பிரதமர் அலுவலகம்

இந்திய - ஜப்பான் தகவல் அறிக்கைகள்

ஆப்பிரிக்கா உள்பட இந்திய – பசிபிக் மண்டலத்தில் இந்திய - ஜப்பான் மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு

Posted On: 29 OCT 2018 6:57PM by PIB Chennai
  1. ஆப்பிரிக்கா உள்பட இந்திய – பசிபிக் மண்டலப் பகுதியில் பொருளாதார வளர்ச்சியின் மூலம் அமைதி, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றுக்காகவும் நமது கூட்டாளிகளின் திறன் மேம்பாட்டுக்காகவும் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயல்படுவது என்று உறுதி பூண்டுள்ளன. அனைத்து மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு நடவடிக்கைகளிலும் வெளிப்படைத் தன்மை, திறந்த மனத்துடன் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வழிகோலும் வகையில் இருக்க  வேண்டும் என்பதில் இரு நாடுகளும் நம்பிக்கை கொண்டுள்ளன. அந்த ஒத்துழைப்பு சர்வதேச தரத்துடன் நாடுகளின் பரஸ்பர இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, பொறுப்புள்ள கடன் நிதி நடைமுறைகள் உள்பட உள்நாட்டுப் பொருளாதார மற்றும் மேம்பாட்டு உத்திகள், முன்னுரிமைகள் ஆகியவற்றை மதிப்பதாக அமைய வேண்டும் என்றும் உறுதிபூண்டன.
  2. இந்தியாவின் “கீழை நாடுகளில் செயல்படுவதற்கான கொள்கை” (Act East Policy), ஆப்பிரிக்க நாடுகளுடன் தொடர்பு நீடிப்பதற்கான பிரதமர் மோடியின் 10 அம்ச வழிகாட்டுதல்கள், ஜப்பானின் ‘தரமான கட்டமைப்புக்கான விரிவான கூட்டாண்மை’, ஆப்பிரிக்க மேம்பாட்டுக்கான 6 ஆவது சர்வதேச மாநாட்டின் பிரகடனம் (TICAD VI) ஆகியவற்றை ஒருங்கிணைத்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வதை இரு நாடுகளும் வரவேற்றுள்ளன. ஆசிய பசிபிக் மண்டலத்தில் தகவல் இணைப்பு உள்ளிட்ட கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்தும் வகையில் பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து நடத்த இரு நாடுகளும் இசைந்துள்ளன. இந்தியாவும் ஜப்பானும் எந்தெந்த அம்சங்களில் ஒத்துழைப்பது எனக் கண்டறிவதில் ஏற்பட்ட முன்னேற்றத்தில் திருப்தி அடைந்துள்ளன.


2.1 திரவ இயற்கை எரிவாயு (LNG) குறித்த கட்டமைப்பு ஆகியவற்றில் இலங்கையுடன் ஒத்துழைப்பு.

2.2 மியான்மரில் ராகின் மாநிலத்தில் வீட்டுவசதி, கல்வி மின்சாரத் திட்டங்களைச் செயல்படுத்துவடன் அந்நாட்டுடன் ஒத்துழைப்பது.

2.3 வங்க தேசத்துடன் நான்குவழிச் சாலைகளை மேம்படுத்தி இணைப்பை வலுப்படுத்துதல், ராம்கர் – பரையாராத் இடையிலான பாலங்களை மறுசீரமைத்தல், யமுனை நதி மீதான பாலத்துக்குத் தேவையான தளவாடங்களை வழங்குதல்.


2.4 கென்யாவில் சிறு, நடுத்தரத் தொழில்கள் குறித்த கருத்தரங்குகளை நடத்தி ஆப்பிரிக்காவுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கென்யாவில் புற்றுநோய் மருத்துவமனை அமைப்பது உள்பட சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புக்கான வழிவகை காணுதல்.

  1. மனித ஆற்றல் மேம்பாட்டை விரிவுபடுத்துவது, திறன் மேம்பாடு, வாழ்வாதாரம், மக்கள் நலம், குடிநீர், சுகாதாரம், டிஜிட்டல் துறை ஆகியவற்றில் ஒத்துழைப்பதன் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் கிடைக்கவும் இணைந்து செயல்பட இசைந்தன. ஆப்பிரிக்கா உள்பட இந்திய – பசிபிக் பகுதி மக்களுக்கு உதவுவதற்கும் மேம்பாட்டுக்கான வழிகளைக் காணவும் இரு நாடுகளும் இசைந்தன.
  1. மேலும், இந்திய – ஜப்பான் நாடுகளில் வர்த்தக மாற்றங்களை அதிகரிக்கும் வகையில், இரு நாடுகளின் தொழில்களுக்கான தளத்தை (India-Japan Business Platform) நிறுவுவதற்கும் இரு நாடுகள் இசைந்துள்ளன. இதன்படி தொழில் பிரிவுகளையும் (Industrial Corridors) தொழில் இணைப்பையும் (Industrial Network)  அமைப்பதற்காக இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இது தொடர்பாக இந்திய ஏற்றுமதிக் கடன் உத்தரவாதக் கழகம் (Export Credit Guarantee Corporation of India) மற்றும் ஜப்பான் ஏற்றுமதி முதலீட்டுக் காப்பீட்டு நிறுவனம் (Nippon Export and Investment Insurance) ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதை இரு நாடுகளும் வரவேற்றன. இரு நாடுகளுக்கும் இடையில் உறுதியான வர்த்தக திட்டங்களை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  1. இந்திய – பசிபிக் மண்டலத்தில் இயங்கும் மேம்பாட்டுக் கார்ப்பரேஷன்கள் மண்டலத்தில் பயன்தரும் ஆக்கபூர்வமான நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஆப்பிரிக்காவின் சமூகபொருளாதார மேம்பாட்டுக்கும் பங்களிப்பு செலுத்தும் என்றும் இந்தியாவும் ஜப்பானும் நம்புகின்றன.

இந்திய ஜப்பான் ஒத்துழைப்புக்கான பேரவை

  1. இந்தியாவின் ‘கீழை நாடுகளில் செயல்படுவதற்கான கொள்கை’-யை (Act East Policy) செயல்படுத்துவதில் நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியமானவை ஆகும். அதன் அடிப்படையில் ஆசியான் (ASEAN) அமைப்புடன் அம்மாநிலங்கள் வரலாற்றுப் பூர்வமாக பாரம்பரியமான உறவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கு இசைவு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வடகிழக்கு மாநிலப் பகுதிகளும் அண்டை  நாடுகளுக்கும் இடையிலான  தகவல் தொடர்பை மேம்படுத்தவும் உறுதி மேற்கொள்ளப்பட்டது.
  2. கீழை நாடுகளில் செயல்படுவதற்கான பேரவை (Act East Forum) கடந்த ஆண்டு நிறுவப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் இந்திய ஜப்பான் ஒத்துழைப்பை மேம்படுத்தியுள்ளன. இதன் இரண்டாம் கூட்டம் அக்டோபர் 8ம் தேதி நடைபெற்றன.

2.1 அமலாக்கத்தை விரைவுபடுத்துதல்:

மேகாலயா - வடகிழக்கு  இணைப்பு

முதல் கட்டம்: துரா – தாலு (தேசிய நெடுஞ்சாலை-51)

இரண்டாம் கட்டம்: ஷில்லாங்-தாவ்கி (தேசிய நெடுஞ்சாலை-40)

மிஜோரம் – வடகிழக்கு இணைப்பு

முதலாவது, இரண்டாவது கட்டங்கள்: அய்ஸ்வால்-துய்பாங் (தேசிய நெடுஞ்சாலை -54)

சிக்கம் : பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் வன மேலாண்மை

நாகாலாந்து: வனப் பாதுகாப்பு வாழ்வாதார மேம்பாடு


2.2 ஜப்பான் – இந்தியா தொடர்வதற்கு உறுதிபூண்டுள்ள திட்டங்கள்:


துப்ரி / ஃபுல்பாரி பாலத் திட்டம் (Dhubri/Phulbari bridge project) உள்பட ஆசிய வளர்ச்சி வங்கியுடன் இணைந்து ஜெலுஃபு – தாலு இடையிலான சாலைத் திட்டத்தை நிறைவேற்றுதல்

 

பிரதான மாவட்டச் சாலைகளையும் (Main District Roads) இதர மாவட்டச் சாலைகளையும் (Other District Roads) மேம்படுத்துதல். (இது சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும்).

உமியம் – உம்த்ரு நீர்மின் நிலையத்தின் மூன்றாவது கட்டப் பிரிவை (Umiam-Umtru Stage-III Hydroelectric Power Station) நவீனமாக்குதல், புதுப்பித்தல் திட்டத்திற்கு “அலுவல் மேம்பாட்டு உதவி” (Official development assistance) கடனுதவி பெறுதல்.


திரிபுரா மாநிலத்தில் நீடித்த வன மேலாண்மை, மேகாலயாவில் அதைப் போன்ற இன்னொரு திட்டம் ஆகியவை.

2.3 திறன் மற்றும் தொழில் முன்முயற்சிகள் (Skill and Vocational Initiatives):


ஜப்பான் – இந்தியா வடகிழக்கு மூங்கில் பயன்பாட்டுத் திட்டம் (Japan-India North East Bamboo Initiative) அறிமுகம். இத்திட்டத்தின் கீழ் மூங்கில் மற்றும் மூங்கில் வனங்களைத் தொழில் பயன்பாட்டுக்கு கையாள வன மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக வடகிழக்கு மூங்கில் பயன்பாட்டு பயிலரங்கம் (North East Bamboo Workshop) நடத்தப்படும்.


இரு நாட்டுப் பிரதமர்களும் முடிவு செய்தபடி வடகிழக்கு மாநிலங்களில் ஜப்பானிய மொழிக் கல்விக்கான சான்றிதழ் படிப்பை 100 கல்லூரிகளில் நிறுவுதல். இதற்கு காட்டன் பல்கலைக்கழகம் (Cotton University) குவாஹாத்தி பல்கலைக்கழகமும் (Gauhati University)  ஆர்வம் தெரிவித்துள்ளன. மேகாலயாவில் உள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகம் (English and Foreign languages University) நாகாலாந்தில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT-N)  ஆகியவற்றுக்கு ஜப்பானிய மொழி ஆசிரியர்கள் பயிற்சி நிறுவனம் (Japanese Language Teachers Training Centre) மூலம் தேவையானவற்றை அளிக்கத் தயாராக உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இதைப் போன்ற மேலும் பல கோரிக்கைகள் வரவேற்கப்படுகின்றன.

தொழில்நுட்பப் பயிற்சிக்காக (Technical Intern Training Programme) ஜப்பான் செல்வோருக்கு ஜப்பான் மொழி உள்பட பல்வேறு திறன்மேம்பாட்டுப் பயிற்சியை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.


2.4 பேரிடர் மேலாண்மை:

வடகிழக்கு மாநிலங்களில் தாக்குப்பிடிக்கக் கூடிய கட்டமைப்புக்கும் மலைப் பகுதிகளில் நெடுஞ்சாலைக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக ஜப்பான் பங்களிப்பு செலுத்துகிறது.

 

ஜப்பான் – இந்தியா பேரிடர் ஆபத்துகளைக் குறைப்பதற்கான பயிலரங்கு மூலம் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.


வடகிழக்கு மாநிலங்களில் உரிய பயிற்சிக்கான வாய்ப்புகளுக்காக ஜப்பான் – சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA)  அறிவார்ந்த ஒத்துழைப்புத் திட்டத்தைப் பகிர்ந்து கொள்ளுதல்.

 

  1. இத்திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்திய ஜப்பானிய பேரவை ஆய்வு செய்யும். அத்துடன் வடகிழக்கு மாநிலங்களில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்களையும் ஆராயும்.

 

இந்திய – ஜப்பான் பொருளாதார மற்றும் அலுவல் மேம்பாட்டு உதவிக்கான (ODA) ஒத்துழைப்பு:

இந்தியாவில் சமூக பொருளாதார மேம்பாட்டில் ஜப்பானின் அலுவல் மேம்பாட்டு உதவி (ODA) குறிப்பிடத் தக்க பங்கினை வகிக்கும் ஜப்பானை இந்தியா பெரிதும் பாராட்டியது. ஜப்பானின் உதவி குறித்து ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

 

ஜப்பானின் அலுவல் மேம்பாட்டு உதவி (ODA) கடன் திட்டம்:


கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற உச்சி மாநாட்டின் தொடர்ச்சியாக கீழ்க்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன:

பெங்களூருவில் குடிநீர் – வடிகால் வசதி (மூன்றாம் கட்டம்)

மும்பை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டம்


சென்னையில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு உதவி அளித்தல்

இமாசலப் பிரதேச வனத் துறையின் மேம்படுத்தும் திட்டம்.


