ஆயுஷ்

ஆயுர்வேத மருத்துவத்தில் தொழில் முனைப்பு மற்றும் வர்த்தக மேம்பாடு குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு புதுதில்லியில் தொடங்கியது

Posted On: 04 NOV 2018 2:16PM by PIB Chennai

ஆயுர்வேத மருத்துவத்தில் தொழில்முனைப்பு மற்றும் வர்த்தக மேம்பாடு குறித்த இரண்டுநாள் தேசிய கருத்தரங்கு புதுதில்லியில் இன்று தொடங்கியது. ஆயுஷ் அமைச்சக மத்திய இணையமைச்சர் திரு. ஸ்ரீபத் எசோ நாயக் மற்றும் கலாச்சார சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணையமைச்சர் டாக்டர் மகேஷ் ஷர்மா ஆகியோர் துவக்க உரையாற்றினர்.  டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கை நித்தி ஆயோக் ஒத்துழைப்புடன் ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.  ஆயுர்வேத மருந்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இத்துறையில் வர்த்தக வாய்ப்புகளை கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

      ஆயுர்வேதத் தொழிலை மேம்படுத்துவதற்கு அமைப்புகளை தொடங்குவதோ அல்லது நிதியுதவி செய்வதோ மட்டும் போதாது என்று  கருத்தரங்கில் பேசிய திரு ஸ்ரீபத் யசோ நாயக் தெரிவித்தார்.  ஆயுர்வேதத் தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் ஆயுஷ் அமைச்சகம் பல திட்டங்களை செயல்படுத்தியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். “தொங்குக இந்தியா”, “இந்தியாவில் தயாரிப்போம்”, “இந்தியாவில் முதலீடு செய்க” மற்றும் “மின்னணு இந்தியா” ஆகிய பிரதமர் திரு. நரேந்திர மோடியின் புரட்சிகரத் திட்டங்களுடன் ஆயுர்வேத தொழிலையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

      மத்திய இணையமைச்சர் டாக்டர் மகேஷ் ஷர்மா பேசுகையில், ஆயுர்வேதம், நமது வளமான பாரம்பரிய பெருமையின் ஒரு பகுதி என்றும், அதன் முக்கியத்துவத்தை இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் நாம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

*****


(Release ID: 1551842) Visitor Counter : 168
Read this release in: English