நிதி அமைச்சகம்

ஜி.எஸ்.டி தொகைகளை திரும்பப் பெறும் கோரிக்கை சமர்ப்பிப்பது தொடர்பாக சில அறிவுரைகள்

Posted On: 09 NOV 2018 4:17PM by PIB Chennai

செலுத்தப்பட்ட ஜி.எஸ்.டி தொகையிலிருந்து திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையின்போது, வெளிநாட்டு தூதரகங்கள், துணைத் தூதரகங்கள், ஐ.நா. அமைப்புகள் ஆகியன பயன்படுத்துவதற்கான தனித்துவ அடையாள எண் வழங்க ஜி.எஸ்.டி சட்டம் வகை செய்கிறது. இதற்கான ஒரு நிபந்தனை, ஜி.எஸ்.டி திரும்பப்  பெறும் கோரிக்கை படிவத்தை ஜி.எஸ்.டி.ஆர்.11-ன் வலைதளத்தில் பொருள் பெற்றதற்கான ரசீது நிலை தரவுகளுடன்  பதிய வேண்டும். திரும்பப்  பெறும் கோரிக்கை மனுக்களை பரிசீலித்த ஜி.எஸ்.டி அதிகாரிகள் இவற்றில் சில பொதுவான தவறுகள் இருப்பதைக் கவனித்துள்ளனர்.

உதாரணமாக, தில்லியில் பதிவு பெற்ற தூதரகங்கள், அவர்கள் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பெற்ற சேவைகள் மற்றும் பொருட்கள் சம்பந்தமாக படிவத்தின் பெற்ற இடம் என்ற களத்தில் புதுதில்லி என்று தொடர்ந்து எழுதி வருவது காணப்பட்டுள்ளது. இதனால், ஜி.எஸ்.டி-யை மத்திய ஜி.எஸ்.டி /  மாநில ஜி.எஸ்.டி அல்லது ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி என வகைப்படுத்துவதில் மிகுந்த காலதாமதமும், கோரிக்கை நிராகரிக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது.

இதனால், இந்தப் படிவத்தில் வழங்கப்பட்ட இடம் என்ற களத்தை நிரப்பும்போது, எந்த இடத்தில் சேவை அல்லது பொருட்கள் பெறப்பட்டதோ, அந்த இடத்தின் பெயரை தவறாமல் குறிப்பிடுமாறு சம்பந்தப்பட்ட அனைவரும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

*******



(Release ID: 1552333) Visitor Counter : 134


Read this release in: English