மேலாண்மை மற்றும் வாழ்வாதாரங்கள் (இமாசலப் பிரதேசம்)


13-வது உச்சி மாநாட்டின்போது, கீழ்க்கண்ட திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மும்பை – அகமதாபாத் அதி உயர் விரைவு ரயில்வே சேவைக்கான 2-ம் கட்ட திட்டத்தின் இரண்டாம் கட்டம் உள்பட பல திட்டங்கள் (மகாராஷ்டிரம் மற்றும் குஜராத்)

உம்ரா – உம்த்ரு மூன்றாம் கட்டப் பணிகளைப் புதுப்பித்தல், நவீனமாக்கும் திட்டங்கள்

மேகாலயாவில் நீர்மின்சாரத் திட்டம்


தில்லி விரைவு ரயில் போக்குவரத்து மூன்றாம் கட்டம்


வடகிழக்கு மாநில சாலை இணைப்பை மேம்படுத்துவது (3வது கட்டம்)

 
அசாமில் துப்ரி, மேகாலயத்தில் ஃபுல்பாரி ஆகிய இடங்களில் சில திட்டங்கள்

மேற்கு வங்கம் புர்லியாவில் துர்கா குழாய் மூலம் நீரேற்றும் திட்டம் (I)

சென்னைப் பெருநகர் வட்டச் சாலை (முதல் கட்டம்) அமைத்தல்

திரிபுராவில் வன மேலாண்மை திட்டம்

இவற்றுடன் இந்தியாவில் பால் வள மேம்பாட்டுக்கான அலுவல் மேம்பாட்டு உதவியின் (ODA) கீழ் கடன் விரைவில் வழங்கப்படும் என்று இந்தியா தனது எதிர்பார்ப்பைத் தெரிவித்துள்ளது. அத்துடன் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள நாக் நதியின் சுற்றுச்சூழல் மாசினைப் போக்குவதற்கான ஆயத்தப் பரிசோதனைகள், மத்தியப் பிரதேசத்தில் ஊரகப் பகுதிக்கான குடிநீர்த் திட்டம், மேகாலயத்தில் இயற்கை சமூகக் காடுகள், குடிநீர் மேலாண்மை ஆகிய திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும்.

அலுவல் மேம்பாட்டு உதவியின் (ODA) மூலம் நீடித்த மேம்பாட்டு இலக்குகளை (Sustainable Development Goals - SDGs) ஊக்குவிக்க இந்திய, ஜப்பான் நாடுகளின் அரசுகளுக்கு இடையிலான விவாதங்கள் தொடங்கப்பட்டுள்ளது வரவேற்கப்படுகிறது.


வாரணாசி மாநாட்டு மையம்


வாரணாசியில் கட்டப்பட்டு வரும்  சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டுக்கான மையத்துக்கான (International Cooperation and Convention Center) பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளன. இது இந்திய ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான நட்பின் அடையாளமாகத் திகழும். ஜப்பான் இதற்காக ஏற்கெனவே கூடுதல் மானிய உதவி அளித்ததை இந்தியா வரவேற்றுள்ளது.


போக்குவரத்து மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக்கான மானியம்


பெங்களூருவில் போக்குவரத்துக்கான மேம்பட்ட தகவல் முறை, மேலாண்மை நடைமுறை ஆகிய திட்டத்துக்கு மானிய உதவி அளிக்க வகை செய்யும் குறிப்புகளைப் பரிமாறிக் கொள்வதை இந்தியா வரவேற்றுள்ளது.

 

ரயில்வே துறையில் இந்திய – ஜப்பான் ஒத்துழைப்பு

 

மும்பை -  அகமதாபாத் அதிவிரைவு ரயில்


இந்தியாவில் ரயில் போக்குவரத்தில் புரட்சி ஏற்படுத்தவும் உயர் வேக ரயில் போக்குவரத்தைக் கொண்டுவரவும் . மும்பை - அகமதாபாத் இடையில் அதி உயர்வேக ரயில் போக்குவரத்து (MAHSR) கட்டமைப்பை உருவாக்க  இந்தியாவும் ஜப்பானும் ஒத்துழைத்து வருகின்றன. இத்திட்டத்தின் முக்கியத்துவம் கருதி, இது குறித்து உயர்நிலையில் ஆய்வு நடத்தப்படுகிறது. கூட்டுக் குழு சந்திப்பு (Joint Committee Meeting) நடத்தப்படுகிறது. இக்கூட்டத்திற்கு இந்திய தரப்பில் நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார், ஜப்பான் தரப்பில் அந்நாட்டுப் பிரதமர் சின்ஷோ அபேயின் சிறப்பு ஆலோசகர் டாக்டர் ஹிரோடோ இஸுமி தலைமை வகிக்கின்றனர்.


இத்திட்டத்தின் எட்டாவது கூட்டுக் குழுக் கூட்டம் தில்லியில் கடந்த செப்டம்பர் 17ம் தேதி நடைபெற்றது. திட்டம் சுமுகமாக நிறைவேற இரு தரப்பு செயல்பாடுகளையும் தொடர்வதற்கு இசைவு தெரிவிக்கப்பட்டது. மும்பை - அகமதாபாத் இடையில் அதி உயர்வேக ரயில் போக்குவரத்து (MAHSR) திட்டத்தை ஆய்வு செய்ய ஜப்பான் நாட்டு நிலம், கட்டமைப்பு, சுற்றுலா மற்றும் போக்குவரத்து அமைச்சர் திரு. கெய்ச்சி இஷி 2017ம் ஆண்டு டிசம்பரிலும் துணை அமைச்சர் திரு. மாஸாடோஷி அகிமோடோ கடந்த 2018 மே மாதமும் இந்தியாவுக்கு வந்திருந்தனர். ரயில் நிலையம், சாலை வசதி இணைப்பு ஆகியவை குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.

 

ஜப்பான் பன்னாட்டு ஒத்துழைப்பு முகமை (Japan International Cooperation Agency) மேற்கொண்ட மதிப்பீட்டுப் பணிகள் கடந்த செப்டம்பரில் நிறைவடைந்ததை அடுத்தும் ஜப்பானின் அலுவல் மேம்பாட்டு கடன் உடன்பாடு கடந்த செப்டம்பர் 28ம் தேதி கையெழுத்தானது. அதையடுத்து மும்பை - அகமதாபாத் அதி உயர்வேக ரயில் போக்குவரத்து இரண்டாம் கட்டத் திட்டம் குறித்து தகவல் குறிப்புகள் பரிமாற்றம் (Exchange of Notes), கடன் குறித்த உடன்பாடு ஆகியவை உச்சி மாநாட்டில் கையெழுத்திடப்பட்டன.

 

நடப்பு நிலைமை: மகாராஷ்டிரம் – அகமதாபாத் ரயில் திட்டத்தை தேசிய உயர்வேக ரயில் கழகம் (National High Speed Rail Corporation Limited - NHSRCL) செயல்படுத்த வருகிறது. இதன் இடங்களை ஆய்வு செய்யும் இறுதி கட்டப் பணி பூர்த்தியாகிவிட்டது. அதன் அடிப்படையில் அனைத்து நிலத்தடி மற்றும் மேம்பாலப் பயன்பாடுகள் குறித்த விவரம் அடையாளம் காணப்பட்டுவிட்டது. மும்பைக்கும் அகமதாபாதுக்கும் இடையில் இதற்குத் தேவைப்படும் நிலத்தைக் கையகப்படுத்தும் நடைமுறை 2018ம் ஆண்டு டிசம்பருக்குள் நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 487 கி.மீ. தூரத்தில் 328 கி.மீ. தூரத்துக்கு  கூட்டு அளவீட்டு ஆய்வு முடிந்துவிட்டது.

உயர்வேக ரயில் போக்குவரத்துப் பயிற்சி நிறுவனத்தை (High-Speed Rail training institute) அமைப்பது உள்பட மொத்த திட்டமும் 26 ஒப்பந்ததாரர்களுக்கு பிரித்து ஒதுக்க முடிவு செய்து, அவற்றில் 4 பேருக்கு பணிகளும் அளிக்கப்பட்டுள்ளன. பல்வகை ஒருங்கிணைப்பு போக்குவரத்துத் திட்டம் (Multimodal Transport Integration Plan) 12 ரயில்நிலையங்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. பொது ஆலோசனைக்கான ஒப்பந்தம் ஜப்பான் பன்னாட்டு ஒத்துழைப்பு முகமைக்கும் (JICA) இந்திய ரயில்வே துறைக்கும் இடையில் கையெழுத்தாகியுள்ளது. தேசிய  உயர்வேக ரயில்வே கழகத்துக்கும் (National High Spead Railway Corporation Limited) ஜப்பான் ஆலோசனை நிறுவனத்துக்கு இடையிலும் கையெழுத்தானது. குறிப்பிட்ட காலத்தில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கும் முடிவு செய்யப்பட்டது.


மேற்கில் சரக்குப் போக்குவரத்திற்கான பிரத்யேக பாதை (DFC)


நாட்டின் மேற்கு பகுதியில் ஜவஹர்லால் நேரு துறைமுகத்திலிருந்து (Jawaharlal Nehru Port Terminal) தாத்ரி வரையில் 1,522 கி.மீ. தூரத்திற்கு ஜப்பான் பன்னாட்டு ஒத்துழைப்பு முகமை (JICA) நிதியுதவியில் பிரத்யேக சரக்குப் போக்குவரத்துப் பிரிவு அமைக்கப்படுகிறது.

நடப்பு நிலை: இத்திட்டத்தில் 48 சதவீதப் பணிகளை பிரத்யேக மேற்கு சரக்குப் போக்குவரத்துப் பிரிவு (DFC) வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. 99 சதவீதம் நிலம் கையகப்படுத்துவதும் முடிந்துவிட்டது. மொத்தம் ரூ. 33,130 கோடிக்கான (52,300 கோடி யென்) பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேசிய தலைநகர் மண்டலம்  (NCR) – மும்பை ஆகிய பகுதிகளுக்கு இடையில் வடமேற்கு ரயில்வே ஜெய்ப்பூர் கோட்டத்தில் அட்லி – ஃபுலேரா பிரிவில் 190 கி.மீ. தூரத்திற்கு  சோதனை ஓட்டத்தை இந்திய ரயில்வே கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நடத்தியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.


எதிர்கால ஒத்துழைப்பு


(i) இந்தியாவில் உற்பத்தி செய் (Make in India) : மகாராஷ்டிரம் - அகமதாபாத் உயர் வேக ரயில்வே திட்டத்தில் (MAHSR) ‘இந்தியாவில் உற்பத்தி செய்’ (Make in India) கோட்பாட்டைச் செயல்படுத்தும் வகையில், தொழில்கொள்கை, தொழில் மேம்பாட்டுத் துறை (DIPP), ஜப்பான் தூதரகம், தேசிய உயர்வேக ரயில்வே கழகம் (NHSRCL), ஜப்பான் நாட்டின் நிலம், கட்டுமானம், போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைச்சகம், தொழில் வர்த்தக அமைச்சகம் (MLIT), பொருளாதார தொழில் வர்த்தக அமைச்சகம் (METI) ஆகியவை கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டது. அதில் கட்டுமானப் பணிகள், தண்டவாளப் பணிகள், மின்சாரப் பணிகள், ரயில்பெட்டிகள் இருப்பு ஆகியவை தொடர்பான பரிந்துரைகள் ஏற்கப்பட்டன. மொத்தம் 24 ரயில் தொகுப்புகள் உற்பத்தி செய்யப்படும். அவற்றில் ‘இந்தியாவில் உற்பத்தி செய்’ (Make in India) திட்டத்தின்கீழ், ஆறு ரயில் தொகுப்புகள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்படும்.

