ரூ. 71,825.34 கோடி) ஆகும். இது டாலர் மதிப்பில் 3.94 சதவீதம் குறைவாகும்.
ஒட்டுமொத்த வர்த்கம்:
பொருட்கள், சேவைகளின் மொத்த வர்த்தகத்தைப் பொறுத்தவரையில் 2018-19ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் 6667 கோடி வரையில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வர்த்தக அளவு 5223 கோடி டாலர் ஆகும்.
*****
வி.கீ/பாகி/க
(Release ID: 1552944)
Visitor Counter : 151