(ii) பயிற்சி: ஜப்பான் அலுவல் மேம்பாட்டு (ODA) நிதியுதவியில் ஜப்பான் பன்னாட்டு ஒத்துழைப்பு முகமை (JICA) வாயிலாக  வதோதராவில் உள்ள தேசிய இந்திய ரயில்வே அகாதமி வளாகத்தில் (National Academy of Indian Railways) உயர்வேக ரயில் பயிற்சி நிறுவனம் (High-Speed Rail Training Institute) அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான மூன்று ஒப்பந்தங்களில் இரு ஒப்பந்தப் பணிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. கடைசி ஒப்பந்தம் கடந்த 2018, ஜூலையில் வரவழைக்கப்பட்டது. டிசம்பரில் இறுதியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சி மையம் அமைக்கும் பணி தொடங்கி, 2020ம் ஆண்டு நிறைவடைந்து திறக்கப்படும். முன்னதாக இந்த அதி உயர் ரயில்வே போக்குவரத்துத் திட்டத்தில் பணியாற்றும் ரயில்வே துறையின் 480 பணியாளர்களுக்கும் உயர்வேக ரயில் கழகத்தின் 120 அதிகாரிகளுக்கும் உயர்வேக ரயில் திட்டப்  பணிகளில் உரிய பயிற்சி அளிக்கப்படும். கூட்டு ஆலோசனைக் குழுவின் 7வது கூட்டத்தில் இது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து, உயர்வேக ரயில்வே போக்குவரத்து குறித்து இந்திய ரயில்வேயின் 287 இளம் அதிகாரிகள் ஜப்பானில் 2017-18ம் ஆண்டு பயிற்சி பெற்றுள்ளனர். அத்துடன், ஜப்பான் பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் படிப்புகளில் 20 இடங்களை ஒதுக்கவும் ஜப்பான் அரசு முன் வந்துள்ளது. தற்போது 17 அலுவலர்கள் பயின்று வருகிறார்கள். 2019ம் ஆண்டும் 20 பேருக்கு இடமளிக்க ஜப்பான் முன்வந்துள்ளது.


(iii) கட்டுமானம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு: ரயில்வே பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்திய அரசு ஜப்பானுடன் சிறந்த வகையில் ஒத்துழைத்து வருகிறது. ரயில்வே பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆராய்வதற்காக ஜப்பான் பன்னாட்டு ஒத்துழைப்பு முகமையின் (JICA) தொழில்நுட்ப ஒத்துழைப்பில் ஜப்பானைச் சேர்ந்த பாதுகாப்பு வல்லுநர்கள் கொண்ட ஒரு குழு இந்திய ரயில்வே துறைக்கு வந்தது.

ரயில்வே பாதை நெட்வொர்க்கின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே மற்றும் இந்திய பிரத்யேக சரக்குப் போக்குவரத்து கழகம் (Dedicated Freight Corridor Corporation of India Limited) ஆகியவற்றின் திறனை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்ப ஒத்துழைப்பின் கீழ் “ரயில்வே பாதுகாப்பில் திறன் மேம்பாட்டுக்கான திட்டம்” செயல்படுத்தப்படும்.

 

 ‘இந்தியாவில் உற்பத்தி செய்’ இயக்கத்தில் இந்திய-ஜப்பானிய ஒத்துழைப்பு

2017-ம் ஆண்டு செப்டெம்பரில் ஜப்பானின் பொருளாதார, வர்த்தக, தொழில் அமைச்சகத்திற்கும் இந்தியாவின் தொழில் கொள்கை மற்றும் பரப்புதலுக்கான துறைக்கும் இடையே ஒப்புக் கொள்ளப்பட்டிருந்த “ஜப்பான் – இந்தியா முதலீட்டை வளர்த்தெடுப்பதற்கான வழிமுறை”யின் அடிப்படையில் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஜப்பானின் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் வர்த்தக உதவி மையம் திறக்கப்பட்டதோடு  கூடவே முதலீட்டை வென்றெடுப்பதற்கான பல்வேறு கருத்தரங்குகள் ஜப்பானிலும் இந்தியாவிலும் நடத்தப்பட்டன.

2018 அக்டோபர் 29 அன்று சுமார் 60 ஜப்பானிய நிறுவனங்கள் முன்வைத்திருந்த தனியார் துறை முதலீட்டுக்கான திட்டங்கள் பற்றி பிரதமர் மோடி அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இன்வெஸ்ட் இந்தியா அமைப்பும்  ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பும் மேற்கொள்ளும். ‘இந்தியாவில் உற்பத்தி செய்’ என்ற இயக்கத்திற்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் போக்குவரத்து வாகனங்கள், எஃகு, மின்னியல், இணைய வழிதொடர்பான பொருட்கள், செயற்கை நுண்ணறிவியல், வேதியியல், உணவு பதனிடுதல் போன்ற துறைகளும் இந்தத் திட்டங்களில் அடங்கும். முன்வைக்கப்பட்டுள்ள மொத்த முதலீடு என்பது சுமார் 280 பில்லியன் ஜப்பானிய யென்கள் ஆகும். இதன் மூலம் இந்தியாவில் சுமார் 29,000 கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

ஜப்பானிய தொழில் நகரங்களைப் பொறுத்தவரையில் இவற்றை வளர்த்தெடுக்க மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகள், முக்கிய சாதனைகள் ஆகியவை குறித்த முன்னேற்ற அறிக்கையை  ஜப்பானின் வெளிநாட்டு வர்த்தக அமைப்பும் இந்தியாவின் தொழில் கொள்கை மற்றும் பரப்புதலுக்கான துறையும்  தங்களுக்குள் பரிமாறிக் கொண்டன. கட்டமைப்பு வளர்ச்சி, பரப்புதலுக்கான நடவடிக்கைகள், நிதிசார் ஊக்கத்தொகைகள், வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக்குவதை மேம்படுத்துவது, மனித வள மேம்பாடு ஆகியவையும் இவற்றில் அடங்குமெனினும் இவற்றோடு இந்த அறிக்கை முடிந்துவிடவில்லை.

புதியதொரு முன்முயற்சியாக, ஜப்பானின் வெளிநாட்டு வர்த்தக அமைப்பும் இந்தியாவின் தொழில் கொள்கை மற்றும் பரப்புதலுக்கான துறையும் இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளில் நிலவும் நிர்வாக நடைமுறைகளை செழுமைப்படுத்த ‘ஒற்றைச் சாளரத்திற்கான முன்னேறிய முன்மாதிரி’யை வளர்த்தெடுப்பதில் ஒத்துழைப்பது என முடிவு செய்துள்ளன. இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் நிலவுகின்ற மிகச் சிறந்த செயல்முறைகள், அதன் திறன் வளர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இது அமையும். இதன் மூலம் இந்தியாவில் வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக்குவது என்ற செயல்முறையை வளர்த்தெடுப்பதற்கான இந்தியாவின் முயற்சியை தீவிரப்படுத்த இயலும்.

டெல்லி-மும்பை தொழில் பாதையின் ஒரு திட்டமான “போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்த புள்ளிவிவர சேமிப்பு திட்டம்” சம்பந்தப்பட்ட துறைமுகம்/உள்நாட்டு மையங்களில் ஒலிஅலைவரிசை மூலம் அடையாளம் காணும் ஏற்பாடுகள் (RFID) மூலம் சர்வதேச கடல்வழி சரக்குப் போக்குவரத்தினை இனம் கண்டு போக்குவரத்திற்கான ஏற்பாடுகள் / சப்ளை வசதி ஆகியவற்றை சிறப்பாகச் செய்ய உதவியுள்ளது. இது வர்த்தகச் சூழலை மேம்படுத்த மேலும் உதவியுள்ளது.


திறன் மேம்பாட்டில் இந்திய- ஜப்பானிய ஒத்துழைப்பு

10 ஆண்டு காலப்பகுதியில் 30,000 பேருக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் இந்தியாவில் உற்பத்தியை வளர்த்தெடுப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த 2016-ம் ஆண்டில் உற்பத்திக்கான திறன் பரிமாற்றத்தை வளர்த்தெடுப்பதற்கான திட்டம் குறித்த ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம் ஒன்றில் இந்தியாவின் திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவுக்கான அமைச்சகமும், ஜப்பானின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழிலுக்கான அமைச்சகமும் கையெழுத்திட்டன. இது அரசின் முன்முயற்சிகளான ‘திறன் பெற்ற இந்தியா’, ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ ஆகியவற்றுக்குப் பங்களிப்பு செய்தது. இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் உற்பத்திக்கான ஜப்பான் இந்தியா நிறுவனம் மற்றும் ஜப்பானிய வகைப்பட்ட படிப்புகள் ஆகியவற்றை நிறுவியதைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள ஜப்பானிய நிறுவனங்கள் திறன் மேம்பாட்டுப் பணிகளில் பங்கேற்று வருகின்றன.

ஜப்பானிய வகைப்பட்ட உற்பத்திச் செயல்முறைகளிலும் கைசென், ஃபைவ் எஸ் போன்ற முக்கிய செயல்பாட்டு முறைகளிலும் எதிர்கால செயல்தளத் தலைவர்களுக்கு பயிற்சியளிக்க உற்பத்திக்கான ஜப்பான் இந்தியா நிறுவனங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. 2017-ல் இத்தகைய உற்பத்திக்கான ஜப்பான் இந்தியா நிறுவனங்களை நிறுவுவதில் சுஸுகி (குஜராத்), டைகின் (ராஜஸ்தான்), யமஹா (தமிழ்நாடு), டொயோட்டா மற்றும் ஹிடாச்சி (கர்நாடகா) ஆகிய ஐந்து ஜப்பானிய நிறுவனங்கள் முன்கையெடுத்துள்ளன. 2018-ல் அஹ்ரெஸ்ட்டி ஹரியானா  மாநிலத்தில் உள்ள பவாலிலும், டொயோட்டா ட்ஸுஷோ குஜராத் மாநிலத்தில் உள்ள மண்டலிலும், டெருமோ கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்திலும் உற்பத்திக்கான ஜப்பான் இந்தியா நிறுவனங்களை நிறுவியுள்ளன.

உற்பத்தித் துறையில் நடுநிலை மேலாண்மையில் ஈடுபடவிருக்கும் பொறியாளர்களுக்கு பயிற்சியளிக்கவென தேர்ந்தெடுக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஜப்பானிய வகைப்பட்ட படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மெய்டென்ஷா நிறுவனம் மின்சக்தி பரிமாற்றம் மற்றும் உற்பத்திப் பிரிவில் தங்களது முதல் ஜப்பானிய வகைப்பட்ட படிப்பை 2017-ல் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மிட்சுபிஷி எலெக்ட்ரிக் நிறுவனம் 2018-ல் இந்தியாவின் பல்வேறு பொறியியல் கல்லூரிகளிலும் தானியங்கி தொழிற்சாலைக்கான பாடப்பிரிவை தொடங்கியுள்ளது.

2017 அக்டோபரில் இந்தியாவின் எம் எஸ் டி ஈ அமைப்பு ஜப்பானின் சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நல அமைச்சகம், நீதிக்கான அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றுடன் தொழில்நுட்பத்திற்கான உள்ளுறை பயிற்சி திட்டம் ஒன்றுக்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. தற்போது திருத்தப்பட்ட உள்ளுறை பயிற்சி சட்டத்தின் கீழ் தொழில்நுட்பத்திற்கான உள்ளுறை பயிற்சி திட்டத்தை  பொருத்தமான வகையில் அமலாக்குவதற்கு இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பு இதன் மூலம் ஏற்பட்டுள்ளது. முதல் சுற்றில் இந்தப் பயிற்சிக்கான நபர்களை அனுப்பி வைக்க தொழில்நுட்பத்திற்கான உள்ளுறை பயிற்சி திட்டத்தின் மீதான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் பயிற்சியாளர்களை ஏற்றுக் கொள்ள ஜப்பானின் தொழில்நுட்ப உள்ளுறை பயிற்சிக்கான அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட  23 அமைப்புகளின் தகுதிப் பட்டியலை இந்தியா 2018 மார்ச் மாதம் இறுதிப்படுத்தியது. இந்த தொழில்நுட்ப உள்ளுறை பயிற்சித் திட்டத்தின் கீழ் ஜப்பானிய நிறுவனம் ஒன்றில் வேலையின் மூலம் பயிற்சி பெற இந்திய தொழில் மகாசம்மேளனத்தினால் (பயிற்சியாளர்களை அனுப்பி வைக்க தகுதி பெற்ற அமைப்பு) பயிற்சி அளிக்கப்பட்ட 15 இந்திய பயிற்சியாளர்கள் முதல் குழுவாக 2018 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டனர். இதுவரையில் தொழில்நுட்ப உள்ளுறை பயிற்சித் திட்டத்தின் கீழ் இந்தியாவிலிருந்து மொத்தம் 17  தொழில்நுட்ப உள்ளுறை பயிற்சியாளர்கள் ஜப்பான் சென்று சேர்ந்துள்ளனர்.

தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஜிட்கோ ஆகியவற்றுடன் இணைந்து எம் எஸ் டி ஈ அமைப்பு தொழில்நுட்ப உள்ளுறை பயிற்சித் திட்டம் குறித்த பயிற்சிப் பட்டறை 2018 பிப்ரவரியில் புதுடெல்லியிலும், தொழில்நுட்ப உள்ளுறை பயிற்சித் திட்டம் குறித்த இந்திய கருத்தரங்கு ஒன்று 2018 செப்டெம்பரில் ஜப்பானின் நகோயாவிலும் நடத்தியது.  ஜப்பானின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் திறன் பெற்ற உள்ளுறை பயிற்சியாளர்களை வழங்குவதற்கான இந்தியாவின் திறனை வெளிப்படுத்தவும், இந்தியாவில் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இது குறித்த புரிதலை ஏற்படுத்தி, தொழில்நுட்ப உள்ளுறை பயிற்சித் திட்டத்தின்  வாய்ப்புகளை அவர்களுக்கு அறிவிக்கவும் இந்த நிகழ்வுகள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

எதிர்கால ஒத்துழைப்பு

(i) உற்பத்திக்கான ஜப்பான் இந்தியா நிறுவனம் மற்றும் ஜப்பானிய வகைப்பட்ட கல்வி ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் திறன் மேம்பாட்டிற்கான தங்களது முயற்சிகளை ஜப்பானும் இந்தியாவும் தொடர்ந்து மேற்கொள்ளும். இதன் மூலம் ’திறன் பெற்ற இந்தியா’, ‘இந்தியாவில் உற்பத்தி செய்’ போன்ற திட்டங்களுக்கு இவை மேலும் பங்களிக்கும்.
 

(ii) ஆசிய சுகாதாரம் மற்றும் உடல்நலத்திற்கான முன்முயற்சியின் கீழ் இரு நாடுகளுக்கு இடையே ஆன ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த உதவி செய்யும் வகையில் பயிற்சிக்காக வடகிழக்கு இந்தியாவிலிருந்து ஜப்பானுக்குச் செல்லும் நலப்பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கும் தொழில்நுட்ப உள்ளுறை பயிற்சித் திட்டத்தின் கீழ் ஜப்பானிய மொழிப் பயிற்சி உள்ளிட்ட திறன் பயிற்சியை ஜப்பானும் இந்தியாவும் வளர்த்தெடுக்கும்.

கணினி வழி பங்காண்மையில் இந்திய- ஜப்பானிய ஒத்துழைப்பு

‘வசதியான வாழ்வை’ வளர்த்தெடுப்பதற்கான இந்தியாவின்  முன்னோடி திட்டங்களான  ‘கணினி மயமாக்கப்பட்ட இந்தியா’, ‘ஸ்மார்ட் நகரங்கள்’, ‘இந்தியாவில் புதிய தொழில்களைத் தொடங்குதல்’ போன்றவற்றுக்கும் ஜப்பானின் ‘சொசைட்டி 5.0’ என்ற திட்டத்திற்கும் ஒருங்கிணைப்பையும் பரஸ்பர ஒத்துழைப்பையும் வளர்க்கவும் இந்த தொழில்நுட்ப யுகத்தில் இணைந்து முன்னேறவும் இரு நாடுகளும் அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு மற்றும் இணைய வழி அன்றாட செயல்பாடுகள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பது என முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக ஜப்பானின் பொருளாதார, வர்த்தக, தொழில் அமைச்சகமும் இந்தியாவின் மின்னியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் 2018-ம் ஆண்டு வரை கூட்டுச் செயல்பாட்டுக் குழுவின் கூட்டங்களை 6 சுற்றுகள் நடத்தியுள்ளன. 2018-ல் நடைபெற்ற கூட்டுச் செயல்பாட்டுக் குழுவின் ஐந்தாவது கூட்டத்தில் இந்தியாவின் தொலைத்தொடர்பு அமைச்சகமும் ஜப்பானின் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகமும் ஒத்துழைப்பிற்கான கூட்டு குறிப்புகளில் கையெழுத்திட்டுள்ளன.

இந்தப் பின்னணியில் இந்தியாவின் மின்னியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் ஜப்பானின் பொருளாதாரம், வர்த்தகம், தொழில் அமைச்சகமும் கையெழுத்திட்ட ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்தை முழுமையானதொரு ‘இந்திய-ஜப்பானிய டிஜிட்டல் கூட்டணி’ என இரு நாடுகளின் பிரதமர்களும் வரவேற்றனர். தற்போதுள்ள துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது மட்டுமின்றி தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களில் புதிய முன்முயற்சிகளுக்கன வாய்ப்புகளைக் கண்டறியவும், ‘டிஜிட்டல் தொழில்நுட்பங்கள்’ குறித்து சிறப்பான அழுத்தம் தந்து, இந்தியா-ஜப்பான் ‘புதிய தொழில்முனைவிற்கான மைய’த்திற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் இந்த ஒப்பந்தம் வகை செய்யும்.

இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே புதிய தொழில்முனைவிற்கான மையம் : 2017-ல் நடைபெற்ற இந்திய- ஜப்பானிய வருடாந்திர உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் உள்ளது போன்ற இந்திய-ஜப்பானிய புதிய தொழில்முனைவிற்கான மையத்தை நிறுவுவது என்ற இரு பிரதமர்களின் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வகையில் இந்த ஆண்டு மே மாதம் ஜப்பான் நாட்டின் பொருளாதார, வர்த்தக, தொழில் அமைச்சர் செகோ இந்தியாவிற்கு வருகை தந்தபோது  ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின்(ஜெட்ரோ) சார்பில் பெங்களூரில் புதிய தொழில்முனைவிற்கான மையம் ஒன்று நிறுவப்பட்டது. ஜப்பானிய சந்தைக்கான இந்தியாவின் புதிய தொழில்களை அடையாளம் காண்பது; ஜப்பானிய முதலீட்டாளர்களை கண்டறிவது போன்ற விஷயங்களில் சம்பந்தப்பட்ட புதிய தொழில்களுக்கும் நிறுவனங்களுக்கிடையே  மேலும் அதிகமான ஒத்துழைப்புக்கு உதவுவதாக இந்த மையம் அமையும். முதலீட்டுக்கான இந்திய அமைப்பினால் நிறுவப்பட்டுள்ள ஜப்பான் – இந்திய புதிய தொழில்முனைவுக்கான மையத்திற்கான இணையதள மேடையில் இவ்வகையிலேயே செயல்படும்.

திறமைக்கான பாராட்டு: இரு நாட்டுத் தொழில்களிலும் போட்டித்திறனையும் அனுபவத்தையும் ஒன்றுதிரட்ட இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே திறமைகளை பரிமாறிக் கொள்வது மிகவும் அவசியமாகும். இதை நிறைவேற்றும் வகையில் பயிற்சிக்கான வாய்ப்புகளுக்கு ஏற்பாடு செய்வது, உள்ளுறை பயிற்சித் திட்டங்கள், வேலைவாய்ப்புகளுக்கான விழாக்கள் (ஜப்பான் வேலைவாய்ப்பு விழா), (ஜப்பானிய க்ரீன் கார்ட், உயர்திறன் பெற்ற இந்திய நிபுணர்களுக்கான விசா ஏற்பாடு போன்ற) அதிகத் திறன் வாய்ந்த இந்திய தொழில்நுட்ப நிபுணர்களுக்கான புதிய தொழில்முனைவுக்கான திட்டத்தை அறிமுகம் செய்வது என ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஏற்பாடுகளை விரிவுபடுத்தவும் முன்முயற்சி எடுக்கவும் இந்திய-ஜப்பான் வளர்ச்சித் திட்டம் திட்டமிட்டுள்ளது.

ஆராய்ச்சி & வளர்ச்சித் துறையில் ஒத்துழைப்பு: இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு குறித்த ஆய்விற்கான தேசிய திட்டத்தை பரப்பி வரும் நிதி ஆயோக் அமைப்பிற்கும் ஜப்பானின் பொருளாதார, வர்த்தக, தொழில் அமைச்சகத்திற்கும் இடையே தொடர்புகளை வளர்த்தெடுக்கவும் ‘சொசைட்டி 5.0’இன் கீழ் உருவாகும் தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்தவும் செயற்கை நுண்ணறிவு மீதான தங்களின் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்தியாவும் ஜப்பானும் அறிக்கை வெளியிட்டுள்ளன. இந்த நோக்க அறிக்கையில் இந்தியாவின் நிதி ஆயோக் அமைப்பும் ஜப்பானின் பொருளாதார, வர்த்தக, தொழில் அமைச்சகமும் கையெழுத்திட்டுள்ளன. ஜப்பானின் முன்னேறிய தொழில்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையத்திற்கும் இந்தியாவின் ஹைதராபாத் ஐஐடிக்கும் இடையே நிறுவனரீதியான ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளுக்கு இது வழிவகுத்துள்ளது.

பாதுகாப்பு நோக்கிலான தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப துறைகளில் திட்டங்கள்: முன்னேறிய, பாதுகாப்பான தொழில்நுட்பத்தின் அவசியத்தை உணர்ந்த நிலையில் இந்தக் கூட்டணியின் கீழ் எதிர்கால வலைப்பின்னல்களுக்கான டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் தொலைத்தொடர்பு பாதுகாப்பிற்கான கட்டமைப்பு ஆகிய பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பு நல்க இந்தியாவும் ஜப்பானும் கருதியுள்ளன. இந்தியாவின் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனமும் ஜப்பானின் என் இ சி நிறுவனமும் சென்னை – அந்தமான் தீவுகளை இணைக்கும் வகையில் ஆழ்கடல் வழி ஒளியிழை இணைப்பை ஏற்படுத்துவதற்கான முன்முயற்சியை இந்த இருநாடுகளின் தலைவர்களும் வரவேற்றனர். அதன் கேந்திர முக்கியத்துவத்தைக் கருதி ஆழ்கடல் வழியான கேபிள் திட்டங்களை வளர்த்தெடுப்பதில் மேலும் ஒத்துழைப்பு நல்குவது என்றும் இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

மின்னியல் சூழல் ஏற்பாடுகள்: மின்னியல் முறை வடிவமைப்பு, இது தொடர்பான மென்பொருள் தொழில்நுட்பங்கள், தொலைதூர சந்தைக்கான மின்னியல் பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றில் இந்திய- ஜப்பானிய நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பு உள்ளிட்டு மின்னியல் உற்பத்தியில் இரு தரப்பினருக்கும் இடையே பங்குதாரர் ஏற்பாட்டையும் இந்தியாவும் ஜப்பானும் ஏற்படுத்திக் கொள்ளும்.

டிஜிட்டல் பெருநிறுவன பங்கேற்பு: பரஸ்பர நிகழ்வுகள், வர்த்தகக் குழுக்களை அனுப்பிவைப்பது போன்ற முன்முயற்சிகளின் மூலம் இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே தகவல் தொழில்நுட்பத் துறையில் பெருநிறுவன மற்றும் வர்த்தகத் தொடர்புகளை வளர்த்தெடுக்க இந்தியாவும் ஜப்பானும் திட்டமிடும். தொலைத் தொடர்புத் துறையில் ஒத்துழைப்பிற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவின் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பி எஸ் என் எல் மற்றும் ஜப்பானின் என் டி டி- ஏ டி ஆகியவை கையெழுத்திட்டன. வன்பொருள் துறையில் ஜப்பானின் வலிமையையும் மென்பொருள் துறையில் இந்தியாவின் வலிமையையும் பயன்படுத்திக் கொண்டு உலகச் சந்தைகளில் செயல்படும் வகையில் முதலாவது ‘தகவல் தொழில்நுட்ப இடைவழி’ ஒன்றை இந்தியாவின் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கான  தேசிய சங்கமும் ஹிரோஷிமா பிரதேச அரசும் உருவாக்கியுள்ளன.


விவசாயம், உணவு பதனிடுதல், உணவுப் பாதுகாப்பு, வன வளம், மீன் வளம் ஆகிய துறைகளில் இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே ஒத்துழைப்பு

அ. விவசாயம்

1. விவசாயம், வன வளம், மீன்வள அமைச்சகம் (ஜப்பான்) மற்றும் விவசாயம் விவசாயிகள் நலனுக்கான அமைச்சகம் (இந்தியா) ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூட்டுச் செயல்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது.

(i)  இந்த ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தமானது 2016-ம் ஆண்டு நவம்பர் 11 அன்று கையெழுத்தானது. (பிரதமர் திரு. மோடி அவர்களின் ஜப்பான் வருகையின்போது)

(ii) கூட்டுச் செயல்பாட்டுக் குழுவின் முதல் கூட்டம் 2017 நவம்பர் 6 அன்று நடைபெற்றது. (2017-ல் நடைபெற்ற உலகம் உணவு இந்தியா என்ற கண்காட்சிக்குப் பிறகு)

அ. ஒத்துழைப்பிற்காகக் கண்டறியப்பட்ட மூன்று துறைகள்:

அ) விவசாய உற்பத்தி

ஆ) உணவு பதனிடுதல்

இ) மீன்வளம்

(iii) விவசாயம் மற்றும் மீன்வளத்துறையில் இந்தியாவிற்குள் ஜப்பானின் முதலீட்டை வளர்த்தெடுப்பதற்கான திட்டம்

முதலாவது கூட்டு செயல்பாட்டுக் குழுவில் நடைபெற்ற விவாதங்களின் அடிப்படையில் விவசாயம் மற்றும் மீன்வளத் துறையில் இந்தியாவிற்குள் முதலீட்டை வளர்த்தெடுப்பதற்கான வழிகள் குறித்து ஜப்பானின் விவசாயம், வன வளம் மற்றும் மீன் வள அமைச்சகமும் இந்தியாவின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனுக்கான அமைச்சகமும் விவாதித்தன. இதன் அடிப்படையில் “விவசாயம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளில் இந்தியாவில் ஜப்பானின் முதலீட்டை வளர்த்தெடுப்பதற்கான திட்டம்” 2018 அக்டோபர் 29 அன்று இந்த இரு அமைச்சகங்களுக்கு இடையே கையெழுத்தானது.

(iv) இத்திட்டத்தின் கீழான முதல் முதலீட்டு நிகழ்வாக ஜப்பான் – இந்தியா உணவு வர்த்தக கவுன்சிலின் ஆதரவு பெற்ற ஐஎஸ்ஈ உணவு நிறுவனத்தின் மாபெரும் திட்டம் தெலுங்கானாவில் உருவாகி வருகிறது.

2. விவசாயத்தில் சிறப்பான செயல்பாட்டிற்கான இந்திய-ஜப்பான் மையம்

1. ஜப்பானிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதில் ஜப்பான் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது பற்றி இந்த இரு அமைச்சகங்களும் விவாதித்தன.

2. இந்த விவாதத்தில் விவசாயத்தில் சிறப்பான செயல்பாட்டிற்கான இந்திய-ஜப்பான் மையம் ஒன்றை நிறுவுவது என்றும் அந்த மையத்தில் ஜப்பானிய தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தி, இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்வது என்ற ஒரு ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது.

3. ஆய்வுக்கான ஒத்துழைப்பு


(i) விவசாய அறிவியல்களுக்கான ஜப்பான் சர்வதேச ஆராய்ச்சி மையம் (ஜிர்காஸ்) மற்றும் விவசாய ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் (ஐசிஏஆர்) ஆகியவற்றுக்கு இடையே கூட்டு ஆய்வுகளுக்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் 2018 பிப்ரவரி 9 அன்று கையெழுத்தானது.
(ii)  இதன் முதல் ஆலோசனை கூட்டம் 2018 ஜூன் 15 அன்று கர்னாலில் நடைபெற்றது. இதில் (அ) குறைந்த செலவில் தரைமட்ட கழிவுநீர் வசதி மற்றும் உப்பு பாதிப்பில் உள்ள வயல்களில் நீடித்த விவசாய உற்பத்திக்கான பாசன தொழில்நுட்பம் (ஆ) உப்புத் தன்மையை சமாளிக்கும் வகையிலான பயிர்வகையை பகுதியளவிலேயே வளர்த்தெடுப்பது ஆகிய விஷயங்களில் ஒத்துழைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆ. உணவு பதனிடுதல்



1. உலக உணவு இந்தியா 2017
2017இல் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் கூட்டாளி நாடாக ஜப்பான் பங்கேற்றது. ஜப்பானில் இருந்து வந்த தூதுக் குழுவிற்கு ஜப்பானின் விவசாயம், வனவளம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் திரு. தனியை தலைமை ஏற்றிருந்தார். இந்த நிகழ்வில் சுமார் 60 ஜப்பானிய நிறுவனங்கள் பங்கேற்றன.


2. ஜப்பானின் விவசாயம், வனவளம் மற்றும் மீன்வள அமைச்சகத்திற்கும் இந்தியாவின் உணவு பதனிடுதல் தொழில் அமைச்சகத்திற்கும் இடையில் ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம்


(i) ஜப்பான் – இந்தியா ஆகிய இரு நாடுகளின் தலைவர்களின் முன்னிலையில் 2018 அக்டோபர் 29 அன்று ஜப்பானின் விவசாயம், வனவளம் மற்றும் மீன்வள அமைச்சகத்திற்கும் இந்தியாவின் உணவு பதனிடுதல் தொழில் அமைச்சகத்திற்கும் இடையில் ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

3. இந்திய உணவு பதனிடுதல் தொழில் அமைச்சகத்திற்கும் ஜப்பானிய நிறுவனங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

(i) 2018 மார்ச் 13 அன்று இந்தியாவின் உணவு பதனிடுதல் தொழில் அமைச்சகத்திற்கும் (ஐஎஸ்ஈ ஃபுட் என்ற) ஒரு ஜப்பானிய தொழில் நிறுவனத்திற்கும் இடையே முதலாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

(ii) 2018 அக்டோபர் 29 அன்று இந்திய உணவு பதனிடுதல் தொழில் அமைச்சகத்திற்கும் (ககோமி மற்றும் நிஸ்ஸான் ஸ்டீல் ஆகிய) ஜப்பானிய தொழில் நிறுவனங்களுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.


4. இந்திய உணவுப் பொருள் நிறுவனங்களின்  சங்கங்கள் ஜப்பானில் இந்தியப் பொருட்களுக்கான சந்தை குறித்து ஆய்வு செய்தல்

(i) ஜப்பானின் விவசாயம், வன வளம் மற்றும் மீன்வள அமைச்சகம் உலகளாவிய உணவுக்கான மதிப்பு சங்கிலித் தொடரின் மேம்பாட்டை வளர்த்தெடுத்து வருகிறது. இதனை பரப்பும் வகையில் 2018 மார்ச் மாதம் உலகளாவிய உணவுக்கான மதிப்பு சங்கிலித் தொடருக்கான பொது-தனியார் கவுன்சிலின் இந்திய துணைக்குழு கூட்டத்தையும்  அது நடத்தியது. இந்தக் கவுன்சிலில் சுமார் 400 நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன.


(ii) 2018 மே மாதம் ஜப்பான் இந்தியா உணவு வர்த்தக கவுன்சில் தொடங்கப்பட்டது.

இ. உணவுப் பாதுகாப்பு


உணவுப்பாதுகாப்பு மற்றும் தரங்களுக்கான இந்திய ஆணையத்திற்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம்
 

உணவுப்பாதுகாப்பு மற்றும் தரங்களுக்கான இந்திய ஆணையத்திற்கும் ஜப்பானின் உணவுப் பாதுகாப்பு கமிஷன், நுகர்வோர் விவகார முகமை, சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நல அமைச்சகம் மற்றும் விவசாயம், வன வளம் மற்றும் மீன்வள அமைச்சகம் ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம் 2018 அக்டோபர் 29 அன்று கையெழுத்தானது.

ஈ) வன வளம்

 ஜப்பானின் விவசாயம், வன வளம் மற்றும் மீன்வள அமைச்சகத்திற்கும் இந்தியாவின் சுற்றுச்சூழல், வனவளம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திற்கும் இடையே உருவான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில்  கூட்டு செயல்பாட்டுக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.


(i) ஜப்பானின் விவசாயம், வன வளம் மற்றும் மீன்வள அமைச்சகத்திற்கும் இந்தியாவின் சுற்றுச்சூழல், வனவளம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திற்கும் இடையே 2015-ம் ஆண்டு டிசம்பர் 11 அன்று இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

ஒத்துழைப்பிற்காக அடையாளம் காணப்பட்ட ஏழு துறைகள்

அ) மனித வள மேம்பாடு மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கிடையே நிறுவனரீதியான பரிமாற்றம்

ஆ) நீடித்த வனப்பகுதி நிர்வாகம்

இ) வனப்பகுதியை பேணுதல் மற்றும் வனப்பகுதி பேரிடர் தடுப்பு ஆகியவற்றை மேம்படுத்தல்

ஈ) பல்லுயிர்களை பேணுதல்

உ) வன வளங்களை சிறப்பான வகையில் பயன்படுத்திக் கொள்ளுதல்.

ஊ) வனப்பகுதி, வனப் பொருட்கள், தொழில்நுட்பம் ஆகியவை குறித்த கொள்கைகளை மேம்படுத்தல்.

எ) வனப்பொருட்கள் துறையில் ஆய்வு மற்றும் வளர்ச்சி

 
(ii) 2018 ஜூலை 23-ல் நடைபெற்ற கூட்டு செயல்பாட்டுக் குழுவின் மூன்றாவது கூட்டத்தில் 2018 முதல் 2022 வரையிலான “இந்திய – ஜப்பான் வனம் மற்றும் வனப் பொருட்கள் ஆகியவற்றுக்கான ஒத்துழைப்புக்கான செயல்பாட்டு வழி” குறித்து ஒப்புக் கொள்ளப்பட்டது.

உ. மீன்வளம்


(1) இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன் மற்றும் மீன் சார் பொருட்களை உள்ளடக்கிய பொருட்களுக்கு மனிதர்களின் நுகர்வுக்குத் தகுதியானவை என சுகாதார சான்றிதழ் வழங்க 2018 மார்ச் மாதம் ஒப்புக் கொள்ளப்பட்டது.

(2) ஜப்பானில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இறாலுக்கான உணவு, மீனுக்கான உணவு ஆகிய பொருட்களை உள்ளடக்கி சான்றிதழ் வழங்க 2018 அக்டோபரில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

உ: ஜப்பானின் விவசாயம், வன வளம் மற்றும் மீன் வள அமைச்சகத்திற்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பும் தனியார் நிறுவனங்கள் சிலவற்றின் நடவடிக்கைகளும்
(1) ஆந்திரப் பிரதேச மாநிலம்

(அ) ஜப்பானின் விவசாயம், வனவளம், மீன வள அமைச்சகத்திற்கும் ஆந்திரப் பிரதேச அரசுக்கும் இடையே விவசாய மற்றும் உணவு சார்ந்த தொழில்கள் குறித்த ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம் 2016 ஜூலை 30 அன்று கையெழுத்தானது.

(ஆ) ஜப்பானின் விவசாயம், வனவளம், மீன வள அமைச்சகத்திற்கும் ஆந்திரப் பிரதேச அரசுக்கும் இடையே உயர்பெருந்திட்டம் ஒன்றை வடிவமைப்பதற்கான ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம் 2018 பிப்ரவரி 25 அன்று கையெழுத்தானது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் குளிர்பதன சங்கிலிக்கான உயர்பெருந்திட்டத்தை உருவாக்குவதற்கான் ஆய்வு 2018 ஜூலையில் இருந்து தொடங்கியது.

(2) மகாராஷ்ட்ர மாநிலம்

(அ) ஜப்பானின் விவசாயம், வனவளம், மீன வள அமைச்சகத்திற்கும் மகாராஷ்ட்ர மாநிலத்திற்கும் இடையே ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம் 2018 அக்டோபர் 29 அன்று கையெழுத்தானது.

(3) உத்திரப் பிரதேச மாநிலம்

(அ) ஜப்பானின் விவசாயம், வனவளம், மீன வள அமைச்சகத்திற்கும் உத்திரப் பிரதேச மாநிலத்திற்கும் இடையே ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம் 2018 அக்டோபர் 29 அன்று கையெழுத்தானது.

ஊ: சர்வதேச ஒத்துழைப்பிற்கான ஜப்பான் முகமை (ஜிகா)

(1) ஜிகாவிற்கும் நிதியமைச்சகத்திற்கும் இடையே “ஆந்திரப் பிரதேச பாசன மற்றும் வாழ்நிலை மேம்பாட்டு திட்டம்” (இரண்டாவது கட்டம்) பற்றிய ஒப்பந்தக் கடிதம் 2017 டிசம்பர் 13 அன்று கையெழுத்தானது.
(2)  “இமாச்சலப் பிரதேச மாநில வனச் சூழல் அமைப்புகளின் மேலாண்மை மற்றும் வாழ்நிலையை மேம்படுத்துவதற்கான திட்டம்”
ஜிகாவிற்கும் இந்திய தூதரகத்திற்கும் இடையே 2018 மார்ச் 29 அன்று ஒப்பந்தக் கடிதம் கையெழுத்தானது.

(3) “கூட்டுறவு அமைப்புகளின் மூலம் பால்பண்ணைத் துறையில் வாழ்நிலையை மேம்படுத்துவதற்கான திட்டம்” 2018 ஜூலையில் இதற்கான தயாரிப்பு ஆய்வுகளை ஜிகா தொடங்கியது.

 

இந்திய-ஜப்பான் பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு

2008-ம் ஆண்டில் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இந்தியா-ஜப்பான் கூட்டறிக்கை அறிவிக்கப்பட்ட்டதைத் தொடர்ந்து பங்கெடுக்கும் பாதுகாப்பு நோக்கிய கூட்டு முயற்சிகளை வளர்த்தெடுக்க கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவும் ஜப்பானும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளன. வருடாந்திர ராணுவ அமைச்சர்களின் பேச்சுவார்த்தைகள், ராணுவ கொள்கைகள் குறித்த பேச்சுவார்த்தைகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் பேச்சுவார்த்தைகள், ராணுவப் படைப்பிரிவுகளின் தலைவர்களின் பேச்சுவார்த்தைகள், கடலோரப் பாதுகாப்புப் படையினருக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள்  மற்றும் இரு நாடுகளின் முப்படைகள் மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படை ஆகியவற்றிற்கு இடையே பயிற்சி நடவடிக்கைகள் போன்ற நிறுவன ஏற்பாடுகள் மூலம் இருதரப்பு பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளுமே விரும்புகின்றன. இந்திய ராணுவம் மற்றும் ஜப்பானின் தரைவழி தற்காப்புப் படையினரின், பயங்கரவாதத்திற்கு எதிரான முதலாவது பயிற்சி மற்றும் ஜப்பானின் விமான தற்காப்புப் படையினர் பார்வையாளர்களாகப் பங்கேற்ற கோப் இந்தியா நிகழ்ச்சி உள்ளிட்ட மலபார் பயிற்சி, பாதைவழி பயிற்சிகள் மற்றும் இதர கூட்டு பயிற்சிகளுக்கு இரு நாடுகளுமே மிகுந்த முக்கியத்துவம் தருகின்றன. ஒத்த கருத்துள்ள நாடுகளுடன் ஒத்துழைப்பு அதிகரிப்பதையும் அவை வரவேற்றன.

கடற்பகுதி எல்லை வரம்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதில் மேம்பட்ட கருத்துப் பரிமாற்றங்களின் மூலம் இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே கடல்வழி பாதுகாப்பு குறித்த ஒத்துழைப்பும் இந்திய-பசிபிக் பிரதேசத்தில் பரஸ்பர ஏற்பாடுகளுக்கான உதவி ஆகியவை இப்பகுதியில் அமைதியும் நிலைத்தன்மையும் நீடிக்க உதவி புரிந்துள்ளன. 13வது உச்சி மாநாட்டின்போது இந்திய கடற்படைக்கும் ஜப்பானின் கடலோர தற்காப்புப் படைக்கும் இடையே மேலும் ஆழமான ஒத்துழைப்பிற்கான ஏற்பாட்டை அமலாக்குவது, இறக்குமதி மற்றும் பரஸ்பர பழுதுபார்க்கும் பணிகள் ஆகியவற்றுக்கான பேச்சுவார்த்தைகள் துவங்குவது  குறித்து கையெழுத்தானதை இரு நாடுகளின் பிரதமர்களும் வரவேற்றனர். பிராந்திய ரீதியான ஆழமான உறவை இந்த இரண்டு ஆவணங்களும் மேம்படுத்தும். ராணுவ தளவாடங்கள், தொழில்நுட்பம் ஆகியவை குறித்து இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே ஒத்துழைப்பு என்பது இருநாடுகளின் எதிர்கால இருதரப்பு ஒத்துழைப்பிற்கு தீவிரமான வாய்ப்புகளையும் ஆற்றலையும் கொண்டதாக  அமைகிறது.

*****

செயல்பாட்டு வழிமுறைகள்

 

இந்தியா-ஜப்பான் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது, 2008-ம் ஆண்டில் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட கூட்டு அறிவிக்கையிலிருந்து தொடங்கியது. பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்கள் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை 2014-ல் இறுதிசெய்யப்பட்டது.

பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பரிமாற்றம் செய்வதற்கான உடன்பாடு, வரையறுக்கப்பட்ட ராணுவ தகவல்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த உடன்பாடு ஆகியவையும் 2015-ல் இறுதிசெய்யப்பட்டது. இது இந்த நடவடிக்கைக்கு வலு சேர்த்துள்ளது.

இந்திய கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை இடையே ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதற்கான செயல்பாட்டு உடன்படிக்கை, அக்டோபர் 2018-ல் கையெழுத்தானது.

இது தகவல் பரிமாற்றம் மற்றும் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்தல், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான மற்ற கடல்சார் ஒத்துழைப்புகள், கப்பல் போக்குவரத்து தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட கடல்சார் விவகாரங்கள் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றுக்கான செயல்பாட்டு வரைமுறைகளை உருவாக்கும்.

தற்போதைய நிலவரம்

உயர்மட்ட அளவில் வருடாந்திர பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம், 2006-ம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கியது. இதன் கடைசி கூட்டம், இந்தியாவில், ஆகஸ்ட் 2018-ல் நடைபெற்றது. பாதுகாப்பு கொள்கைகள் குறித்த பேச்சுவார்த்தை, டோக்கியோவில் 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கியது; இதன் 6-வது கூட்டம் மற்றும் 5-வது கட்ட 2+2 பேச்சுவார்த்தை ஆகியவை புதுதில்லியில் 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்றன.

முப்படைகளில் ஒவ்வொரு படையைச் சேர்ந்த இருநாட்டு  அதிகாரிகளுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்திய கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை இடையேயான 7-வது கட்ட பேச்சுவார்த்தை, புதுதில்லியில் ஜனவரி 2018-ல் நடைபெற்றது. இந்திய விமானப்படை மற்றும் ஜப்பான் விமான சுயபாதுகாப்புப் படைகளுக்கு இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தை புதுதில்லியில் ஜூன் 2018-ல் நடைபெற்றது. இந்திய ராணுவம் மற்றும் ஜப்பானின் தரை சுயபாதுகாப்புப் படையின் அதிகாரிகள் மட்டத்திலான 5-வது கட்ட பேச்சுவார்த்தை, 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்திய கடலோர காவல் படை மற்றும் ஜப்பான் கடலோர காவல் படைகளுக்கு இடையேயான 17-வது உயர்மட்டக் கூட்டம், புதுதில்லியில் ஜனவரி 2018-ல் நடைபெற்றது.

கூட்டுப் பயிற்சிகள்:

இந்திய கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் சுயபாதுகாப்பு படைகளுக்கு இடையே அடிக்கடி கூட்டுப் பயிற்சிகள் நடைபெறுகின்றன. இதனுடன் சேர்த்து முத்தரப்பு மலபார் பயிற்சிகள், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்பாக உள்ளது. 2018-ம் ஆண்டுக்கான மலபார் பயிற்சிகள், குவாம் கடல் பகுதியில் ஜூன் 2018-ல் நடைபெற்றது. இதில், அனைத்து தரப்பிலிருந்தும் குறிப்பிட்ட அளவில் வீரர்கள் பங்கேற்றனர். 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, இருதரப்பு கடல்சார் பயிற்சியான ஜிமெக்ஸ்-18, விசாகப்பட்டினம் அருகே கடல் பகுதியில் அக்டோபர் 2018-ல் நடைபெற்றது. இதில், ஹெலிகாப்டரை தாக்கி அழிக்கும் ஜப்பானின் காகா-வும் பங்கேற்றது.

இந்திய கடற்படை கப்பல்கள் ஜப்பான் துறைமுகங்களுக்கும், ஜப்பான் கடல்சார் சுயபாதுகாப்பு படையின் கப்பல்கள் இந்திய  துறைமுகங்களுக்கும் வரும்போது, வழக்கமாக இருதரப்பு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் பயிற்சிகள், செப்டம்பர் 2017-ல் மேற்கு இந்திய கடல் பகுதியிலும், அக்டோபர் 2017-ல் ஜப்பானின் மேற்கு கியூசூ கடல் பகுதியிலும் நடத்தப்பட்டன. இதேபோல, நவம்பர் 2017-ல் ஜப்பான் கடல் பகுதி, ஜனவரி 2018-ல் மும்பை கடல் பகுதி, மே 2018-ல் விசாகப்பட்டினம் கடல் பகுதி, செப்டம்பர் 2018-ல் ஏடன் வளைகுடா பகுதி ஆகியவற்றில் நடத்தப்பட்டன. வான்வழியாக நீர்மூழ்கிக் கப்பலை அழிக்கும் முதலாவது பயிற்சி, இந்திய கடற்படையின் பி-8ஐ விமானத்துக்கும், ஜப்பான் கடல்சார் சுயபாதுகாப்புப் படையின் கடல் பகுதி ரோந்து விமானமான பி-3சி-க்கும் இடையே கோவா கடல் பகுதியில் அக்டோபர் 2017-ல் நடைபெற்றது. ஏடன் வளைகுடா பகுதியில் கடற்கொள்ளையர்களை  ஒழிக்கும் நடவடிக்கைகளை முடித்தபிறகு, பி-3சி விமானம் திரும்பி செல்லும் வழியில், இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வான்வழியாக நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கும் பயிற்சி, ஜப்பான் கடல்சார் சுய பாதுகாப்புப் படையின் பி-1 மற்றும் இந்திய கடற்படையின் பி-8ஐ இடையே, கோவா கடல் பகுதியில் மே 2018-ல் நடைபெற்றது. இந்திய ராணுவம் மற்றும் ஜப்பான் தரைப்படை இடையேயான முதலாவது தீவிரவாத ஒழிப்பு பயிற்சியை, இந்தியாவும், ஜப்பானும் நவம்பர் 2018-ல் நடத்த உள்ளன. ஜப்பான், அமெரிக்கா இடையே நவம்பர் 2017-ல் நடைபெற்ற பொதுவான ஒருங்கிணைந்த அவசரகால பயிற்சி-யின்போது (TREX-17), பார்வையாளராக இந்திய ராணுவம் கலந்துகொண்டது. ஜூலை 2018-ல் நடைபெற்ற கண்ணிவெடி மற்றும் வெடிபொருட்கள் ஒழிப்பு பயிற்சியின்போது, இந்திய கடற்படையும் கலந்துகொண்டது. இரு நாடுகளுக்கும் இடையே முப்படைகளிலும் மனிதநேய உதவி மற்றும் பேரிடர் மீட்பு, அமைதிகாப்பு, ஹெலிகாப்டர் பணியாளர்கள் மற்றும் வானிலை அறிவியல் ஆகியவற்றில் வல்லுநர் பரிமாற்றங்களும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இந்திய கடலோர காவல் படை மற்றும் ஜப்பான் கடலோர காவல் படை இடையேயான கூட்டுப் பயிற்சி, சென்னை அருகே உள்ள கடல் பகுதியில் ஜனவரி 2018-ல் நடைபெற்றது.


பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு

சென்னையில் ஏப்ரல் 2018-ல் நடைபெற்ற பாதுகாப்பு தளவாடங்கள் கண்காட்சி-18-ல் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த கொள்முதல், தொழில்நுட்பம் மற்றும் தளவாட முகமை (Acquisition, Technology and Logistics Agency - ATLA) கலந்துகொண்டது.

 

பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக 2014-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட கூட்டுப் பணிக் குழு, 4 முறை கூடியுள்ளது. 4-வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டம், புதுதில்லியில் ஜூலை 2018-ல் நடைபெற்றது. நிலப்பகுதியில் ஆள்இல்லாமல் தானாகவே இயங்கும் வாகனங்கள்/ரோபோ-க்களுக்கு, இருக்கும் இடத்தை கண்டறிவது மற்றும் பாதையை வழிகாட்டுவது ஆகிய 2 செயல்களுக்கும் ஒரே நேரத்தில் உதவுவதை அடிப்படையாகக் கொண்ட வழிமுறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இதில், செயற்கைக்கோள் வழிகாட்டி முறை தொழில்நுட்பம் குறித்த கூட்டு ஆராய்ச்சிக்கான திட்ட ஏற்பாடுகளில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும், ஜப்பானின் கொள்முதல், தொழில்நுட்பம் மற்றும் தளவாட முகமையும் ஜூலை 2018-ல் கையெழுத்திட்டுள்ளன.

டோக்கியோ-வில் செப்டம்பர் 2017-ல் நடைபெற்ற பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டுப் பணிக் குழுவின் மூன்றாவது கூட்டத்தின்போது, இந்தியா-ஜப்பான் இடையே பாதுகாப்பு தொழில் துறை ஆலோசனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதேபோல, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டுப் பணிக் குழுவின் நான்காவது கூட்டத்தின்போதும் ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, பாதுகாப்பு பொருட்கள் துறை மற்றும்  ஜப்பானின் கொள்முதல், தொழில்நுட்பம், தளவாட முகமை  ஆகியவற்றின் ஆதரவுடன், இந்தியாவுக்கு வந்த ஜப்பான் பாதுகாப்பு நிறுவனங்களுக்கும், இந்திய பாதுகாப்புத் துறை தொழில் நிறுவனங்களுக்கும் இடையே பெங்களூரு மற்றும் மும்பையில் வர்த்தகப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.

பேரிடர் அபாயங்களை குறைப்பதில் இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பு

உலக அளவில் பேரிடர் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ள நாடுகளாக இந்தியாவும், ஜப்பானும் திகழ்கின்றன. ஜனவரி 2018-ல் உருவாக்கப்பட்ட ஷெண்டாய் வழிமுறைகளுக்குப் பிறகு, பேரிடர் ஆபத்துக்களை குறைப்பதற்கான துறையில் இந்தியாவும், ஜப்பானும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. புதுதில்லியில் நவம்பர் 2016-ல் நடைபெற்ற பேரிடர் ஆபத்துக்களை குறைப்பது குறித்த ஆசிய அமைச்சர்கள் மட்டத்திலான கருத்தரங்கைத் தொடர்ந்து, சர்வதேச பணிமனையை இந்தியா நடத்தியது. இதில், மற்ற 20 நாடுகளுடன் ஜப்பானும் கலந்துகொண்டது. அப்போது பேசிய மாண்புமிகு இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி, பேரிடரை தாங்கும் வகையிலான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான கூட்டணியை அமைக்க மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்தியா-ஜப்பான் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் அபே, இந்தியாவுக்கு செப்டம்பர் 2017-ல் வந்தபோது, பேரிடர் ஆபத்துக்களை எதிர்கொள்வதற்காக இந்தியா-ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பில் முக்கிய மைல்கல் எட்டப்பட்டது. பேரிடர் ஆபத்தை குறைப்பது, தடுப்பது, எதிர்கொள்வது, மீட்பு மற்றும் மறுகட்டமைப்பில் ஒத்துழைப்புக்காக ஜப்பான் அரசின் அமைச்சரவை அலுவலகத்துக்கும், இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கும் இடையே இருதரப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை இறுதிசெய்யப்பட்டது. இந்த உடன்படிக்கையை செயல்படுத்துவதில் இந்திய தரப்பில் தலைமை அமைப்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்  நியமிக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையின் கீழ், பேரிடர் ஆபத்தை எதிர்கொள்வது குறித்த முதலாவது இந்திய-ஜப்பான் பணிமனை, புதுதில்லியில் மார்ச் 2018-ல் நடைபெற்றது. இதில், தயார்படுத்திக் கொள்தல், முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பு, தனியார் துறைகளின் நிலைப்பாடு போன்ற தலைப்புகளில் தலைசிறந்த 6 அமர்வுகள் நடைபெற்றன. இந்தப் பணிமனையில், “பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பான முறையில் கட்டமைப்பை ஏற்படுத்துதல்” ("Build Back Better”) என்ற ஜப்பானின் நிலைப்பாடு பகிர்ந்துகொள்ளப்பட்டது. மேலும், முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் வகையிலான ஜப்பானின் தொழில்நுட்பம் வெளிப்படுத்தப்பட்டது. பேரிடரை எதிர்கொள்வதில் தங்களது சொந்த அனுபவங்களை ஜப்பான் பகிர்ந்துகொண்டது. இந்த பணிமனையின் அடிப்படையில், இந்தத் துறையில் இந்தியா-ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல, நிலநடுக்கம் ஏற்படுவது குறித்து முன்கூட்டியே கண்டறிவது மற்றும் எச்சரிக்கை விடுக்கும் அமைப்பை ஏற்படுத்துவது, பேரிடர் அபாயம் குறித்து மதிப்பீடு செய்வது, குறிப்பாக நிலநடுக்க விவகாரத்தில் பேரிடர் அபாயத்தை மதிப்பீடு செய்வது, அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது (உதாரணமாக, எதிர்கொள்வதற்கான செயல் விளக்கம் செய்து காண்பிப்பது) ஆகிய செயல் திட்டங்களை பின்பற்றுவது என அடையாளம் காணப்பட்டது.

இரண்டாவது பணிமனை, டோக்கியோவில் அக்டோபர் 15, 2018-ல் நடைபெற்றது. இந்தப் பணிமனையில் மூன்று முக்கிய விவகாரங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதாவது, 1. பயிற்சி மற்றும் செயல் விளக்கம். 2. வானிலை பாதிப்புகள். இரு நாடுகளிலும் 2018-ம் ஆண்டில் மிகத் தீவிரமான வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டதை கவனத்தில் கொண்டு இது சேர்க்கப்பட்டது, 3. கொள்கை மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில், முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பு.

 

பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்வதில் ஜப்பான் உதவி: மேற்கண்ட விவகாரங்களுக்கும் மேலாக, வனப்பகுதிகளில் இயற்கை பேரிடர் மேலாண்மை மற்றும் மலைப்பகுதி நெடுஞ்சாலைகளை  நீடித்து மேம்படுத்துவதற்காக பேரிடரை எதிர்கொள்ளும் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மூலம், இந்தியாவுக்கு ஜப்பான் உதவி வழங்கும்.


இந்தியா-ஜப்பான் அறிவியல் - தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஒத்துழைப்பு

 

செயல்பாட்டு வழிமுறைகள்

இந்தியா-ஜப்பான் இடையேயான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பானது, இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 1985-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் உருவானது. கடந்த 1993-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இந்தியா-ஜப்பான் அறிவியல் கவுன்சில் மூலம், இருதரப்பு அறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மேலும் ஊக்குவிக்கப்பட்டது. இந்த கவுன்சில் இதுவரை, 19 கூட்டங்களை நடத்தியுள்ளது. 250 கூட்டுத் திட்டங்களுக்கு ஆதரவு அளித்துள்ளது. 1,600 முறை விஞ்ஞானிகள் பரிமாற்றப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 65 கூட்டு கருத்தரங்குகள்/பணிமனைகள், 9 ஆசிய கல்வியாளர்கள் கருத்தரங்குகள், 10 ராமன் – மிசுசிமா சொற்பொழிவுகள் ஆகியவற்றுக்கும் இந்த கவுன்சில் ஏற்பாடு செய்துள்ளது.

2006-ம் ஆண்டில், இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, பரஸ்பரம் பயனளிக்கும் கொள்கை மற்றும் ஜப்பானின் கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூலம், ஜப்பானின் அறிவியல் ஊக்குவிப்பு அமைப்பு மற்றும் ஜப்பான் அறிவியல் தொழில்நுட்ப அமைப்பு ஆகியவற்றின் நிதியுதவியுடன் மதிப்பு அடிப்படையிலான ஒத்துழைப்பை தொடங்கியது. அதுமுதலே, இரு நாடுகளின் அறிவியல் அமைப்புகளுக்கு இடையே உயிர் அறிவியல், மூலக்கூறு அறிவியல், உயர் சக்தி இயற்பியல், தகவல் தொடர்பு தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், சுகாதார நலன், கன அயன் ரேடியோதெரபி, மீத்தேன் ஹைட்ரேட், ரோபோட்டிக், மாற்று எரிசக்தி ஆதாரங்கள், கடல்சார் மற்றும் புவி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளியை அமைதிவழியில் பயன்படுத்துவது ஆகிய துறைகளில் பல்வேறு அமைப்புரீதியான உடன்பாடுகள்/புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அண்மைக்கால நடவடிக்கைகள்

தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் (“இணைய உலகம், செயற்கை புலனறிவு மற்றும் பெரிய தரவுகளை பகுப்பாய்வு செய்தல்) இந்தியா – ஜப்பான் இடையே கூட்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. டோக்கியோ பல்கலைக் கழகம் மற்றும் ஐஐடி மும்பை இடையே அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டு ஆய்வகம் மூலம், இணைய உலகம் மற்றும் மொபைல் பெரிய தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்காக புலனறிவு சார்ந்த இணையதள கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது; டோக்கியோ பல்கலைக் கழகம் மற்றும் ஐஐடி ஹைதராபாத் இடையே, “வானிலை மாற்றத்தின் கீழ், நீடித்த பயிர் உற்பத்திக்கான தரவு அறிவியல் அடிப்படையில், விவசாய ஆதரவு அமைப்பை” ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மற்றும் கியூசூ பல்கலைக் கழகம், ஐஐடி டெல்லி இடையே இணையதள பகுதியில் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.


· இளம் ஆய்வாளர்களுக்காக அறிவியல் தொழில்நுட்பத் துறை – ஜப்பானிய அறிவியல் ஊக்குவிப்பு அமைப்பின் மாணவர் சேர்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


· நவீன மூலக்கூறு ஆய்வுக்காக கேஇடி சுகுபா-வில் இரண்டாவது கட்ட தூண்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை

 

· நீடித்த மேம்பாட்டுக்கான திட்டத்துக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு ஒத்துழைப்பின் கீழ், “தொலைஉணர், இணையம் மற்றும் பிராந்திய போக்குவரத்தின் மிகப்பெரும் தரவுகள் பகுப்பாய்வு அடிப்படையில் பல்முனை போக்குவரத்து அமைப்பின் மூலமாக, வளரும் நாடுகளுக்கான பொலிவுறு நகரங்கள் மேம்பாடு” என்ற திட்டம், 2017-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.


· “அறிவியல் துறையில் ஜப்பான்-ஆசியா இளைஞர் பரிமாற்றத் திட்டத்தின்” கீழ், (சகுரா அறிவியல் திட்டம்), ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2018 வரையான காலத்தில் 655 மாணவர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டனர். அறிவியல் தொழில்நுட்பத் துறையால் தேர்வுசெய்யப்பட்ட, 39 மாணவர்கள், இந்தத் திட்டத்தின் கீழ், ஜப்பானுக்கு மே 2018-ல் பயணம் மேற்கொண்டனர். இவர்கள் அனைவரும் ஊக்குவிப்பு ஸ்காலர்ஷிப் பெற்றவர்கள் ஆவர்.


· ஜப்பானின் சுகுபா பகுதியில் உயிரி தொழில்நுட்பத் துறை – ஏஐஎஸ்டி-யின் நவீன உயிரி மருத்துவத்துக்கான நவீன சர்வதேச ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மருந்து மேம்பாடு மற்றும் நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு சிறப்பு பயிற்சிக் கல்வி மற்றும் ஆய்வுக்காக சர்வதேச செயற்கைக்கோள் கல்வி நிறுவனங்கள் 6 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.


· பெருங்கடல் மற்றும் புவி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின்கீழ், இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் கடல்சார் – புவி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான ஜப்பான் முகமை இடையே நவம்பர் 2016-ல் விரிவான பகுதிகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தானது.

· இந்தியாவில் செப்டம்பர் 2017-ல் நடைபெற்ற மாநாட்டின்போது,  உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் ஏஐஎஸ்டி இடையே, “உருமாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுக்கான உயிரி தொழில்நுட்பத் துறை – ஏஐஎஸ்டி சர்வதேச மையம்” அமைக்க கூட்டு ஆராய்ச்சி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.


· கன அயன் ரேடியோதெரபி துறையில் ஒத்துழைப்புக்காக தேசிய குவாண்டம் மற்றும் ரேடியாலஜிகல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்துக்கும் (QST), கொல்கத்தாவில் உள்ள டாடா மருத்துவ மையத்துக்கும் இடையே செப்டம்பர் 2017-ல்  ஒத்துழைப்பு உடன்படிக்கை கையெழுத்தானது.


· விண்வெளி துறையில் ஒத்துழைப்புக்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO)  மற்றும் ஜப்பான் வான்வெளி ஆய்வு அமைப்பு  (JAXA) இடையே, நவம்பர் 2016-ல் புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தானது. இதனடிப்படையில், ஒத்துழைப்புக்கான பகுதிகள் குறித்து விவாதிப்பதற்காக இஸ்ரோ, JAXA இடையே இரண்டாவது கூட்டுப் பணிக் குழுக் கூட்டம், செப்டம்பர் 2018-ல் நடைபெற்றது.


· நிலவின் துருவ ஆய்வுத் திட்டத்தின் முதல்கட்டத்துக்கு முந்தைய ஆய்வு மற்றும் முதல்கட்ட ஆய்வு தொடர்பான செயல்பாட்டு ஏற்பாடு ஒப்பந்தம், இஸ்ரோ மற்றும் ஜாக்சா இடையே டிசம்பர் 2017-ல் கையெழுத்தானது. செயல்பாட்டுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்த ஆய்வு அறிக்கையை, இஸ்ரோ-வும், ஜாக்சா-வும் மார்ச் 2018-ல் வெற்றிகரமாக இறுதிசெய்தன. 


· செயற்கைக்கோள் வரைபடங்கள் மற்றும் நிலப்பகுதி மதிப்பீடுகளைப் பயன்படுத்தி, மழைப்பொழிவு செயல்பாடுகள், மேம்பாடு மற்றும் சரிபார்த்தல் தொடர்பான ஒத்துழைப்புக்கு செயல்பாட்டு ஏற்பாடு ஒப்பந்தத்தில் இஸ்ரோ-வும், ஜாக்சா-வும் ஜூன் 2018-ல் கையெழுத்திட்டன.


· பெங்களூருவில் நவம்பர் 2017-ல் ஆசிய-பசிபிக் பிராந்திய விண்வெளி முகமை அமைப்பின் 24-வது அமர்வை இந்திய விண்வெளித் துறை, இஸ்ரோ, ஜப்பானின் கல்வி, கலாச்சார, விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் ஜாக்சா ஆகியவை இணைந்து நடத்தின. இதில், கூட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டது.


ஆராய்ச்சி மற்றும் கல்வி ஒத்துழைப்பு

 

· ரிட்சுமெய்கான் (Ritsumeikan) பல்கலைக் கழகத்தின் தகவல் அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனமான ஓம்ரான் கழகம் (OMRON Corporation) மற்றும் ஐஐடி ஹைதராபாத் இடையே, நவம்பர் 2017-ல் பயிற்சித்திட்டத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.


· இந்தியாவைச் சேர்ந்த 8 கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் மற்றும் இணைப்புகளில் ஹிரோஷிமா பல்கலைக் கழகம் கையெழுத்திட்டுள்ளது. அதனை கீழே காணலாம்:


1. ஆராய்ச்சி, கல்வி மற்றும் கல்விப் பரிமாற்றத்தில் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பாக, ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா பல்கலைக் கழகத்துக்கும், இந்தியாவின் பிலானியில் உள்ள csir – மத்திய எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் நிறுவனம் மூலமாக அறிவியல் மற்றும் தொழில் துறை ஆய்வு கவுன்சிலுக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கையின் இணைப்பு, டிசம்பர் 2017-ல் மேற்கொள்ளப்பட்டது.


2. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா பல்கலைக் கழகத்துக்கும், இந்தியாவின் பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்துக்கும் இடையே கல்வி மற்றும் கல்விப் பரிமாற்ற உடன்படிக்கை, கல்வி மற்றும் கல்விப் பரிமாற்ற ஒப்பந்தம், டிசம்பர் 2017-ல் கையெழுத்தானது.


3. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா பல்கலைக் கழகம் மற்றும் மும்பையில் உள்ள தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி மும்பை) இடையே கல்வி மற்றும் கல்விப் பரிமாற்ற ஒப்பந்தம், ஜனவரி 2018-ல் கையெழுத்தானது.

4. ஜப்பானின் ஹிரோஷிமா பல்கலைக் கழகம் மற்றும் இந்தியாவின் ஷிப்பூரில் உள்ள இந்திய பொறியியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்துக்கு இடையே கல்வி மற்றும் கல்விப் பரிமாற்ற ஒப்பந்தம், ஜனவரி 2018-ல் கையெழுத்தானது.


5. ஜப்பானின் ஹிரோஷிமா பல்கலைக் கழகம் மற்றும் சிஎஸ்ஐஆர்- மத்திய இயந்திரவியல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் இடையே மாணவர் பரிமாற்ற உடன்பாடு ஜனவரி 2018-ல் கையெழுத்தானது. 


6. ஜப்பானின் ஹிரோஷிமா பல்கலைக் கழகம் மற்றும் அகமதாபாத் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (ஐஐஎம்ஏ) இடையே மாணவர் பரிமாற்றத்துக்காக ஏப்ரல் 2018-ல் உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.


7. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா பல்கலைக் கழகம் மற்றும் தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் இடையே மே 2018-ல் கல்வி மற்றும் கல்விப் பரிமாற்ற உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது.


8. ஜப்பானின் ஹிரோஷிமா பல்கலைக் கழகம் மற்றும் ஹைதராபாத் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் இடையே, அக்டோபர் 2018-ல் கல்வி மற்றும் கல்விப் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது.


· நகோகா தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் இயந்திரவியல் பொறியியல் துறை, அணு அமைப்பு பாதுகாப்பு பொறியியல் துறை ஆகியவை கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பு தொடர்பான இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. அதாவது, திருப்பதியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயந்திரவியல் பொறியியல் துறையுடன் ஜனவரி 2018-லும், இந்தூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் உலோகவியல் பொறியியல் மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையுடன் ஜூலை 2018-லும் கையெழுத்தானது.


· கல்வி மற்றும் கல்வி ஆராய்ச்சி ஒத்துழைப்புக்காக அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (எய்ம்ஸ்), இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐஐஎஸ்சி), டெல்லி இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியவற்றுடன் மூன்று உள்நோக்க கடிதங்களில் நாகசாகி பல்கலைக் கழகம், ஜூலை 2018-ல் கையெழுத்திட்டது.


· ஜப்பானின் சிசூகா பல்கலைக் கழகத்துக்கும், எஸ்.ஏ.எஸ் நகரில் உள்ள தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் இடையே அக்டோபர் 2018-ல் புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

· கல்விப் பரிமாற்றம் தொடர்பான 4 உடன்படிக்கைகளிலும், மாணவர் பரிமாற்றம் தொடர்பான 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் ஹொக்கைடோ பல்கலைக் கழகம் கையெழுத்திட்டது. அதாவது, மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் ஜனவரி 2018-லும், மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் மார்ச் 2018-லும், ஹைதராபாத் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்துடன் ஏப்ரல் 2018-லும், கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்துடன் அக்டோபர் 2018-லும் உடன்படிக்கை மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


· ரோபோட்டிக்ஸ், மேற்பரப்பு பொறியியல், எரிசக்தி சேமிப்பு (குறிப்பாக சூரியசக்தி முதல் ரசாயனம் வரை), உள்ளிட்ட மெக்கட்ரானிக்ஸ் மற்றும் ஆப்டோஎலெக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக டோக்கியோ பல்கலைக் கழகத்தின் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான ஆராய்ச்சி மையம் மற்றும் இந்தியாவின் சிஎஸ்ஐஆர் இடையே அக்டோபர் 2018-ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

· ஆராய்ச்சி ஒத்துழைப்புக்காக ஹிரோஷிமா பல்கலைக் கழகம் மற்றும் இந்தியாவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் இடையே அக்டோபர் 2018-ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

· இந்தியா-ஜப்பான் இணைந்து சர்வதேச அளவில் தொழில் தொடங்குவதில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக நாகசாகி பல்கலைக் கழகம் மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கல்வி நிறுவனத்துக்கு (IIITDM) இடையே அக்டோபர் 2018-ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.


· ஜப்பானின் டோக்கியோ தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின்  புத்தாக்க ஆராய்ச்சிக்கான கல்வி நிறுவனத்துக்கும், இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சிக்கான கவுன்சிலுக்கும் (சிஎஸ்ஐஆர்) இடையே ஒத்துழைப்புக்காக அக்டோபர் 2018-ல் உடன்படிக்கை கையெழுத்தானது.


· ஜப்பானின் துருவ ஆராய்ச்சிக்கான தேசிய கல்வி நிறுவனத்துக்கும், துருவ ஆராய்ச்சிக்கான தேசிய துருவ மையம் மற்றும் இந்திய பெருங்கடல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் இடையே அக்டோபர் 2018-ல் ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.


எதிர்கால நடவடிக்கைகள்

வானிலை முன்கணிப்பு, பெருங்கடல் முன்கணிப்பு மற்றும் சில விவகாரங்கள் போன்ற துறைகளில் கூட்டு ஆராய்ச்சிகளை உருவாக்க இருதரப்பிலும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு மற்றும் இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இடையேயான தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் இந்தியா-ஜப்பான் கூட்டு ஆராய்ச்சி ஆய்வக திட்ட விவகாரத்தில், ஒத்துழைப்பை மேலும் தொடர சில நடவடிக்கைகளை மேற்கொள்ள இருதரப்பிலும் பரிசீலிக்கப்படுகிறது. நிலவில் துருவ ஆராய்ச்சித் திட்டத்தை இஸ்ரோ-வும், ஜாக்சா-வும் (JAXA) கூட்டாக மேற்கொள்ளும் விவகாரத்தில், 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் விண்கலத்தை அனுப்புவதை இலக்காகக் கொண்டுள்ளன. அதற்கான நடவடிக்கைகளை தொடங்குவதற்கு கூட்டு ஆராய்ச்சியை இருதரப்பும் தொடரும்.

இந்தியாவில் ஜப்பானிய மொழிக் கல்வி ஊக்குவிப்பு

  1. கடந்த சில ஆண்டுகளாக, ஜப்பானிய மொழி தெரிந்த வல்லுநர்களின் தேவை அதிகரித்துவருவதை கணக்கில் கொண்டு, பல்வேறு பிரிவுகளிலும் நெருங்கிய மற்றும் விரிவான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக இந்தியாவில் ஜப்பானிய மொழிக் கல்வியை விரிவுபடுத்த வேண்டியது அவசியம் என்று இந்தியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் ஒப்புக் கொண்டனர்.

2. இந்தியாவுக்கு ஜப்பான் பிரதமர் வந்தபோது, இந்தியாவில் ஜப்பானிய மொழிக் கல்வி துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம், செப்டம்பர் 14, 2017-ல் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒத்துழைப்பு ஒப்பந்தம், அடுத்த 5 ஆண்டுகளில்  ஜப்பானிய மொழி ஆசிரியர்கள் பயிற்சி மையத்தை அமைப்பது, ஆயிரம் ஜப்பானிய மொழி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, புதிதாக 100 ஜப்பானிய மொழிப்பாடப் பிரிவுகளை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்கு வழிவகை செய்கிறது.


3. இந்த நடவடிக்கைகளை, வெளியுறவு அமைச்சகம், இந்தியாவில் உள்ள ஜப்பான் தூதரகம் ஆகியவை கூட்டாக வழிகாட்டி நடத்தும். இதற்கு ஜப்பான் அறக்கட்டளை, மனிதவள மேம்பாட்டுத் துறை, பல்கலைக் கழக மானியக் குழு, ஜேஎன்யூ-ஹெச்ஆர்டிசி, திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம், சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் நல அமைச்சகம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை ஆதரவளிக்கும்.


4. ஒப்பந்த நோக்கத்தின் அடிப்படையில், புதுதில்லியில் ஜூலை 23, 2018-ல் ஜப்பானிய மொழி ஆசிரியர்கள் பயிற்சி மையம், தற்காலிகமாக ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் உள்ள மனிதவள மேம்பாட்டு மையத்தில் உருவாக்கப்பட்டது. இந்த மையத்தை வெளியுறவு இணை அமைச்சர் ஜெனரல் (டாக்டர்) வி.கே.சிங், இந்தியாவில் உள்ள ஜப்பான் தூதர் கென்ஜி ஹிராமட்சூ ஆகியோர் தொடங்கிவைத்தனர். இந்த விழாவில், இந்திய தரப்பில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜெகதீஷ்குமார் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஜப்பான் தரப்பில், ஜப்பான் அறக்கட்டளையின் செயல் துணைத் தலைவர் திரு.டொமோயுகி சகுராய் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


5. ஜப்பான் மொழி தெரிந்த பயற்சியாளர்களுக்கான 360 மணிநேர  முதலாவது பயிற்சி திட்டம், ஜூலை 23, 2018-ல் தொடங்கியது. 3-வது கட்ட ஜப்பானிய மொழி திறன் சோதனையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இந்தப் பயிற்சி, அக்டோபர் 12, 2018-ல் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த பயிற்சி வகுப்பு, தொடக்க நிலை மற்றும் இடைநிலை ஜப்பானிய மொழி கற்றுக் கொள்வோருக்காக அமைந்தது. இதில், பல்வேறுபட்ட கற்பிப்பு முறைகள் மற்றும் வகுப்பறை கற்பிப்பு முறைகள் பின்பற்றப்பட்டன. இந்த பாடப் பிரிவில் ஒட்டுமொத்தமாக 25 பயிற்சியாளர்கள் தேர்ச்சிபெற்றனர். இதனைத் தொடர்ந்து, சாந்திநிகேதனில் செப்டம்பர் 12, 2018 முதல் செப்டம்பர் 16 வரை 5 நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. பெங்களூருவில் அக்டோபர் 26-27, 2018-ல் 2 நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

***



(Release ID: 1551688) Visitor Counter : 1493


Read this release in: English , Marathi